Posts

Showing posts from August, 2011

முயன்று பாருங்கள், முடியும்!

பாடல் மூலமிங்கொரு வினாவெழுப்பியுள்ளேன். பாவகை மாறாமல் விடையிறுப்பீர் ! என்ன பெயரிட் டெழுதினா ரௌவையார் தன்னூலுக் குநற் றலைப்பாக - நன்றி எனத்தொடங்கும் பாட லிரண்டாவ திங்கே உனக்குத் தெரிந்தா லோது!

கொல்லும் காதல்!

மண்ணுலகில் நான்பிறந்த    மாயமென்ன அறிகிலேன்! கண்ணைக்கட்டிக் காட்டில்விட்ட    கதியைநானும் அடைந்திட்டேன்! பெண்ணொருத்தி என்மனத்தைப்    பிடித்துக்கொண்டு விட்டனள்! கண்ணிரண்டும் பிதுங்குமளவு    கலங்கிநானும் சோர்ந்திட்டேன்! சோறுதூக்கம் எதுவும்மறந்து    சோர்ந்துநானும் வீழ்ந்திட்டேன்! கூறுபோட்டுப் பிளந்த இதயம்    கூவித்துடிக்க மாய்ந்திட்டேன்! கூறுகெட்ட மடையனாகக்    கொஞ்சமாக மாறினேன்! வேறுஎன்ன பைத்தியந்தான்    வெந்தும்,அனம் நொந்திட்டேன்! அவள்நினைவைத் தவிரஎதுவும்    அணுவளவும் வரவில்லை! அவளில்லாமல் என்னுடலில்    அரைநொடியும் உயிரில்லை! பொழுதுவிடிந்த நிமிடம்முதல்    போய்ப்பார்க்கும் வெறியினில் அழுதுபுரண்டு என்னிதயம்    அவளைத்தேடி ஓடிடும்! பாவிமகள் மாயமந்திரம்    படித்தவளோ அறிகிலேன்! தேவியவள் திருமுகத்தைத்     தேடிநானும் ஓடுகிறேன்! பெண்ணுமல்லள் கொடியகாதல்    பேய்தானவள் சொல்கிறேன்! என்னசெய்ய அய்யய்யோ   ...

வா.. என்னில் வசிக்க!

Image
நீ குளித்தனுப்பிய நதிநீரைக் கடலில் கலக்கவிடும் திட்டத்தின் பெயர்தான் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம்! காற்றில் அலையும் உனது சேலைத்தலைப்பு எனக்கான கவிதைகளைக் காற்றிலேயே விட்டுச் செல்கிறது! அதுவரை காற்றைச்  சுவாசித்து வாழ்ந்த நான் இப்போது காற்றை வாசித்தும் வாழ்கிறேன்! உன்னைக் காணும்போதெல்லாம் என் இதயம் குழம்பி விடுகிறது! அமைதியின் உருவாக இப்படி  அழகாக அமர்ந்திருக்கும் இவள் எப்படி எனக்குள் மட்டும் அப்படி ஓர் ஆட்டம்  போடுகிறாள் என்று!

கொடியார் வாரீர்!

தொலைக்காட்சி மற்றும் திரைப்பட்ங்களை விஷுவல் மீடியம் என்று சாதாரணமாகச் சொல்லிவிடுகிறோம். ஆனாலும் இலக்கியத்தில் கிடைக்கும் இன்பமே அலாதிதான். நளவெண்பாவில், நளன் தமயந்தியின் நினைவால் தன் நெஞ்சம் துடிதுடிக்க நெடுமூச்செறிந்து தளர்வுற்றுப் புலம்புவதைக்கேளுங்கள்! "பூங்கொடிகளே!இளமையான தமயந்தியின் கச்சணிந்த முலைகளைத் தாங்கிப் பிடித்துத் துவளும் இடைக்கு உவமையாகப் பிறந்துள்ளவர்களே! என்னருகே வாருஙக்ள்" எனக் கைகூப்பிக் கூப்பிடுகிறான். "வாரணியும் கொங்கை மடவார் நுடங்கிடைக்குப் பேருவமை யாகப் பிறந்துடையீர் - வாரீர் கொடியார் எனச்செங்கை கூப்பினான் நெஞ்சம்  துடியா நெடிதுயிராச் சோர்ந்து" (நளவெண்பா- 50) இடைதான் எவ்வளவு மெல்லியது!" நூலவிழும் இடையழகை நூறுமுறை தின்று" என வைரமுத்துவும்,  "அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு நல்ல படாஅ பறை"  என வள்ளுவரும் கூறுவது காண்க.

