Posts

Showing posts from July, 2012

இன்னும் என்ன செய்வாய்?

Image
எனக்கான  உன் பார்வையில் எனக்காக  எதையோ வைத்திருக்கிறாய் என்ற கற்பனையே எவ்வளவு சுகமாக இருக்கிறது..? நான் நாற்காலியில்  அமர்ந்திருந்தேன்; எதிரில் நீ நின்று கொண்டிருந்தாய்! என் காதல்  உன் தலைக்குப் பின்னால்  ஒளிவட்டம் அமைத்திருந்தது!

தமிழைப் போற்றும் SDM பள்ளி

பள்ளி ,  கல்லூரிகள் கூடத் தமிழைப் புறக்கணிக்கும் பரிதாப நிலை இது "வேக கட்டுபாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளது"  எனபதுதான் கல்வி நிறுவனங்களின் வாகனங்கள் அனைத்திலும் காணப்படும் செய்தியாகும். அண்மையில் கோவை மாவட்டம் தாசநாயக்கன்பாளையத்திலுள்ள   பள்ளி வாகனத்தின் பின்னால் கண்ட சொற்றொடர் வியப்பூட்டும் வகையில் "வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தப்பட்டுள்ளது" என்று தூய தமிழில் என்றிருந்தது.  நான் இதுவரை பார்க்காத ஒரு நிகழ்விது ..  அப்பள்ளியை மனமார வாழ்த்துகிறேன்

தமிழ் வலைப்பதிவர்களுக்காக ஒரு பதிவு

வலிமிகுமிடங்கள் நான்காம் வேற்றுமை விரியில் வல்லினங்களான க்,ச்,த்,ப் ஆகியன மிகுந்து வரும். சான்று: அவனுக்கு + கொடுத்தான் + அவனுக்குக் கொடுத்தான் வேலிக்கு + கம்பி = வேலிக்குக் கம்பி வயலுக்கு + பயிர் = வயலுக்குப் பயிர் வினாச்சொற்களை அடுத்து: எ+பக்கம் = எப்பக்கம் எப்படி + பேசினான் = எப்படிப் பேசினான் எந்த + படம்= எந்தப் படம் சுட்டுச் சொல்: அ+காளை =அக்காளை அந்த + படம் =அந்தப்படம் இ+ சிலை =இச்சிலை இந்த +கல் =இந்தக்கல் தூய தமிழில் பதிவிடுவோம்.                                          (தொடரும்..)

ஆயிரம் பட்டாம் பூச்சிகள்

Image
இரண்டு கண்களையும் மூடியபடி என்ன சிந்தித்தாய்  என்று தெரியவிலை! ஆனால் அந்த ஓவியத்தைத்தான் எனது கண்களுக்குள் ஸ்க்ரீன் சேவராக வைத்திருக்கிறேன். நான் கண்களை மூடும்போதெல்லாம் நீ  விழித்திரையில்  விரிந்து நிற்பதற்காக!! பட்டாம்பூச்சி ஒன்று உன்னைக்கடந்து செல்வதைப் பார்த்துப் படபடத்தன உனது இமைகள்! உனது இமைகள்  படபடப்பதைப்  பார்த்து ஆயிரம் பட்டாம் பூச்சிகள்  என் வயிற்றுக்குள்  படபடக்கின்றன!

தின்று துய்த்துப் பிறருக்கும் கொடு

"ஆண்டாண்டு தோறும் அழுது புலம்பினாலும் மாண்டார் வருவரோ மாநிலத்தீர் - வேண்டா நமக்கும் அதுவழியே நாம்போம் அளவும் எமக்கென்னென் றிட்டுண் டிரும்" நெருநல் உளஒருவன் இன்றில்லை யென்னும் பெருமை உடைத்திவ் வுலகு என்றார் வள்ளுவர்.சாவே நிகழா வீட்டில் கடுகு வாங்கி வரச்சொன்னார் புத்தர். மரணத்தைத் தடுப்பவனும் ஒத்திபோடுபவனும் எங்குண்டு? நம் எல்லாருக்கும் அதுவேதான் வழி. ஆகவே மானிடா நமக்கும் சனியன் சாவு வரும் வரைக்கும் நமக்குண்டானதைத் தின்று துய்த்துப் பிறருக்கும் கொடுத்து வாழப் பழகு என்று கூறுகிறார் ஔவையார்.

