அதை- அவற்றை
"நல்ல நூல்கள் என்றால் அதை உடனே வாங்கிவிட வேண்டும்"
இது பிழையான சொற்றொடராகும்.நூல்கள் என்பது பன்மையாதலால்,
"நல்ல நூல்கள் என்றால் அவற்றை உடனே வாங்கிவிட வேண்டும்" என்பதே சரியான பயன்பாடாகும்.
"பையில் உள்ளது எல்லாமே அழுகிய பழங்கள்"
இங்கு பழங்கள் என்பது பன்மையாதலால்,
"பையில் உள்ளவை எல்லாமே அழுகிய பழங்கள்" என்று வர வேண்டும்.
#"நூலகத்தில் அறுபதாயிரம் புத்தகங்களுக்கு மேல் இருக்கிறது"
இதுவும் பிழையான சொற்றொடராகும்.இதன் சரியான வடிவம்:
"நூலகத்தில் புத்தகங்கள் அறுபதாயிரத்துக்கும் மேல் இருக்கின்றன" என்பதாகும்.
நாம் நாள்தோறும் இத்தகைய பிழையான சொற்றொடர்கள் பலவற்றைக் கேட்டும், பயன்படுத்தியும் வருகிறோம். சற்றுக் கூர்ந்து கவனித்தால் இவற்றைத் திருத்திக் கொள்ள முடியும். வாழ்க தமிழ்!
வாழ்க தமிழ்!
ReplyDeletegood
ReplyDelete