கொல்லும் காதல்!
மண்ணுலகில் நான்பிறந்த
மாயமென்ன அறிகிலேன்!
கண்ணைக்கட்டிக் காட்டில்விட்ட
கதியைநானும் அடைந்திட்டேன்!
பெண்ணொருத்தி என்மனத்தைப்
பிடித்துக்கொண்டு விட்டனள்!
கண்ணிரண்டும் பிதுங்குமளவு
கலங்கிநானும் சோர்ந்திட்டேன்!
சோறுதூக்கம் எதுவும்மறந்து
சோர்ந்துநானும் வீழ்ந்திட்டேன்!
கூறுபோட்டுப் பிளந்த இதயம்
கூவித்துடிக்க மாய்ந்திட்டேன்!
கூறுகெட்ட மடையனாகக்
கொஞ்சமாக மாறினேன்!
வேறுஎன்ன பைத்தியந்தான்
வெந்தும்,அனம் நொந்திட்டேன்!
அவள்நினைவைத் தவிரஎதுவும்
அணுவளவும் வரவில்லை!
அவளில்லாமல் என்னுடலில்
அரைநொடியும் உயிரில்லை!
பொழுதுவிடிந்த நிமிடம்முதல்
போய்ப்பார்க்கும் வெறியினில்
அழுதுபுரண்டு என்னிதயம்
அவளைத்தேடி ஓடிடும்!
பாவிமகள் மாயமந்திரம்
படித்தவளோ அறிகிலேன்!
தேவியவள் திருமுகத்தைத்
தேடிநானும் ஓடுகிறேன்!
பெண்ணுமல்லள் கொடியகாதல்
பேய்தானவள் சொல்கிறேன்!
என்னசெய்ய அய்யய்யோ
என்னையேநான் கொல்கிறேன்1
இன்னும் சில நாட்கள்தானே. பொறுத்துக் கொள்ளுங்கள்.
ReplyDeleteஐயா , மின்னஞ்சல் பார்த்தீர்களா?
ReplyDeleteபெண்ணுமல்லள் கொடியகாதல்
ReplyDeleteபேய்தானவள் சொல்கிறேன்!
என்னசெய்ய அய்யய்யோ
என்னையேநான் கொல்கிறேன்1.// அசத்தல்..
//அவள்நினைவைத் தவிரஎதுவும்
ReplyDeleteஅணுவளவும் வரவில்லை!
அவளில்லாமல் என்னுடலில்
அரைநொடியும் உயிரில்லை!//
அருமையான வரிகள். வாழ்த்துக்கள்
அவளின்றி ஓர் அணுவும் அசையாது
ReplyDeleteஅவளின்றி வேறேதையும் அணுகவும் முடியாது.உமது சித்தங்களை சிக்கென்று பிழிந்த கவிதை
கவிதையை விடவும் உங்கள் காதல் சூப்பர்
ReplyDelete