பிழையில்லாத் தமிழ்
# எனக்குச் சாப்பிட வேண்டும்
# எனக்கு மருத்துவராக வெண்டும்
மேற்காண் தொடர்களைப் படித்துப் பாருங்கள்!
"நான் சாப்பிட வேண்டும்" அல்லது "எனக்குச் சாப்பிட வேண்டும் போலிருக்கிறது" என்பனவற்றுள் ஒன்றுதான் சரியாக இருக்க முடியும். அதேபோல்,"நான் மருத்துவராக வேண்டும்" என்பதுதான் சரியான தமிழ்.
எனக்குச் சாப்பிட வேண்டும் என்பது மழலை மொழி. அதனை மழலையர் சொல்லும்போது ரசிக்க முடியும்.
முப்பதும் நாற்பதும் முடிந்தவர்கள் சொன்னால் "பிள்ளை இல்லா வீட்டில் கிழவன் துள்ளி விளையாடினானாம்" என்னும் பழமொழி நினைவுக்கு வந்து தொலைக்கிறது.
மற்றொன்று:
'வெண்ணம்மி' நிறுவனங்களின் தலைவர் மும்பை விரைந்தார்'
நாம் அடிக்கடிக் கேள்விப்படும் அல்லது வாசிக்கும் சொல்லாடல் வகைகளுள் இதுவும் ஒன்று.'வெண்ணம்மி நிறுவனங்களின் தலைவர் மும்பை ' என்று பொருள் படவில்லையா?மும்பை என்பது இடத்தின் பெயராக இல்லாமல் ஆளின் பெயராக அல்லவா அர்த்தப்படுகிறது? 'வெண்ணம்மி நிறுவனங்களின் தலைவர் மும்பைக்கு விரைந்தார்' என்பது தெளிவான , முழுமையான பொருளைத்தரும்! வாழ்க தமிழ்!
யோவ். மொதல்ல ஒன்னோட பேர் இனிசல ம.ச.ரஜினி பிரதாப் சிங் தமிழ்ழ மாத்திக்கிடா. அப்பதான் பிழையில்லாத் தமிழ்.
ReplyDeleteஅட நல்லாயிருக்கே ...ஆமா அந்த அனாமி சொன்னது போல் உங்கள் பெயரையும் மாற்றும் படி அகில உலக இணைய தமிழ் வளர்ப்போம் சங்கம் சார்பில் தெரிவித்து கொள்கிறோம் ..
ReplyDelete