ஏன் இதுகள் இப்படி?

கோயம்புத்தூர் நஞ்சுண்டாபுரம் இரயில்வே பாலம் கட்டப்பட்டுக் கொண்டிருப்பதால், இராமநாதபுரத்தில் இருந்து போத்தனூர் வரும் வாகனங்கள் ஒரு 2 கி.மீ. மண்பாதையில் திருப்பி விடப்படுகின்றன.இடையில் ஒரு லெவல் கிராஸிங் இருக்கிறது.கேரள மாநிலத்திலிருந்து வரும் சரக்கு மற்றும் பயணிகள் ரயில்கள் அடிக்கடிக் கடக்கும் பாதை அது.சென்ற வாரத்திலொரு நாள் மாலையில் சரக்கு ரெயில் ஒன்று கடந்து சஎல்வதற்காகக் கேட் மூடப்பட்டிருந்தது.ரெயில் கடந்ததும் கேட் திறக்கப்படுவதற்குள் இரு புறங்களிலும் வாகனங்கள் குண்டக்க மண்டக்க வந்து, ஓர் இருபது நிமிடம் டிராஃபிக் ஜாமாகி பெரிய அதகளமாகி விட்டது.மறுபடியும் ரெயில் வந்தால் கேட்டை மூட முடியாத சூழ்நிலை.வண்டிகள் எந்தப் பக்கமும் நகர முடியவில்லை.இருப்புப் பாதையின் குறுக்காகவே ஏறத்தாழப் பத்துப் பதினைந்து வண்டிகள் நிற்கின்றன.ஒன்றுமே இல்லை.கேட் திறந்ததுமே அவரவர் இடது பக்கமாகச் சென்றிருந்தால் போதுமானது, ஒரு சிறு குழப்பம்  கூட நேர்ந்திருக்காது.ஆனால் இருபுறங்களிலும் வலது பக்கம் ஏறி வர முயன்றதால் இத்தனை குழப்பங்கள், பதற்றம்..."ஸ்பீட்" என்ற ஆங்கிலப் படம் நினைவுக்கு வந்தது.ஏன் நமக்கு இந்த ஒழுங்குமுறைகள் இயல்பாக வரமாட்டேனென்கிறது?

இது மட்டுமன்று,ப்ரிய பட்டியக்லே போடலாம்...
#பேருந்து நிலையத் தரைகளிலெல்லாம் வெற்றிலை, பாக்கு, பான், சூயுங்கம் போன்றவற்ரைத் துப்பித் தரைக்கு டைல்ஸ் போடுவது.
#பேருந்துப் பயணத்தின் போது ஒன்றரையணா தகர டப்பா செல்போனில் நாராசமான C-கிளாஸ் திரைபாடல்களை லவுட்ஸ்பீக்கரில் அலறவிட்டு , ரசித்து ரணகளமாக்குவது...
#நாலுபேர் முன்பாக பட்டு, ரைட்டு, லெப்ட்டு என பட்லர் இங்கிலீஷ் பேசி பந்தா விடுவது
#நான்கு வழிச்சாலைகளில் ஆபத்தான எதிர்த்திசையில் திடீரென வந்து அதிர வைப்பது,....
#பெட்ரூமிலிருந்து பாத்ரூம் செல்வதுபோல கண்ட இடங்களிலும் சாவதானமாக சாலையைக் கடந்து சதிசெய்வது...

#சகலவிதமான கழிவுகளையும்பற்றிக் கவலைப்படாமல் அவற்றின் ஓரத்தில் இருபது லட்சம் வீட்டு லோன் வாங்கி வீடுகட்டிக் கண்ணைப் பறிக்கும் வண்ணங்கள் பூசுவது
#அடுத்தவரின் முகத்துக்கு நேராகப் புகைவிடுவது
#கொஞ்சம் கூடக் கூச்சமின்றி வெட்டவெளியில் மலம் கழிப்பது..
    குஜ்ரோமசோமில் நிகழ்ந்த கோளாறுகளா எனத் தெரியவில்லை, அப்படியே வைத்துக் கொண்டாலும் ஆறாம் அறிவை அடகு வைத்து விட்டோமா நாம்?

Comments

  1. ஆஹா இந்திய நாட்டுப்பற்றாளர்கள் கவனிக்க

    ReplyDelete
  2. //#நாலுபேர் முன்பாக பட்டு, ரைட்டு, லெப்ட்டு என பட்லர் இங்கிலீஷ் பேசி பந்தா விடுவது//

    சரியான சாட்டையடி நண்பரே..

    தாய்மொழியாம் தமிழ் இருக்க பட்லர் இங்கிலீஸ் எதற்கு ?

    நன்றியுடன்
    சம்பத்குமார்.பொ
    http://parentsactivitytamil.blogspot.com

    ReplyDelete
  3. நண்பர்கள் தின வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  4. இதை நீர் சொன்னால் இந்திய குடிமகனின் தனி மனித சுதந்திரத்தை கெடுத்துவிட்டீர் என்று வழக்கு போடப்போகிறார்கள்

    ReplyDelete
  5. என்ன இதுகள்

    ReplyDelete

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

Popular posts from this blog

எண்ணை.... எண்ணெய்...எது சரி ?

நூல் வெளியீடு

ஆனாலும் பாவமந்த அரசுப் பேருந்து நடத்துனர்.