தமிழறிவோம்

மிருகம்  -விலங்கு தசம்-பத்து  பட்சி-பறவை, புள் தர்ணா-முற்றுகை விபரம்-விளக்கம் வாபஸ்-திரும்பப் பெறுதல்

"சைட் " ஒரு சமூகப் பார்வை

Image
இளையோர் முதியோர், ஆண் , பெண் என வேறுபாடில்லாமல்"சைட்" என்பது இன்றைய தலைமுறையில் தவிர்க்க முடியாததாகிவிட்டது.பண்டைக்காலத்திலிருந்து நிலவி வரும் பழக்கந்தான் என்றாலும்மாறிவரும் சூழலுக்கேற்ப இதுவும் மாற்றம் பெற்று வருகிறது.மனித மனத்தின் ஆழத்தில் இது  உறைந்து கிடக்கிறது.மூன்றாசைகளுள் ஒன்றாக இதைக் குறிப்பிடுவது முற்றிலும் பொருத்தமானது.வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் நாம் முதலில் செய்வது இதைத்தான்.சிலர் மற் ற வர்களுக்குத் தெரிந்து செய்கிறார்கள், சிலர் தெரியாமல் செய்கிறார்கள். ஆணாயிருந்தாலும் பெண்ணாயிருந்தாலும் இதில் மட்டும் யாருமே சலிப்பது இல்லை. போதுமென்ற மனமும் யாருக்கும் இல்லை. சைட்டில் கிடைக்கும் பேரானந்தத்திற்கு மனிதன் எப்போதுமே அடிமை. பேருந்துப் பயணங் க ள் , நடை பயிற்சி, வெளியூர் என எங்கும் நாம் இதை விடுவதேஇல்லை. பார்த்து மகிழ்ந்த பி ன் தான் நமக்கு மன நிறைவு.சில பொழுதுகளில்" சே.... மாப்ள... இது மட்டும் எனக்குக் கிடைச்சா.. வாழ்க்கையே சொர்க்கந்தாண்டா.. " என் று அங்கலாய்ப்பதும் உண்டு.சைட்டுகளி ல் பலவகை உண்டு.சிறியது, பெரியது, வளைவு , நெளிவுகளுடனான் அமைப்பு. இடை...

உள்ளே வாருங்கள்! இந்தப் பதிவு உங்களுக்குத்தான் !!

சந்திப்பிழை சகித்து வாழும் தலைமுறை தாண்டி, சந்திப்பிழை மறந்து வாழும் தலைமுறையும் தாண்டி, சந்திப்பிழை அறியாமல் வாழும் தலைமுறையும் தாண்டி சந்திப்பிழை இருந்தால் என்ன குடியா முழுகி விடும் என்ற தலைமுறையினர் வாழும் காலகட்டத்தில் இருக்கிறோம். இடுப்பில் இலையுரி கட்டித் திரிந்தால் கூடத்தான் குடிமுழுகி விடாது, ஆனாலும் அழகியலைப் பார்ப்பது போலத்தான்.கூடுதலாக ஒரு ப், க், ச் அல்லது த் என்ற ஒன்றினைச் சேர்த்து எழுதினால் என்ன எழவு துன்பம் நேர்ந்து விடும்...? "வாங்கி சென்றார் " என்பதை " வாங்கி ச் சென்றார்" என்று எழுதித் தொலைப்போம் என்று சொன்னால் இளக்காரமாகப் பார்க்கும்  அரைவேக்காட்டுக் கூட்டம் பெருகிவிட்டது. எங்கெல்லாம் இரண்டு சொற்களுக்கு இடையில் வல்லினம் மிக வேண்டும்  என் று  தெரிந்து கொள்ளுங்கள்! இரண்டாம் வேற்றுமை விரி: '"ஐ" என்ற  உருபு நிலைமொழிலியிலிருக்க வல்லினம் மிகும். ஆட்டை + கட்டினான் =ஆட்டைக்கட்டினான் வீட்டை    + கட்டினான் = வீ ட்டைக்கட்டினான் வாயை + பொத்தினான் = வாயை ப்  பொத்தினான் நாயை+ துரத்தினான் = நாயை த்  துரத்தினான் வேட்டியை + துவைத்த...

