பத்துவகை அழகு
நன்னூலில் பவணந்தி முனிவர் பத்து வகை அழகுகளைப் பட்டியலிட்டுக் காட்டுகிறார் . இன்றைய பதிவுலகக் காலகட்டத்தில் கூட அவை எவ்வளவு அழகாகப் பொருந்திப் போகின்றன என்பதைப் பார்த்தால்வியப்பாக இருக்கும் . பதிவர்கள் அனைவர்க்கும் இது தேவையான செய்தியாகும்.படித்துப் பாருங்கள் நண்பர்களே!
சுருங்கச் சொல்லல், விளங்க வைத்தல்,
நவின்றோர்க்கினிமை, நன்மொழி புணர்த்தல்,
ஓசையுடைமை, ஆழமுடைத்தாதல்,
முறையின்வைப்பே, உலகமலையாமை,
விழுமியது பயத்தல், விளக்குதாரணத்தது
ஆகுதல் நூலிற்கு அழகெனும் பத்தே!
(நன்னூல்-13)
சுருங்கச் சொல்லல்: சொற்கள் வீணாக விரிந்து செல்லாமல் சுருக்கமாகச் சொல்லுதல்(வின்ஸ்டன் சர்ச்சிலிடம் சொற்பொழிவுக்காகத் தேதி கேட்கச் சென்றவர்களிடம் எவ்வளவு நேரம் பேச வேண்டும் என்று கேட்டாராம் சர்ச்சில்!ஒருமணி நேரம் என்றதற்கு , சரி நாளையேவருகிறேன் என்றாராம் . பத்து நிமிடம் என்றவர்களிடத்து ஒருவாரம் அவகாசம் கேட்டாராம்)
விளங்க வைத்தல்: சுருக்கமாகச் சொன்னாலும் விளங்கும் படி இருத்தல் வேண்டும்.
நவின்றோர்க்கினிமை: படிப்பவர்க்கு இன்பத்தைத் தருதல்(நடை ஆங்கிலத்தில் STYLE என்று சொல்வார்கள்.திரு.விக. அறிஞர் அண்ணா, கல்கி போன்றோரை நினைவு கூர்க.. தென்றல் நடை அடுக்கு மொழி, எளிய நடை , அங்கத நடை என...)
நன்மொழி புணர்த்தல்:நல்ல சொற்களைப் பயன் படுத்துதல் (பிறமொழிக்கலப்பின்றி எழுதுதல், சரியான சொல்லைப் பயன்படுத்துதல் , பார்த்தல் நோக்குதல், காணுதல்,என்பவற்றுக்குள் உள்ள நுட்பமான வேறுபாடுகளை அறிந்து பயன் படுத்துதல்முதலியன)
ஓசையுடைமை: கவிதை புனைவோர்க்கு ஓசை முக்கியம்.யாப்பருங்கலக்க்காரிகையை நாம் விளக்கும் போது இதனைத் தெளிவுறத் தெரிந்து கொள்ளலாம்)
ஆழமுடைத்தாதல்:மேலோட்டமான கருத்தாக இல்லாமல் ஆழமான கருத்துக்களைக் கூறுதல் (திருக்குறள் போல)
முறையின் வைப்பே:கோவை மாறாமல் வரிசைக்கிரமமாகச் சொல்லுதல்.
உலகமலையாமை: வழக்கத்துக்கு மாறாமல் சொல்லுதல்
விழுமியது பயத்தல்:சிறந்த பொருளைத் தருதல்
விளக்குதாரணத்தது: விளங்கத்தக்க, பொருத்தமான எடுத்துக்காட்டுகளை ஆங்காங்கே காட்டுதல்.
இவையெல்லாம் நூலுக்கு அழகெனக்கூறும் நன்னுலார். பத்துவகைக் குற்றங்களையும் பட்டியலிட்டுள்ளார். அதனைப் பின்வரும் இடுகையில் காண்போம்.
நான் உங்களைத் தொடரத் துவங்கி விட்டேன். பயனுள்ள பதிவு. நன்றி. உங்களுக்கு அனுப்பிய மின் அஞ்சல்கள் delivery system failure என்று வருகிறது. அவற்றை உங்களுக்கு forward செய்யும்போது அதில் உங்களுக்கு அனுப்பப் பெறாத என் கவிதையும் இருக்கும் . இதுவும் ஒரு வழி. கிடைத்ததா தெரியப் படுத்துங்கள். நன்றி.
ReplyDeletemigavum payanulla pathivu..
ReplyDeleteGood..thodarattum ungal padhivu....
ReplyDelete