நூல் வெளியீடு
எப்போதும் எல்லாவற்றிலும் உடனிருந்து ஊக்கப்படுத்தும் எல்லாம் வல்ல இறைவனுக்கும் எனது குடும்பத்தினருக்கும் பேரன்பு கலந்த நன்றியுடன் ஆரம்பிக்கிறேன்....! வெளிப்படுதல் என்பது ஒவ்வொருவரிடத்திலும் ஒவ்வொரு விதத்தில் இருக்கும். உணர்வுகள் உச்சகட்டத்தில் எழுத்தாக, இசையாக, ஓவியமாக, சிற்பமாக, நடனமாகப் பல்வேறு பரிமாணங்களில் வெளிப்படும் போது அவை கலையாகப் பரிணமிக்கின்றன. இலக்கற்றுச் சுற்றித் திரிந்ததைப் பயணக்கட்டுரைகளாக இணையத்திலும் இதழ்களிலும் எழுதி வந்ததையும், அவ்வப்போது கவிதையென எழுதி வைத்த சிறு சிறு குறிப்புகளையும் , தமிழென்னும் பெருங்கடலில் யாப்பென்னும் முத்தெடுக்கத் துழாவி ஆக்கிய செய்யுள்களையும் தொகுத்து நூலாக ஆக்கலாம் என்ற எண்ணம் மேலிடக் காரணமாக இருந்தவர்கள் திரு.சபரியும், திரு. ரகுநாதன் அவர்களும். தனது முகநூல் பக்கத்தின் கருத்துரைப் பகுதியில் எப்பொழுது பயணக் கட்டுரைகளைத் தொகுத்து நூலாக வெளியிடப் போகிறீர்கள் எனத் திரு .சபரி அவர்கள் என்னை Tag செய்த போது தான் அந்த ஐடியா உதித்தது .நன்றி திரு .சபரி. இந்த ஐடியாவைச் சொல்லி அணிந்துரை கேட்டது...

அட அருமையாய் இருக்கே...
ReplyDeletethanq boss
ReplyDeleteஆமாம்..ஆமாம்...
ReplyDeleteஅப்படி இறந்தவர்கள் எல்லாம் அனேகமாக சொர்க்கத்திற்கு மேட்டுமே போவார்கள் இல்லையா கவிஞரே...