இதுநாள் வரை

தமிழுக்குப் பொருத்தமில்லாத, ஆனால் பெருமபாலோர் பயன்படுத்தும் சொற்றொடர்களுள் இதுவும்  ஒன்று .   இந்நாள்வரை அல்லது இன்றுவரை என்பனவற்றுள் ஒன்றைப் பயன்படுத்துவோம்.  இயன்றவரை தமிழின் இனிமை காப்போம். ஆங்கிலப் பயன்பாட்டைத் தமிழுக்கு மாற்றுவதைப் போலத் தமிழைச் சரியாகப் பயன்படுத்துவதும் தலையாய செயலாகும். இணையத் தமிழ் இனி இனிமைத்தமிழ்!

சுற்றிச் சுற்றி வருவேன்

எனக்கான உன்பார்வையில் எனக்காக  எதுவோ வைத்திருக்கிறாய் என்ற கற்பனையில்தான் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது! நீ வரும் வழியில் மலைபோல ஓங்கி உயர்ந்து நிற்கிறது என் காதல்! நீயோ புகையினூடே புகுந்து செல்வதைப்போல அதனை ஊடறுத்துச் செல்கிறாய்! மின்விசிறி சுற்றிச் சுற்றி வந்து அறையைக் குளிரூட்டிக் கொண்டிருந்தது! என் காதலோ  உன்னையே சுற்றிச் சுற்றி வந்து என்னைச்  சூடேற்றிக் கொண்டிருக்கிறது!

என்னத்தச் சொல்றது போங்கோள்!

நேற்றிரவு கோயம்புதூரிலுள்ள அசைவ உணவகமொன்றுக்கு இரவுணவு  அருந்துவதற்காகச் சென்றிருந்தேன்.வரிசைக்கு ஐந்து மேசைகள் என இரண்டு நெடுக்கு வரிசைகளுடன் நீல் செவ்வக வடிவிலைந்த குளிரூட்டப்பட்ட அறை அது. கடைசி வரிசையில் இடம் பிடித்து அம்ர்ந்தேன்.நீள் செவ்வகத்க்டின் இரண்டு குறும்பக்கங்களிலும் ஏறத்தாழ இரணடரை அடி அகலத் தொலைக்காட்சிப் பெட்டிகள் காதைப் பிளக்கும் இரைச்சலுடன் ஓடிக்கொண்டிருந்தன. எனது மேசைக்கு அருகில் இருந்த மேசையைச் சுற்றி ஒரு குட்ம்ப அம்ர்ந்திருந்தது.7 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவனைக் கவனித்தேன்.உணவகத்தில் தன்னைச் சுற்றி நடப்பவை எவற்றிலுமே துளிக்கூடப் பிரக்ஞையின்றி அரை வாய் பிளந்தநிலையில் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தான்.தொலைக்காட்சி ஏற்படுத்தியிருந்த தலைவலியுடன் , எனக்கான ரொட்டிக்காக நான் காத்துக்கொண்டிருந்தேன்.   இன்றைய குழைந்தைகள்தாம் தொலைக்காட்சி என்ற மந்திரத்தின் முன் எப்படிக் கட்டுண்டு கிடக்கின்றனர் என்று சிந்த்தித்தவாறே மேசைக்கு வந்து விட்டிருந்த ரொட்டியைப் பிய்த்து பாலாடைக்கட்டி மசாலாவில் புரட்டி வாயிலிட்டு மென்று கொண்டிருந்த படியே , பக்கத்து மேசையைக...

கவிதை வனைவதன் சாத்தியம்

எழுத்துகள் ஒழுகிக்கொண்டிருக்கின்றன; கவிதை கண்முன்னே உறைந்து உருள்கிறது; வெட்டவெளி விரிந்து கிடக்கிறது; உன் முலையறிந்த விரல்களில் நடுக்கம் பிறக்கிறது; வெண்குதிரைகளில் பறந்து பறந்து சலித்த  அலுப்பில் கன்வுதெளிந்து உறக்கம் பீடிக்க, நடுங்கும் விரல்களால் இனியும் கவிதை வனைவதன்  சாத்தியத்தை அறியத்தான்  மூச்சிரைக்க ஓடுகிறேன்!

