'கல்தேசம்' சிறுகதைத் தொகுப்பு-ஒரு சிறிய பார்வை


அண்மையில் வெளியான 'கல்தேசம்' சிறுகதைத் தொகுப்பைப் படித்து முடித்தேன்.இனிய நண்பர், கவிஞர் ஆதலையூர் சூரியகுமாரின் முதல் சிறுகதைத்தொகுப்பு இது.பயணக்கட்டுரைகள், கவிதைகள்,கட்டுரைகள், சிறுகதைகள் எனப் பல தளங்களிலும் இயங்கும் சூரியகுமார் ஆழ்ந்த வாசிப்புடையவர்.கல்கி, குமுதம் உள்ளிட்ட பல இதழ்களில் வெளிவந்த சிறுகதைகளைத் தொகுத்து கல்தேசம் என்ற தலைப்பில் வெளியிட்டிருக்கிறார். 20 கதைகளடங்கிய இத்தொகுதியைப் படித்து முடிக்கும் போது , மானுடத்தின் மீதும், அறவியல் மீதும் ஆசிரியருக்கு இருக்கும் அக்கறையை உணர முடிந்தது.
கல்தேசக் கதைகள் மனித மனங்களைப் பேசுகின்றன.இயற்கைக்காகக் கவலைப்படுகின்றன.

காதலின் உன்னதத்தை உணர்த்துகின்றன.உணர்வுகளை உருவகப் படுத்துகின்றன. நெஞ்சை நெகிழச் செய்கின்றன, மொத்தத்தில் வாசிப்போரை மகிழச் செய்கின்றன.
எளிமையான நடை சூரியகுமாருக்குக் கைவந்திருக்கிறது.கிரமியச் சொல்லாடலகள் கதைக்குச் சுவையூட்டுகின்றன.நுணுக்கமான விவரிப்புகளும் வருணனைகளும் சிறுகதை வடிவத்தைக் கொணருகின்றன.இயல்பான கதைப்போக்கில் ஆங்காங்கு தெறிக்கும் கவித்துவத் தொடர்கள் கதைக்கு மேலும் மெருகூட்டுகின்றன.


'விழுந்து விடாத விழுதுகளில்' உற்சாகம் தெறிக்கும் காதல் பேச்சுகளும் , நேர்மைக்காக எதையும் தியாகம் செய்யும் மனப்பான்மையும் , தர்க்க ரீதியான உரையாடல்களும் கதையைத் தூக்கி நிறுத்துகின்றன.அஜய்க்கும் அனிதாவுக்கும் காதல் மலரும் தருணத்தைக் காட்டியிருந்தால் இன்னும் அழுத்தம் கூடியிருந்திருக்கும்.'புழுதி' கதையில் அடுத்தவர்களின் அந்தரங்கத்தைக் கிளறும் ஆர்வத்தை ரங்கநாதன், தண்டபாணியிடம் கேட்கும் அந்த ஒரு கேள்வியின் மூலம் ஆசிரியர் சமுதாயத்தை எவ்வளவு தூரம் ஊன்றிக் கவனிக்கிறார் என விளங்க வைக்கிறது.

*பாதுகாப்பும் சோதனையுமே பாதிக்கலவரம் போல இருக்கும்!(ஒருநாள் ஒருபொழுது)
*பதற்றத்தில்ருக்கும் போது கொடூரமாகத் தெரியும் மழை(மழைக் காலக் குற்றம்)
*கவிதைக்கும் நமக்கும் அலோ  சொல்ற பந்தம் கூடக் கிடையாதே (மரணத்தின் திறப்பு விழா)
 என்பன போன்ற பல நறுக் வரிகள் தொகுப்பு முழுதும் விரவிக் கிடக்கின்றன.
"ஒரு காதலின் ஜாதகம்" தொகுப்பின் முத்தாய்ப்புக் கதை.


சிறுகதை எழுதுவதும் சூரியகுமாருக்குக் கைவந்திருக்கிறது. தொடர்ந்த வாசிப்பும் எழுத்தும் அவரை மேலும் பல உயரங்களுக்கு இட்டுச் செல்லும் என்ற நம்பிக்கயை இந்நூல் ஏற்படுத்தியிருக்கிறது. தமிழின் சமகால இலக்கிய உலகில் தனது பெயரை ஆழமாகப் பதிக்கத் தொடங்கியிருக்கிறார்.மொத்தமாகச் சொல்ல வேண்டுமெனில், தொகுப்பில் இழப்பும் , ஏதோவொரு எமாற்றமும் , துக்கமும் அநேகமாக எல்லாக் கதைகளிலும் இழையோடிக் கொண்டிருக்கிறது.அதே நேரம், மனித உணர்வுகளும் , சராசரி மனிதச் செயல்பாடுகளும்  அழுத்தமாகக் காட்டப்பட்டிருக்கின்றன. எல்லாவற்றையும் விட அறவுணர்வை வலியுறுத்தும் அடிப்படையில் கதைப்போக்கு இருப்பது கதாசிரியருக்குப் பெரிய சலாம் போட வைக்கிறது!


Comments

  1. அருமையான அழகான விமர்ச்னம்

    ReplyDelete

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

Popular posts from this blog

முப்பது ரூபாய்க்கு முழு சாப்பாடு...கோவையில் மற்றுமொரு உணவுப்புரட்சி

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

வகையுளி