சைட் அடி

புகைபிடி புற்றுநோய் வரட்டும்! மதுவைக்குடி மரணம் நெருங்கட்டும் SMS  அனுப்பு பேலன்ஸ் தீரட்டும் சைட் அடி  சுளுக்கு எடுக்கட்டும் எச்சில் துப்பு வழுக்கிவிழட்டும் பாத்ரூம் போ நிம்மதி கிடைக்கட்டும் ஈவ்டீசிங் செய் இடுப்பை ஒடிக்கட்டும் சீரியல்பார் சிந்தை செழிக்கட்டும் வெட்டியாய்ப் பேசு வெற்றி தொலையட்டும் புறங்கூறு புகழ் மறையட்டும் ஊழல் செய் உலகு தூற்றட்டும் வாயைத் திற வாந்தி வரட்டும் மூக்கை நோண்டு        முகம் சுளிக்கட்டும்     காது குடை கதறி அழட்டும்!

அட....!

Image
இத்தனை நாட்களாகத்  துடித்துக் கொண்டிருந்த இதயம்  நீ உள்ளே வந்த பின்பு  துள்ளிக்  குதித்துக் கொண்டிருக்கிறது !

ஏது செய்வீர் தமிழர்காள்?

கோயம்புத்தூர் மாவட்டத்தில் பாதியும் திருப்பூர் மாவட்டத்தில்  பாதியுமாக விரவிக்கிடக்கும் ஊரது.திருப்பூரைப் பொள்ளாச்சி வழியாகக் கேரளாவுடன் இணைக்கும் நெடுஞ்சாலையில் , தென்னைமரங்களும், கோழிப்பண்ணைகளும், விசைத்தறிகளும் சூழ அமைந்திருக்கும் அவ்வூரின் பெயர் பதின்மூன்றரை எழுத்துகளால் ஆனது. காமநாயக்கன்பாளையம் என்பதை எவ்வாறு வாசிப்பீர்கள்?  கமநைக்கன்பலயாம் என்று யாரும் வாசித்தால்  பல்லிலோ நாக்கிலோ  எதுவும் சுளுக்கு என்றுதா னே   நி னை க்கத் தோன்றும்? உலகப்பொதுமொழியாம் ஆங்கிலத்தின் அழகையும் வள‌மையையும் பயன்பாட்டு நன்மைகளையும் உணராமலும் , உணர்த்தாமலும் வலுக்கட்டாயமாக மொழியைத் திணிக்கும் கல்விக்கூடங்களுள் ஒன்றில் ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி வகுப்பொன்றில்  காமநாய்க்கன்பாளையம் என்று ஒலித்ததைத் திருத்திக் கமாநைக்கன்பலயாம் என்று ஸ்டைலாகச் சொல்லிக்கொடுத்த கொடுமையை அண்மையில் கேட்டறிந்தேன்.பெயர்ச்சொற்களை (இடம்,பெயர்....) எம்மொழியிலும்  இயல்பு மாறாமல்தான் ஒலிக்க வேண்டும் என்ற அடிப்படை கூடத் தெரியாததுகளிடம் இன்ரைய கல்வி சிக்கிக் கொண்டுள்ளதே என்று வெதும்புகிறது மனம...

தூய தமிழ்ச்சொற்கள்

சூட்சுமம் - உள்நோக்கம் நிர்மாணம் - கட்டுதல் , எழுப்புதல் , அமைத்தல் கௌரவம் -   பெருமிதம் , உயர்ந்த மாருதம் - காற்று, வளி ரூபம் -    வடிவம் , உருவம் கல்தா - வெளியேற்று, தள்ளு