வலிமிகா இடங்கள்- வினைத்தொகை

வலைப்பதிவுலக நண்பர்கள் பிழையின்றித் தமிழில் எழுத இது போன்ற பதிவுகள் உதவக்கூடும் என்ற நம்பிக்கையில் எனக்குத் தெரிந்தவற்றை எழுதுகிறேன். இணையத்தமிழ் இனிமைத் தமிழாக விளங்கட்டும்.        வல்லெழுத்துகளான க,ச,ட,த,ப,ற ஆகியவை எங்கெங்கு மிகும் , எங்கெங்கு மிகா எனத் தெரிந்து கொள்வோம். இப்பதிவில் வினைத்தொகை பற்றிப் பார்ப்போம். வினைத்தொகையில் வல்லினம் மிகாது. வினைத்தொகை என்பது காலம் கரந்த பெயரெச்சம் என நன்னூலார் குறிப்பிடுகிறார்(நூற்பா 364). எ/கா:சுடுசோறு ஊறுகாய் உழுபடை முதலியன. பெயரெச்சம் என்பது பெயரைக்கொண்டு முடியும்  எச்சமாகும். எ..கா: வந்த சிறுவன் எழுதிய பெண் ... வினைத்தொகையானது முக்காலத்தையும் காட்டும் பெயரெச்சமாகும். எடுத்துக்காட்டில் காட்டப்பட்ட சுடு சோறு எனப்து சுட்ட சோறு, சுடுகின்ற சோறு, சுடும் சோறு என நிற்கும். அதேபோல, ஊறுகின்ற காய், ஊறியகாய், ஊறும் காய் என்பதறிக. இத்தகைய வினைத்தொகையில் வல்லினம் மிகாது ,. சுடுச்சோறு, உழுப்படை என்பவை பிழை. வினைத்தொகையில் வல்லினம் மிகும்போது பொருளே மாறியும் விடும்.       உ-ம்:வளைக்கரம், வளைகரம் வளைகரம் என...

கருத்துரையில் இணைப்புக் கொடுக்க

பிளாக்கரில் கருத்துரைக்கும் போது பிற தளங்களுக்கு இணைப்புக் கொடுக்க வேண்டுமானால் கீழ்க்கண்ட கோடினைப் பயன்படுத்தலாம். <a href="இணைக்க விரும்பும் தளம்">விரும்பும் பெயர்</a>

பாட்டி வடை சுட்ட கதை!

தமிழின் மிகப் பிரபலமான் , அனைத்து மக்களும் அறிந்த , "பாட்டி வடை சுட்ட கதை" யினை இங்கு வெண்பா வடிவத்தில் தருகிறேன். வெண்பா மீது கொண்ட தீவிரக் காதலால் பார்ப்பதையெல்லாம் வெண்பாவாக எழுதுவது எனக்கு ஒரு நோயாகவே ஆகிவிட்டது. நளவெண்பாவை ஒருமுறை படித்துப் பாருங்கள், வெண்பாவின் போதையை உணர்வீர்கள்! காவியந்தான் பாடுவது கட்டாயம் என்னசொல் சீவியென் மூளையைச் சிந்தித்து - நாவினால் ஓதியே உங்கள் உயிரெடுப்பேன் ஆனாலும் காதிரண்டால் கேட்பீர் கதை தலைமுறைகள் கண்ட மரநிழல் ஒன்றில் தலைநரைத்த பாட்டி தனியே - புலம்பி வடைசுட்டு விற்றுத்தன் வாழ்வைக் கழித்து நடைதளர்ந்தே போனாள் நலிந்து எட்டித் திருடுமந்தக் காக்கைக்குப் பாட்டியும்  பட்ட சிரமம் புரியுமா? - தட்டினில் கொட்டிக் குவித்திருந்த குட்டிவடை மீதொருகண் ஒட்டியே ஊறியது நாக்கு! கிட்டப் பறந்து கிழவி அசருங்கால்  தட்டப் பார்த்தது தருணமக் - கெட்டபுள்ளும் என்னதான் செய்வாள் எழுபது தாண்டியபின் கண்னயர்ந்தாள் பாட்டி களைத்து! பசிவந்திடப் பத்தும் பறந்துபோம் என்பர் பசியினால் காகம் பறந்து - விசையென மொத்தவடைத் தட்டினில் ஒற்றைச் சிறுவடையைக் கொ...

