நினைவுகள் தொடரும் பிறவி
சில பொழுதுகளில் நான்
என்னிடமிருந்து
விலகிநிற்கிறேன்.
அந்தத் தேவகணங்களைச்
சேமித்து வைக்கும்
ஒழுகாத கோப்பை எனக்கில்லை!
இன்னும் சில பொழுதுகளில்
என்னை மறந்துவிடுகிறேன்.
அந்த அவசரப் பொழுதுகளை
நினைவூட்ட ஒரு விடிவெள்ளி
என்னிடத்தில் இல்லை!
சில பொழுதுகளில் நான் மலர்ந்திருக்கிரேன்.
அந்த அற்புத நொடிகளை
அலங்கரித்து வைக்க என்னிடத்தில்
பூந்தோட்டம் இல்லை.
என் கல்லறையோ
ஏற்கனவே
கனவுகளால் நிரம்பி வழிகிறது!
அகோ.....மீண்டும் ஒரு
பிறவி தாரும்!
முதலிலிருந்து
வாழ்ந்து பார்க்கிறேன்!
உம்மைபோல் வாழ எல்லோருக்கும் ஆசை தான் ஆனால் வழியில்லை இவ்வுலகில்,என்னே கொடுமை!
ReplyDeleteok
ReplyDeleteall the paths lead to grave.but your will may be consider by god!
ReplyDelete