உலோகத்துக்குச் சரியான தமிழ்ச்சொல்லாக மாழை என்ற அரிய தகவலை நண்பர் பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்தார். கனிமங்களில் உலோகம் , அலோகம் என்று இரு பிரிவுகள் உண்டு. பள்ளிப் பருவத்தில் 'ம்' என்ற எழுத்தில் முடிவன எல்லாம் (கந்தகம் பாஸ்பரம் தவிர..) உலோகம் என்றும், 'ன்' என்ற எழுக்தில் முடிவன எல்லாம் அலோகம் என்றும் சொல்லித்தந்தார்கள். ஆங்கிலத்தில் ....M ,N ( SODIUM, POOTTAASIUM--... METALS.OXYGEN , HYDROGEN -- NONMETALS) உலோகங்கள் பொதுவாக எளிதிற்கடத்தியாகவும், கம்பியாகவும் , தகடாகவும் மாற்றக்கூடிய வகையிலும்,கார ஆக்சைடுகளைத் தரும் வகையிலும், அலோகங்கள் இவற்றினின்று மாறுபட்டும் இருக்கும் . அலோகத்துக்குச் சரியான தமிழ்ச்சொல் வேண்டும். யாராவது சொல்லுங்கள். தூரம் என்பது தமிழ்ச்சொல்லாக இருக்கலாம் என நண்பர் கோவிகண்னன் குறிப்பிட்டிருந்தார். தூர் என்ற தமிழ்ச்சொல் தூரம் என்றாகியிருக்கலாம். என்பது சிந்திக்க வேண்டிய கருத்து. ஆனால் தூர் என்பது தோண்டுவது என்றானால் அதை ஆழம் என்றுதான் சொல்வோம், தூரம் என்றோ தொலைவு என்றோ கூறுவது மரபன்று. அதேபோல். சயனம் என்பது சாய், சாய்தல் என்பவற்றிலிருந்து வந்திரு...