கடவுச்சொல் மேலாண்மை

பாஸ்வேர்டுகள் மறந்துபோகமலிருக்கச் சில எளிய வழிகள்: கடவுச்சொல் எனப்படும் பாஸ்வேர்டுகள் நம் வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்ட்ன.மின்னஞ்சல் முகவரிகள், சமூக வலைத்தளங்கள், காணொளி மற்றும் நிழற்படப் பதிவகங்கள், வங்கிச்சேவைகள், இணைய இதழகள்......... என எங்கும் எதிலும் பாஸ்வேர்டுகள்தாம்.இத்தனை பாஸ்வேர்டுகளை எப்படி நினைவு கொள்வது?  இதோ சில எளிய வழிகள்! #உங்களது பாஸ்வேர்டுகள் அனைத்தையும் ஒரு சிறியநோட்டுப் புத்தகத்தில் குறித்து வைத்துக் கொண்டு, அதனை 4 காப்பிகள் ஜெராக்ஸ் எடுத்து 4 நண்பர்களிடம் கொடுத்து வைக்கலாம். நீங்களும் தொலைத்து, மற்ற மூன்று நண்பர்களும் தொலைத்து விட்டால் கூட நாலாவது நண்பர் உங்களுக்கு உதவக்கூடும். #அனைத்துத் தளங்களூகும் ஒரே கடவுச்சொல்லாக வைத்துக் கொண்டு, அதனை உங்கள் வீட்டு முகப்பில் டிஜிட்டல் பேனராக வைத்துக் கொள்ளலாம் .அடிக்கடிப் பார்வையில் படுவதால் மறந்துபோகாமல் இருக்கும். #எஸ்.எம்.எஸ்., இ-மெயில் அனுப்பும் போது உங்கள் பாஸ்வேர்டினை சிக்னேச்சராகப் போட்டு அனுப்பலாம். மறந்து போகும் பட்சத்தில் யாரிடம் வேண்டுமானாலும் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். #தினமும் 2016 தடவை ஒப்பித்துப் ப...

பத்துவகை அழகு

நன்னூலில் பவணந்தி முனிவர் பத்து வகை அழகுகளைப் பட்டியலிட்டுக் காட்டுகிறார் . இன்றைய பதிவுலகக் காலகட்டத்தில் கூட அவை எவ்வளவு அழகாகப் பொருந்திப் போகின்றன என்பதைப் பார்த்தால்வியப்பாக இருக்கும் . பதிவர்கள் அனைவர்க்கும் இது தேவையான செய்தியாகும்.படித்துப் பாருங்கள் நண்பர்களே! சுருங்கச் சொல்லல், விளங்க வைத்தல், நவின்றோர்க்கினிமை, நன்மொழி புணர்த்தல், ஓசையுடைமை, ஆழமுடைத்தாதல், முறையின்வைப்பே, உலகமலையாமை, விழுமியது பயத்தல், விளக்குதாரணத்தது ஆகுதல் நூலிற்கு அழகெனும் பத்தே!       (நன்னூல்-13) சுருங்கச் சொல்லல்:   சொற்கள் வீணாக விரிந்து செல்லாமல் சுருக்கமாகச் சொல்லுதல்(வின்ஸ்டன் சர்ச்சிலிடம் சொற்பொழிவுக்காகத் தேதி கேட்கச் சென்றவர்களிடம் எவ்வளவு நேரம் பேச வேண்டும் என்று கேட்டாராம் சர்ச்சில்!ஒருமணி நேரம் என்றதற்கு , சரி நாளையேவருகிறேன் என்றாராம் . பத்து நிமிடம் என்றவர்களிடத்து ஒருவாரம் அவகாசம் கேட்டாராம்) விளங்க வைத்தல்: சுருக்கமாகச் சொன்னாலும் விளங்கும் படி இருத்தல் வேண்டும். நவின்றோர்க்கினிமை: படிப்பவர்க்கு இன்பத்தைத் தருதல்(நடை ஆங்கிலத்தில் STYLE  என்று சொல்வார்கள்.திரு...

