வருகை புரிந்தாரா? வந்தாரா?


"அமெரிக்க அதிபர் இந்தியாவுக்கு வருகை புரிந்தார்"
"மாவட்ட ஆட்சியர் விழாவுக்கு வருகை தந்தார்"
இத்தொடர்கள் தமிழில்தான் எழுதப் பட்டுள்ளன என்றாலும், இயல்பாக எழுதப்பட்டுள்ளனவா என்றால் , இல்லை என்றுதான் கூறவேண்டும்!
"அமெரிக்க அதிபர் இந்தியாவுக்கு வந்தார்"
"மாவட்ட ஆட்சியர் விழாவுக்கு வந்தார்"
என்பவையே இயல்பான தமிழாம்!
வருகை புரிந்தார் என்பது கழுத்தைச் சுற்றி மூக்கைத் தொடுவது போன்றதாகும்.

'வந்தார்' என்ற வினையை'வருகை' என்று தொழிலாக்கி அதனுடன் 'புரிந்தார்' என்று மற்றொரு வினையைப் போட்டு..... தலை வலிக்கிறது!இது எப்படி இருக்கிறது என்றால்,
"அவர் கூழைக் குடித்தல் செய்தார்"
"அவன் வேகமாக ஓடுதல் புரிந்தான்"
"அவள் ஃப்ரான்ஸ் நாட்டில் பத்தண்டுகளாக வாழ்க்கை புரிந்து வருகிறாள்"
"கடிதம் அனுப்புதல் செய்யப்பட்டது"


என்னும் தொடர்களைப் போன்று இருக்கிறது!
அதே போலத்தான் வருகை புரிந்தாரென்பதுவும்!
குடித்தல் செய்தார்-குடித்தார்
ஓடுதல் புரிந்தான் - ஓடினான்
வாழ்க்கை புரிந்து வருகிறாள் - வாழ்ந்து வருகிறாள்
அனுப்புதல் செய்யப்பட்டது - அனுப்பப்பட்டது
இவை எளிமையானவையும் இனிமையானவையும் சரியானவையும் கூட!
 வாழ்க தமிழ்!!




Comments

  1. நன்றாக இருத்தல் செய்கிறது...

    ReplyDelete
  2. பயனுள்ள தகவல்!

    ReplyDelete

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

Popular posts from this blog

முப்பது ரூபாய்க்கு முழு சாப்பாடு...கோவையில் மற்றுமொரு உணவுப்புரட்சி

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

வகையுளி