கொடியார் வாரீர்!
தொலைக்காட்சி மற்றும் திரைப்பட்ங்களை விஷுவல் மீடியம் என்று சாதாரணமாகச் சொல்லிவிடுகிறோம். ஆனாலும் இலக்கியத்தில் கிடைக்கும் இன்பமே அலாதிதான். நளவெண்பாவில், நளன் தமயந்தியின் நினைவால் தன் நெஞ்சம் துடிதுடிக்க நெடுமூச்செறிந்து தளர்வுற்றுப் புலம்புவதைக்கேளுங்கள்!
"பூங்கொடிகளே!இளமையான தமயந்தியின் கச்சணிந்த முலைகளைத் தாங்கிப் பிடித்துத் துவளும் இடைக்கு உவமையாகப் பிறந்துள்ளவர்களே! என்னருகே வாருஙக்ள்"
எனக் கைகூப்பிக் கூப்பிடுகிறான்.
"வாரணியும் கொங்கை மடவார் நுடங்கிடைக்குப்
பேருவமை யாகப் பிறந்துடையீர் - வாரீர்
கொடியார் எனச்செங்கை கூப்பினான் நெஞ்சம்
துடியா நெடிதுயிராச் சோர்ந்து"
(நளவெண்பா- 50)
இடைதான் எவ்வளவு மெல்லியது!" நூலவிழும் இடையழகை நூறுமுறை தின்று" என வைரமுத்துவும்,
"அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு
நல்ல படாஅ பறை"
என வள்ளுவரும் கூறுவது காண்க.
இலக்கியம் நயம் தோய்ந்த இடுகைக்கு முதற்கண் வாழ்த்துக்கள்.
ReplyDeleteமலரில் உள்ள தேன் தேனீக்களுக்கத்தானே தெரியும்!
ReplyDeleteதவளைகளுக்கு எப்படி நண்பா தெரியும்!
மனித வாழ்க்கையின் பண்பாட்டுப் பதிவுகள் இலக்கியங்கள் என்பதைத் தங்கள் இடுகைகள் எடுத்துரைக்கின்றன.
தொடர்ந்து தமிழ் மழைபொழிய வாழ்த்துகிறேன்.
அருமை நண்பரே..
ReplyDeleteசுவைமிகுந்த பாடல்
ReplyDelete