வலைப்பூவின் ஃபெவிகானை (FAVICON) மாற்ற....

உங்கள் வலைப்பூ திறக்கப்படும் டேபில் தெரியும் குறியீட்டை உங்கள் விருப்பப்படி மாற்றிக்கொள்ளலாம்.எனது வலைப்பூ உங்களது இணைய உலாவியின் டேபில் ஒரு சிறிய சிவப்பு நிறப் பந்துடன் தெரியும். அது போல நீங்களும் எளிதில் மாற்றிக் கொள்ளலாம். #உங்களது ப்ளாக்கர் அக்கவுன்டில் லாக் -இன் (LOG IN)செய்து கொள்ளவும்,  #டிசைன் (design)என்ற பகுதிக்குச் செல்லவும் #பேஜ் எலமன்ட்(page element) என்ற டே ப்(tab)- ஐத் தேர்ந்தெடுக்கவும். #அதன் இடது மேல் மூலையில் ஃபெவி ் கான் எடிட்(Favicon edit) என்ற பகுதியைச் சொடுக்கவும் #இப்பொழுது வேறொரு வின்டோவில் உங்களுக்குத் தேவையான படத்தைத் தேர்வு செய்யவும். #உங்கள் கணினியில் சேமிக்கப்பட்ட படத்தினைத் தேர்வு செய்து சேவ் செய்து வெளியேறவும். மிக எளிதான செயல் முறை என்பதால் பட விளக்கம் இதற்குத் தேவையில்லை என நினைக்கிறேன்  

அழகுச் சுளை

Image
சுவாசித்துச் சுவாசித்துக்  காற்றை அழகாக்குகிறாய்; குளித்துக் குளித்து ஆற்றையும் அழகாக்குகிறாய்! courtesy: http://www.chakpak.com/celebrity/amala-paul/43675 ஐம்புலன்களாலும் அழகை  அனுப்பி வைக்கிறாய்! அதனை ரசிக்கவோ ஐயாயிரம் புலன்கள் வேண்டும் போலிருக்கிறது. http://movies.sulekha.com/stargallery/amala-paul/91.htm மெழுகுச்சிலை போல் அமர்ந்திருந்தாய்! கண்டு  உருகிக் கொண்டிருக்கிறது என்  http://movies.vinkas.in/2011/04/amala-paul-shares-her-love-matter-with-us/ காதல்! இரு விழிகளாலும் உன்னை அள்ளி அள்ளித் தின்றாலும் காதல் பசி  தீரவே மாட்டெனென்கிறது!

ஒரு சாண் வயிறு

1.வீட்டில் பெண்களும், ஓட்டல் மற்றும் விருந்துகளில் ஆண்களும்தான் பெரும்பாலும் சமைப்பதைக் கண்டிருக்கிறேன்.இன்று கோயம்புத்தூரில் ரெயில் நிலையம் அருகில் அக்ஷயா HOMELY மெஸ்ஸில்மதிய உணவு அருந்தினேன்.முழுக்க முழுக்கப் பெண்களே நடத்தும் உணவகம் அது.சமையலர், சப்ளையர், மேசை துடைப்பவர்,முதல் கல்லா வரை எல்லாமே பெண்கள்தாம்.வீட்டுச் சமையல் போல இருந்தது. உறைப்பும் கார்ப்புமான நாவில் நீர் ஊறச் செய்யும் அசைவ உணவுவகைகள்.ஆட்டு   மூளை வறுவல் வெறும் 25 ரூபாய்தான் விலையிட்டிருந்தார்கள்.மதியம் 12 மணி முதல் மாலை 4 மணிவரை மட்டுமே சேவை உண்டு. ஞாயிறு விடுமுறை. மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சினிமா காம்ப்ளக்ஸ், ரெயில் நிலையம், சினிமாப் படக் கம்பெனிகள், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்,, காவல் துறை அலுவலகம், வங்கிகள் எனக் கூட்டம் அலைமோதும் இடம் அது உண்டு முடித்து வெகு நேரமாகியும் அந்தத் திருப்தி இருந்தது.வயிற்றுக்கு எந்த ஒரு நெருடலுமே இல்லை. நன்றாக இருந்தது எனப் பாராட்டி விட்டு வந்தேன் கல்லாவில்.. 2.சென்ற வாரம் திருச்சி சென்றிருந்தேன். சைவ உணவகம் ஒன்றில் மதிய உணவு முடித்து விட்டு நானும் எனது நண்பரும் எழுந்தோம். என்ன காரண...