மின்னித் தீர்க்கிறது

Image
மலர் விரிகிறது      துயிலெழுகிறாய் மணம் பரவுகிறது      முகம் கழுவுகிறாய்? பனி மறைகிறது      து  கில் திருத் து கிறாய் கதிர் எழுகிறது      கண்ணாடி பார்க்கிறாய் குளிர் வழிகிறது      குளித்து முடிக்கிறாய் ஒளி தெறிக்கிறது      ஒப்பனை செய்கிறாய் குயில் இசைக்கிறது - யாருக்கோ       குட்மார்னிங் சொல்கிறாய்! முகில் நகர்கிறது     உடை உடுத்துகிறாய் இலை உதிர்கிறது     நகம் நறுக்குகிறாய்  மரம் அசைகிறது     நடை பயில்கிறாய் தென்றல் தவழ்கிறது     கூந்தல் உலர்த்துகிறாய் மழை பெய்கிறது     நகை புரிகிறாய் இடி இடிக்கிறது     இமை திறக்கிறாய் மின்னித் தீர்க்கிறது     விழி சுழற்றுகிறாய் நிலவு ஒளிர்கிறது      நெற்றி துடைக்கிறாய் மலை தெரிகிறது     பெருமூச்செறிகிறாய் உயிர் துடிக்கிறது    எதிரில் வருகிறாய்

நின்னொடு மூவரானோம்...!

"அவர்களில் மூன்று பேர் நேற்றே வந்தவர்கள்..." மேற்காண் தொடரில்  மூன்று பேர் என்பதினும் மூவர் என்று கூறல் தமிழுக்குப் பொருத்தமானது. அழகானதும் கூட,  முத்தமிழ், நாற்றிசை, ஐம்பெருங்காப்பியங்கள், அறுசுவை, ... என்பன போன்றவற்றைப் பாருங்கள். முத்தமிழ் எனும்போது கிடைக்கும் இன்பம் மூன்று தமிழ் எனும் போது கிடைப்பதில்லை. இருவர் , மூவர் ,நால்வர், ஐவர், அறுவர், எழுவர் , எண்மர், என்பனவற்றைப் பயன்படுத்துவோம்.  யாருக்கும் புரியாமற் போகாது. 

அடப்போங்கப்பா....!

நீண்ட நாட்களுக்குப் பிறகு  நண்பரின் நண்பர் ஒருவரக் கோவையில் சந்திக்க நேரிட்டது.அவரது  தற்பொழுதௌய வசிப்பிடம் எதுவெனக்க் கேட்டேன். "வெல்லூர் " என்றார். கோயம்புத்தூரிலிருந்து மாறுதலாகிச் சென்றவர்திருமணமொன்றில் கலந்தொ கொள்வதற்காகக் கோவை வந்திருக்கிறாராம். ." வெல்லூரில்" தண்ணீரோ , உணவோ, தட்பவெப்பமோ எதுவும் ஒத்துக்க் கொள்ளவில்லை எனப் புலம்ப வேறு செய்தார்.வெள்ளைகாரனுக்கு வேலூர் என்று சொல்ல வரவில்லை., "வெல்லூர்" என்றான்;டேஞ்சூர் என்றான்;டூட்டுகோரின் என்றான்;ட்ரிசி என்றான், ட்ரிவேன்ட்ரம்,கெல்டன்பெட், காலிகட்..... அடப்போங்கப்பா....!

அறுவாய்

Image
விண்மீன்கள் வேண்டுமானால் கலங்கியிருக்கலாம்- மதியையும் முகனையும் அறியாது, நான் ஏன் குழம்புவேன், மாதர் முகத்து அவிர்மதிக்குப் போல மறுவில்லாப்போது!

தூய தமிழ் அறிவோம்

சூரியன் - கதிர்,ஞாயிறு சந்திரன் - திங்கள் , நிலா, மதி ஆகிருதி - உடல் பூஜை - வழிபாடு திவ்யம் - முழுமை, நிறைவு கவி - பா, பாடல், பனுவல், புலவர் நிர்மாணம் - கட்டுதல் பிழையிருப்பின் சுட்டுக.

வந்து விடு!

Image
வலக்கண்ணின் கீ ழோ ரம் ஒளிரும் துளி மச்சத்தை விட வேறென்ன  ஒப்பனைப் பொருட்களை உனக்காக இந்த  விளம்பரக் கம்பெனிகள் தயாரித்துவிட முடியும்? இடைதீண்டும் போதும், ப்ளவுஸின்  கீழ்விளிம்பு  வருடும்போதும், மேல்விளிம்பில் தவழும்போதும், நீண்டும் குறுகியும் அகன்றும் அவ்வப்போது  அளவில் வேறுபட்டு வெட்டுப்பட்டும் என்னை  வதைப்பதில் மட்டும் குறைவதேயில்லை உன்  கூந்தல்!