என்னத்தச் சொல்றது போங்கோள்!

நேற்றிரவு கோயம்புதூரிலுள்ள அசைவ உணவகமொன்றுக்கு இரவுணவு  அருந்துவதற்காகச் சென்றிருந்தேன்.வரிசைக்கு ஐந்து மேசைகள் என இரண்டு நெடுக்கு வரிசைகளுடன் நீல் செவ்வக வடிவிலைந்த குளிரூட்டப்பட்ட அறை அது. கடைசி வரிசையில் இடம் பிடித்து அம்ர்ந்தேன்.நீள் செவ்வகத்க்டின் இரண்டு குறும்பக்கங்களிலும் ஏறத்தாழ இரணடரை அடி அகலத் தொலைக்காட்சிப் பெட்டிகள் காதைப் பிளக்கும் இரைச்சலுடன் ஓடிக்கொண்டிருந்தன. எனது மேசைக்கு அருகில் இருந்த மேசையைச் சுற்றி ஒரு குட்ம்ப அம்ர்ந்திருந்தது.7 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவனைக் கவனித்தேன்.உணவகத்தில் தன்னைச் சுற்றி நடப்பவை எவற்றிலுமே துளிக்கூடப் பிரக்ஞையின்றி அரை வாய் பிளந்தநிலையில் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தான்.தொலைக்காட்சி ஏற்படுத்தியிருந்த தலைவலியுடன் , எனக்கான ரொட்டிக்காக நான் காத்துக்கொண்டிருந்தேன். 
 இன்றைய குழைந்தைகள்தாம் தொலைக்காட்சி என்ற மந்திரத்தின் முன் எப்படிக் கட்டுண்டு கிடக்கின்றனர் என்று சிந்த்தித்தவாறே மேசைக்கு வந்து விட்டிருந்த ரொட்டியைப் பிய்த்து பாலாடைக்கட்டி மசாலாவில் புரட்டி வாயிலிட்டு மென்று கொண்டிருந்த படியே , பக்கத்து மேசையைக் கவனித்தேன். அச்சிறுவனின் தந்தையும் அரை வாய் பிளந்த நிலையில் தொலைக்காட்சியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்ததை இப்போதுதான் கவனித்தேன். (மதனின் கார்ட்டூன் ஒன்று நினைவுக்கு வந்தது. அதனை இங்கே பகிர முடியவில்லை).
    பல்கலைக்கழகத் தன்மை பொருந்திய நல்லதொரு குடும்பமென நொந்து கொண்டு ரொட்டியுட போராடத் தொடங்கினேன். உப்பு அதி'கரித்திருத' ரொட்டியின் இரண்டு மூன்று விள்ளல்களை உள்ளே தள்ளியவுடன் மீண்டும் பக்கத்தில் பார்த்தேன். அதே ரொட்டியைத்தான் அவரும் விழுங்கிக் கொண்டிருந்தார்.கழுத்து நிமிர்ந்து கண்கள் தொலைக்காட்சியிலேயே நிலைகுத்தியிருந்தன.ஓர் உணவகத்தில் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் சமைத்துப் பரிமாறப் படும் ஒரே வகையான ரொட்டிகள் எல்லாமே ஒரே பக்குவத்தில் பிசையப்பட்ட மாவினாலானவையாகத்தான் இருக்கம் முடியும்.தொலைக்காட்சியில் தன்னை மறந்துவிட்டிருந்த அவருக்கு ரொட்டியில் ஏற்றப்பட்டிருந்த உப்பின் வீரியமெல்லாம் உறைக்கும் வரத்தைத் தேவன் அருளியிருக்கவில்லை.காய்ந்த சருகையும் காகிதத்தையும் வைத்திருந்தால் கூட மசாலாவில்; தோய்த்துத் தின்றிருப்பார் என நினைக்கிறேன். சற்றுத் திரும்பிப் பார்த்தேன். பரிமாறுபவர் முதல் எல்லா மேசைகளிலுமே இதே காட்சிதான் காணக் கிடைத்தது. கல்லாவில் இருந்தவர் கூடக் காசு வாங்கும் தருணங்கள் தவிர்த்து அங்கேதான் வாய் பிளந்திருந்தார். 
  அப்படி என்னதான் தொலைக்காட்சியில் மாய மந்திர வித்தைகளைக் காட்டுகிறார்கள் என நானும் நிமிர்ந்த் பார்தேன். சவால்களுல், சவடால்களுமாக உளறிக் கொட்டிக்கொண்டு, ஒரே கையால் ஒன்பது அடியட்களை வீழ்த்தும் கதா நாயகனின் திரைக்காவியத்தைத்தான் மனிதகுலம் அப்படிப் பார்த்துக் கொண்டிருந்தது.நம்மவர்களின் ரசனையை நினைத்துப் புல்லரித்து, ஆனந்தக் கண்ணீர் மல்க ரொட்டிக்கும் பாலுக்கும் தொகை செலுத்திவிட்டு வெளியே வந்தேன்.ஜென் கதை ஒன்று நினைவுக்கு வந்தது.மரணப் படுக்கையில் கிடந்த துறவி ஒருவரிடம் என்ன வேண்டும் எனச் சீடர்கள் கேட்க, அவருக்கு மிகப்பிடித்தமாக்ன இனிப்பு ஒன்றைக் கேட்டாராம். சீடர்கள் கொ0ண்டு வந்து கொடுத்ததும்,அதனை வாஞ்சையுடன் எடுத்துத் துளித்துளியாக ரசித்து ருசித்து அனுபவித்துத் தின்றாராம். ஜப்பானில் தேநீர்த்திருவிழ என்ற ஒன்றைக் கேள்விப்பட்டேன் . ஒரு கோப்பைத் தேநீரை எப்படிக் குடிப்பார்கல் எனக் கேட்டு வியப்பிலாழ்ந்தேன். கவிப்பேரரசு வைரமுத்துவின் கொஞ்சம் தேநீர் நிறைய வானம் என்ர கவிதைத் தொகுப்பிலிருக்கும் 'ஆளுக்கொரு கோப்பை ' என்ற கவிதை நினைவுக்கு வருகிறது.வீர வசனங்களும், வெட்டுக் குத்தும் குத்துப்பாட்டும் கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்தாக இல்லாதபோதுதான் சிறிதுணவை வயிற்றுக்கும் நாம் ஈய வேண்டும்!

Comments

  1. நல்ல பகிர்வு...அந்தக் கவிதையை எனக்கு அனுப்ப முடியுமா?

    ReplyDelete
  2. அருமையான பதிவு..
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  3. அருமையான பதிவு. நம் மக்களும் திருந்த மாட்டார்கள் இந்த கேடு கெட்ட இயக்குனர்களும் திருந்த மாட்டார்கள். இன்னும் எத்தனை நாளைக்கு தான் ஒரு ஹீரோ 100 பேரை அடிப்பதை காட்டிக்கிட்டு இருப்பாங்களோ தெரியல.

    ReplyDelete

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

Popular posts from this blog

முப்பது ரூபாய்க்கு முழு சாப்பாடு...கோவையில் மற்றுமொரு உணவுப்புரட்சி

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

வகையுளி