அதை- அவற்றை

"நல்ல நூல்கள் என்றால் அதை உடனே வாங்கிவிட வேண்டும்" இது பிழையான சொற்றொடராகும்.நூல்கள் என்பது பன்மையாதலால், "நல்ல நூல்கள் என்றால் அவற்றை உடனே வாங்கிவிட வேண்டும்" என்பதே சரியான பயன்பாடாகும். "பையில் உள்ளது எல்லாமே அழுகிய பழங்கள்"  இங்கு பழங்கள் என்பது பன்மையாதலால்,  "பையில் உள்ளவை எல்லாமே அழுகிய பழங்கள்" என்று வர வேண்டும். #"நூலகத்தில் அறுபதாயிரம் புத்தகங்களுக்கு மேல் இருக்கிறது" இதுவும் பிழையான சொற்றொடராகும்.இதன் சரியான வடிவம்: "நூலகத்தில் புத்தகங்கள் அறுபதாயிரத்துக்கும் மேல் இருக்கின்றன"  என்பதாகும். நாம் நாள்தோறும் இத்தகைய பிழையான சொற்றொடர்கள் பலவற்றைக் கேட்டும், பயன்படுத்தியும் வருகிறோம். சற்றுக் கூர்ந்து கவனித்தால் இவற்றைத் திருத்திக் கொள்ள முடியும். வாழ்க தமிழ்!

ஸ்வீட் ட்வீட்ஸ்

Image
சிரங்கு வந்தவன் கையும் செல்போன் எடுத்த்வன் கையும் சும்மா இருக்காது என்பார்கள்.கீபோர்ட் தொட்டவன் கையும் தான், பொழுதுபோகாம தத்துப் பித்துன்னு நாம ட்வீட் பண்ணதப் படிச்சுப் பாருங்க! மட்டமான மனிதர்கள் மனிதர்களையும்,சாதாரண மனிதர்கள் சம்பவங்களையும்,வெற்றியாளர்கள் கருத்துக்களையும் பற்றித் தங்களுக்குள் பேசிக்கொள்ளுகிறார்கள் மழைநீர்க்குழாய் என்ற ஒன்றுமட்டும் கண்டுபிடிக்கப்படாமல் இருந்திருந்தால், கிரைம் நாவல்கள் பல எழுதப்படாமலே போயிருந்திருக்கும். பார்ப்பதை எல்லாம் ட்வீட் செய்கிற பக்குவம் உங்களுக்கு வந்துவிட்டது என்றால்....நிச்சயம் உடனே நீங்கள் மருத்துவரைச் சந்திக்கவேண்டும்! எந்தப்பக்கம்திருகினால் தண்ணீர்வரும் என்பதைக்கண்டுபிடிக்க முடியாதஅளவுக்குவாஷ்பேஸின்குழாய்களைடிசைன் செய்வதற்குத்தான்எவ்வளவுமெனக்கெடுகிறார்கள்? பத்துப் பேர் கூட இல்லாத பஸ் ஸ்டாப்பில் பத்து லட்சம் பேர் தன்னையே பார்ப்பது போன்ற தன்னுணர்வுடன் நடக்கிறீர்கள் என்றால் , நீங்கள் ஒரு பெண்! ப்ரியமான் ஸகாக்களோ, ஸகியோ விடைபெறும்போது TATA சொல்வதுதான் எவ்வளவு திவ்யமாக உள்ளது! FEEL பண்ணிப் பாருங்கள்!! கல்கி இதழில் வெளிவந்த ந...

பார்வை

Image
எல்லாவற்றையும்  அழகாக்கி விடுகிற உன் பார்வை  என்னை மட்டும் பைத்தியமாக்கி விடுகிறது! உன் பார்வை  என்னைத் தின்று கொண்டிருக்கிறது; உன் அழகு  என்னைக் கொன்று கொண்டிருக்கிறது; என் காதலோ  உன் காலடியில் நின்று  உயிர்ப்பிச்சை கேட்டு  நின்று கொண்டிருக்கிறது. புதுக்கவிதைகள்

ஏன் இதுகள் இப்படி?

