வா.. என்னில் வசிக்க!


நீ குளித்தனுப்பிய
நதிநீரைக்
கடலில் கலக்கவிடும்
திட்டத்தின் பெயர்தான்
கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம்!


காற்றில் அலையும்
உனது சேலைத்தலைப்பு
எனக்கான
கவிதைகளைக்
காற்றிலேயே விட்டுச் செல்கிறது!
அதுவரை
காற்றைச் 
சுவாசித்து வாழ்ந்த நான்
இப்போது காற்றை
வாசித்தும் வாழ்கிறேன்!


உன்னைக் காணும்போதெல்லாம்
என் இதயம் குழம்பி விடுகிறது!
அமைதியின் உருவாக
இப்படி
 அழகாக அமர்ந்திருக்கும்
இவள் எப்படி
எனக்குள் மட்டும்
அப்படி ஓர் ஆட்டம் 
போடுகிறாள் என்று!

Comments

  1. “கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம்!“

    இப்படியொரு திட்டத்தை நான் இதுவரைக் கேள்விப்பட்டதே இல்லை!!

    நயம்!!

    ReplyDelete
  2. சேலைத் தலைப்பால்
    காற்றில் காதலி எழுதிய கவிதையை
    வாசிக்கும் ஆற்றல்
    காதலர்களுக்கு மட்டும் தான் உண்டு என்பதை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் நண்பா.

    ReplyDelete
  3. தென்றலும் காற்றுதான் புயலும் காற்றுதான்!!

    காதல் படுத்தும் பாட்டை மிக அழகாகக் காட்சிப்படுத்திவிட்டீர்கள் பிரதாப்.

    ReplyDelete
  4. அசத்தல் கவிதை..
    பாராட்டுகள்..

    ReplyDelete
  5. காதல் மனிதனை என்னவெல்லாம் சிந்திக்க வைக்கிறது. நான் அந்த கால கட்டத்தை தாண்டி யிருந்தாலும் உங்கள் தவிப்புகளை உணர முடிகிறது. என் பழைய இடுகைகள் பெரும்பாலும் அந்த கால கட்டத்தில் எழுதிய கவிதைகள்( ?)வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. என்ன ஒரு அழகான கவிதை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. காற்றில் காதலி எழுதிய கவிதையை
    வாசிக்கும் ஆற்றல்
    காதலர்களுக்கு மட்டும் தான் உண்டு ஆனால் ??????????????????????????????

    ReplyDelete

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

Popular posts from this blog

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

தலைமை ஆசிரியர்- அறிந்து கொள்வோம்-உடம்படுமெய்‌ - புணர்ச்சி

எண்ணை.... எண்ணெய்...எது சரி ?