கூடுவிட்டுப் போன பின்பும் கூடவருமோ பணமும்!
பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் - கூடுவிட்டிங்(கு)
ஆவிதான் போனபின்(பு) ஆரே அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்!
-நல்வழி - 22
திரைகடல் ஓடியும் திரவியம் தேடச் சொன்ன ஔவையார், தேடிவைத்த பணம் எதுவரைக்கும் கூடவரும் என்கிறார்.
அதனால்தான் தேடிவைத்த பணத்தையும் பிறவற்றையும் நாமும் துய்த்துப் பிறர்க்கும் கொடுத்து வாழ வேண்டும் என்கிறார்.
ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவரோ மாநிலத்தீர் - வேண்டா
நமக்கும் அதுவழியே நாம்போம் அளவும்
எமக்கென்னென்(று) இட்(டு) உண்(டு) இரும்.
நல்வழி - 10
வாழ்க்கைத் தத்துவத்தையும் அறவியலையும் ஔவைப்பாட்டி எவ்வளவு அழகாக நான்கு வரிகளின் நறுக்கென்று உரைத்து வைத்திருக்கிறார்!
ஔவையின் எழுத்துகள் அனைத்தும் ஔடதம் அல்ல, அமுதம். ஔடதம், நோய் தீர்க்கும் மருந்து, அமுதமோ , நோய் வராமல் தடுக்கும் அதிசயம்!
நல்ல கருத்துக்களை நல்ல தமிழால் சொன்னதற்கு நன்றி நண்பரே
ReplyDeleteஔவை மொழி உண்மையிலேயே அமுத மொழிதான்
ReplyDeleteஎத்தனை தான் நீர் சொன்னாலும் பணத்தாசைதான் ஒழியுமோ பண்ணாடைகளிடம்
ReplyDelete