பொருள் தெரிந்தால் சொல்லுங்கள்!




1.வழக்கம் மாறுவதன் மறுபக்க்த்தில் தெரியும் சலனத்தின் குறுக்குவெட்டுத் தோற்றம்!  (தலைப்பு....)
எலியும் பூனையும் என்று
சொல்வதுதான் வழக்கம்.
பூனையும் 
நரியும் என்று 
சொல்லிக்கொள்வதின்
சுகத்தை
உணரும் தருணங்களில்
நான் 'டர்' ராகிறேன்!


2.யாமத்தின் பெருநிழல்!
யாமத்தின் ஊடே 
நழுவிச் செல்லும்
தேவகணங்களில்
சிந்தை தொலைத்து
அலைந்து திரிந்து
கனவுகள் துரத்தும்
தூக்கத்தின்
வேர்த்தூவிகளில்
நுனிகலைத்துக் கொண்டிருக்கும்
காமக்கிளை பரப்பிய
கொடுவிரல்களின் நீட்சியைப் 
பின் தொடர்ந்து
செல்லத் 
தொடுபுள்ளியின் மையங்
கண்ட சோர்வில் தூங்கிப் போனேன்!



3.மலருக்கும் இலைக்கும்
இடையே
பனித்துளிகளை
அள்ளிச் சென்றது யாரோ! (இதுதான் தலைப்பு)
நீண்டாடும் கை!



4.அடப் போங்கப்பா! (இதுவே தலைப்பு)
இருளின் பிடியில்
ஊறிய மலரைக்
கொய்து பார்த்த நாள் முதலாய்
என் உறக்கங்களில் 
ஏதோ புதிய 
விரலொன்று 
முளைத்து நிற்கிறது!


கவித.... கொட்டுச்சா..... எழுதித் தள்ளிட்டேன்!  எனக்கே ஒரு எழவும் புரியல! புல்லரிச்சு மண்ணரிச்சுப் புத்தி பேதலிச்சுப் போயிட்டேன் !   நேரமாச்சி....இப்பப் போயிட்டு வாரேன்! மறுபடியும் வருவேன்!இன்னும் நெறையக் கவிதை எழுத வேண்டியிருக்கு!




Comments

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

Popular posts from this blog

எண்ணை.... எண்ணெய்...எது சரி ?

நூல் வெளியீடு

ஆனாலும் பாவமந்த அரசுப் பேருந்து நடத்துனர்.