XEROX என்பதற்குத் தமிழ்ச் சொல் என்ன?


அண்மையில் ஒரு விழாவில் என்னுடன் பணிபுரியும் சகோதரியின் கணவருடன் அறிமுகமாக நேர்ந்தது. கோயம்புத்தூரில் வங்கியொன்றில் பணிபுரியும் அவர் , தமிழில் கொண்டிருக்கும் ஆர்வத்தையும், ஆழமான அறிவையும் கண்டு வியந்து போனேன் . அவருடன் உரையாடிக்கொண்டிருந்த இரண்டு மணி நேரத்தில் நிறையத் தெரிந்து கொள்ள
முடிந்தது.அருவி கொட்டுவதுபோல அவரது வாயிலிருந்து தகவல்கள் கொட்டுகின்றன. மனிதர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம் , மலையாளம், சமஸ்கிருதம் முதலியவற்றிலும் தேர்ச்சி பெற்றிருக்கிறார்

தமிழிலிருந்து பிற மொழிகளுக்குச் சென்று, இன்னுமங்கு வாழ்ந்து வரும் சொற்களைப் பட்டியலிட்டு அவர் பேசியது வியப்பூட்டுவதாக இருந்தது.சங்க இலக்கியம் முதல் சமகால இலக்கியம் வரை விவாதித்த அந்தச் சந்திப்பின் முடிவில் அவர் என்னுடன் பகிர்ந்து ஒரு சிறு தகவல்தான் இந்த இடுகையைப் பதியத் தூண்டியது.
'ஜெராக்ஸ்'என்ற சொல் ஆங்கிலச் சொல்லாகி வெகுநாட்களாகின்றன. அடிப்படையில் அஃது ஒரு BRAND NAME!    இன்று அதனை ஒரு வினைச்சொல்லாகக் கூடப் பயன்படுத்தத் தொடங்கியாகிவிட்டது.அதற்குத் தமிழில் சரியான சொல் என்னவென்றால் 'நகல்'  என்றுதான் பலரும் சொல்வார்கள்.ஆனால் 'நகல்' என்பது தமிழ்ச்சொல் அன்று.

பிரதியெடுத்தல் என்றும் சிலர் சொல்லக்கூடும். பொதுவாக 'பிர' எனத் தொடங்கும் சொற்களெல்லாம் தமிழ்ச்சொற்களாக இரா.சான்று: பிரமாதம், பிரபல்யம், பிரகிருதி, பிரயோகம்........
எனில், 'படியெடுத்தல்' 'படி'என்பவை பொருந்தும் சொற்களாகும். எழுத்தாளர் சுஜாத 'குளோனிங்' என்பதற்கு 'மறூ', 'படி', 'மறுபடி' என்ற பதங்களைப் பரிந்துரைத்திருக்கிறார். ஆனால், நண்பர் சொன்ன தகவல் புதுமையாக இருந்தது. மலையாளத்தில் XEROX என்பதைப் 'பகர்ப்பு' என்கிறார்களாம். பகர்ப்பு என்பது எவ்வளவு அழகான, ஆழமான, சொல்லவே சுகமான, நுட்பமான ,தூய தமிழ்ச்சொல்!தமிழ், காற்றைப் போல எங்கும் விரவியிருக்கிறது என்பதை நினக்கவே இன்பம் பெருகியது!



Comments

  1. நகல், பிரதி என்பவை தமிழ்ச்சொற்கள் என்றுதான் நானும் நினைத்திருந்தேன்.படி, பகர்ப்புஎன்பவற்றை இன்றுதான் அறிந்து கொண்டேன்.நன்றி1

    ReplyDelete
  2. படி=STEPS, படி=LEARN, படி=SALARY, WAGES, படி=ATTACH, படி=SPREAD, படி=OBEY .......இத்துடன் படியே கதி என்று கிடக்காமல் புது வார்த்தை உருவாக்குவோம். XEROX, CLONING NEED ALL NEW TAMIL WORD.

    ReplyDelete
  3. செண்பா said... Monday, May 23, 2011 9:51:00 AM
    படி=STEPS, படி=LEARN, படி=SALARY, WAGES, படி=ATTACH, படி=SPREAD, படி=OBEY .......இத்துடன் படியே கதி என்று கிடக்காமல் புது வார்த்தை உருவாக்குவோம். XEROX, CLONING NEED ALL NEW TAMIL WORD.
    எழுத்தாளர் சுஜாதா அவர்கள் 'படி' என்னும் சொல்லுக்குப் பதினெட்டுப் பொருள்கள் இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார். 'படி' என்னும் சொல்லைத் தொங்குவதற்குப் பதிலாகப் 'பகர்ப்பு' என்பதை முயலுவோம்!

    ReplyDelete
  4. நல்ல பதிவு

    ReplyDelete

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

Popular posts from this blog

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

தலைமை ஆசிரியர்- அறிந்து கொள்வோம்-உடம்படுமெய்‌ - புணர்ச்சி

எண்ணை.... எண்ணெய்...எது சரி ?