வலிமிகா இடங்கள்- வினைத்தொகை
வலைப்பதிவுலக நண்பர்கள் பிழையின்றித் தமிழில் எழுத இது போன்ற பதிவுகள் உதவக்கூடும் என்ற நம்பிக்கையில் எனக்குத் தெரிந்தவற்றை எழுதுகிறேன். இணையத்தமிழ் இனிமைத் தமிழாக விளங்கட்டும்.
வல்லெழுத்துகளான க,ச,ட,த,ப,ற ஆகியவை எங்கெங்கு மிகும் , எங்கெங்கு மிகா எனத் தெரிந்து கொள்வோம். இப்பதிவில் வினைத்தொகை பற்றிப் பார்ப்போம். வினைத்தொகையில் வல்லினம் மிகாது. வினைத்தொகை என்பது காலம் கரந்த பெயரெச்சம் என நன்னூலார் குறிப்பிடுகிறார்(நூற்பா 364).
எ/கா:சுடுசோறு
ஊறுகாய்
உழுபடை முதலியன. பெயரெச்சம் என்பது பெயரைக்கொண்டு முடியும்
எச்சமாகும். எ..கா: வந்த சிறுவன்
எழுதிய பெண் ...
வினைத்தொகையானது முக்காலத்தையும் காட்டும் பெயரெச்சமாகும். எடுத்துக்காட்டில் காட்டப்பட்ட சுடு சோறு எனப்து சுட்ட சோறு, சுடுகின்ற சோறு, சுடும் சோறு என நிற்கும். அதேபோல, ஊறுகின்ற காய், ஊறியகாய், ஊறும் காய் என்பதறிக.
இத்தகைய வினைத்தொகையில் வல்லினம் மிகாது ,.
சுடுச்சோறு, உழுப்படை என்பவை பிழை. வினைத்தொகையில் வல்லினம் மிகும்போது பொருளே மாறியும் விடும்.
உ-ம்:வளைக்கரம், வளைகரம்
வளைகரம் எனபது வளைந்த கரம், வளைகின்ற கரம், வளையும் கரம் என வினைத்தொகையாகும். ஆனால் வல்லினம் மிகுந்து வளைக்கரம் என்றாகும் போது வளை சூடிய கரம் எனப் பொருளாகும்.
மலர்கண், மலர்க்கண் எனபதுவும் அதேபோலத்தான் என்பதறிக.
இனி இணையத்தமிழ்...., இனியதமிழ்!
நல்ல முயற்சி ! தொடரட்டும் உங்கள் எழுத்து !
ReplyDeleteபாண்டியன்ஜி
படிக்கிறேன். நன்றி. நீங்கள் ஜி மெயில் பார்க்கவில்லையா.?
ReplyDeleteதேவையான் பதிவு
ReplyDelete