கோயம்புத்தூர் நஞ்சுண்டாபுரம் இரயில்வே பாலம் கட்டப்பட்டுக் கொண்டிருப்பதால், இராமநாதபுரத்தில் இருந்து போத்தனூர் வரும் வாகனங்கள் ஒரு 2 கி.மீ. மண்பாதையில் திருப்பி விடப்படுகின்றன.இடையில் ஒரு லெவல் கிராஸிங் இருக்கிறது.கேரள மாநிலத்திலிருந்து வரும் சரக்கு மற்றும் பயணிகள் ரயில்கள் அடிக்கடிக் கடக்கும் பாதை அது.சென்ற வாரத்திலொரு நாள் மாலையில் சரக்கு ரெயில் ஒன்று கடந்து சஎல்வதற்காகக் கேட் மூடப்பட்டிருந்தது.ரெயில் கடந்ததும் கேட் திறக்கப்படுவதற்குள் இரு புறங்களிலும் வாகனங்கள் குண்டக்க மண்டக்க வந்து, ஓர் இருபது நிமிடம் டிராஃபிக் ஜாமாகி பெரிய அதகளமாகி விட்டது.மறுபடியும் ரெயில் வந்தால் கேட்டை மூட முடியாத சூழ்நிலை.வண்டிகள் எந்தப் பக்கமும் நகர முடியவில்லை.இருப்புப் பாதையின் குறுக்காகவே ஏறத்தாழப் பத்துப் பதினைந்து வண்டிகள் நிற்கின்றன.ஒன்றுமே இல்லை.கேட் திறந்ததுமே அவரவர் இடது பக்கமாகச் சென்றிருந்தால் போதுமானது, ஒரு சிறு குழப்பம்  கூட நேர்ந்திருக்காது.ஆனால் இருபுறங்களிலும் வலது பக்கம் ஏறி வர முயன்றதால் இத்தனை குழப்பங்கள், பதற்றம்..."ஸ்பீட்" என்ற ஆங்கிலப் படம் நினைவுக்கு வந்தது.ஏன் நமக்கு இந்த ஒழு...

க.சீ.சிவகுமார்-சமகால ஆளுமை

எனது பள்ளிப்பருவத்திலிருந்தே க.சீ.சிவகுமாரின் எழுத்துக்கள் என்னை வசீகரித்து வந்திருக்கின்றன.ஆனந்த விகடனின் மூலமாக அவரது சிறுகதைகள் எனக்கு அறிமுகமாயின.அவருடைய எழுத்துகளில் ஏதோ ஒருவித அன்னியோன்யமும், கிறக்கமும் எனக்கும் புரிபடத் தொடங்கின.சொக்கவைக்கும் நடைக்குச் சொந்தக்காரராகவே அவரை நான் இன்று அறிந்து வைத்திருக்கிறேன்.முன்னாளில் கோயம்புத்தூர் மாவட்டத்திலும், பின்னாளில் ஈரோடு மாவட்டத்திலும், இந்நாளில் திருப்பூர் மாவட்டத்திலும் இடம் பிடித்திருக்கும் கன்னிவாடிதான் அவரது ஊர் என்று அறிந்துகொண்டேன்.தாராபுரம், மூலனூர்ப் பகுதிகளைச் சுற்றியே அவரது கதைக்களம் அமைந்திருக்கும்.மிக நெருக்கமான ஓர் உணர்வு அவரது கதைகளில் மேலுடுவதை உணர்ந்திருக்கிறேன்.நகைச்சுவை இழையோடும் நடையில், சமூகத்தின் எளிய மனிதர்களைப் பேசுகின்றன அவரது கதைகள்.மனித மனத்தின் நுண்ணுனர்வுகளைப் படம் பிடித்துக் காட்டும் வகையில் , வெள்ளந்தியான கிராம மனிதர்களின் இயல்பு வாழ்க்கையும், குடும்பத்தின் அடிப்படை உறுப்பினர்களுக்கிடையிலான சுவாரஸ்யமான தொடர்புகளும் அவரது எழுத்துகளில் வெளிப்படுகின்றன.கதையின் நாயகன் மிக யதார்த்தமாகப் பேசுவதாகவே எல்லாக் கதை...