பிழையின்றித் தமிழ் எழுதுவோம்!

"இந்தியாவைக் காப்பது நமது கிராமங்கள்"
இதிலென்ன பிழை இருக்கிறது?
கிராமங்கள் என்று பன்மையில் வந்திருப்பதால்
"இந்தியாவைக் 'காப்பவை' நமது கிராமங்கள்" என்று வந்திருக்க வேண்டும்!எழுவாயும் பயனிலையும் ஒரே எண்ணில் வரவேண்டும்(ஒருமை அல்லது பன்மை).
அதே போல, கிராமங்கள் என்பதற்கு மாற்றாகச் சிற்றூர்கள் என்ற சொல்லைப் பயன்படுத்தினால் இத்தொடர் முழுவதுமாகத் தூய தமிழில் அமையும்.
கிராமம் என்பது வடமொழிச் சொல். பொதுவாக கி, தி, பி என்பவற்றுக்குப் பிறகு ரகர எழுத்துகள் வரும் சொற்களெல்லாம் தமிழ்ச்சொற்களாக இரா!
சில சான்றுகள்!

கிராமம்-க்ராமம்- சிற்றூர்
கிரகம்- க்ரகம் - கோள்
கிரீடம்- க்ரீடம்- முடி
கிரமம்- க்ரமம்- வரிசை, ஒழுங்கு
கிரகணம்- க்ரகணம்- பற்றுதல்
திருப்தி- த்ருப்தி- நிறைவு
பிரியம்- ப்ரியம்- அன்பு
பிரச்சாரம் - ப்ரசார்- பரப்புரை
போன்றவை.
தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துவோம்1தமிழின் இனிமை நுகர்வோம்!!

Comments

  1. இனிய தமிழ் எளிய தமிழ்..!
    வடக்கு வாழ்கிறது;தெற்கு தேய்கிறது என்று சொல்வார்கள்.நம் தென்னக தமிழ் மட்டும் வாழ நீர் எடுத்து வரும் முயற்சிக்கு நன்றி

    ReplyDelete
  2. பயனுள்ள தகவல்! நன்றி!!

    ReplyDelete

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

Popular posts from this blog

முப்பது ரூபாய்க்கு முழு சாப்பாடு...கோவையில் மற்றுமொரு உணவுப்புரட்சி

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

வகையுளி