பத்து வகைக் குற்றங்கள்
நன்னூலார் வகுத்துத்தந்த பத்து வகை அழகு களை முன்னர்ப் பார்த்தோம். அவரே பத்து வகைக் குற்றங்களையும் பட்டியலிட்டுத்தந்துள்ளார். படைப்பாளிகளுக்கும் பதிவர்களுக்கும் இது பயன்படும். ஒன்றைச் சொல்லும்போது எவ்வாறு சொல்லக்கூடாது என்பதற்கு இவையெல்லாம் சான்றாகும்.
"குன்றக் கூறல் மிகைபடக் கூறல்
கூறியது கூறல் மாறுகொளக் கூறல்
வழூஉச்சொல் புணர்த்தல் மயங்க வைத்தல்
வெற்றெனத் தொடுத்தல் மற்றொன்று விரித்தல்
சென்று தேய்ந்திறுதல் நின்று பயன் இன்மை"
குன்றக் கூறல் -சொல்ல வேண்டிய அளவுக்கு இல்லாமல், குறைத்துக் கூறுவது
மிகைபடக் கூறல்-சொல்ல வேண்டிய அளவினைவிடவும் மிகுத்துச் சொல்வது
கூறியது கூறல்- சொன்னதையே திரும்பத்திரும்பச் சொல்லுதல்
மாறுகொளக் கூறல்-முன்னுக்குப் பின் முரணாகக்கூறுதல்
வழூஉச்சொல் புணர்த்தல் -பிழையான சொற்களைப் பயன்படுத்தல்
மயங்க வைத்தல்-குழப்பமான முறையில் கூறுதல்
வெற்றெனத் தொடுத்தல்-தேவையில்லாத அதிகப்படியான சொற்களைப் பயன்படுத்துதல்
மற்றொன்று விரித்தல்-சொல்லவந்ததை விடுத்து வேறொன்றைச் சொல்லுதல்
சென்று தேய்ந்திறுதல் -
செல்லச் செல்லப் பொருள் அடர்த்தி குறைதல்
நின்று பயன் இன்மை-பலசொற்களிருந்தும் பயனில்லாதிருத்தல்

நல்ல பதிவு
ReplyDeleteஇதுக்கு கமென்ட் போடலனா அதுவும் ஒரு குற்றம்
ReplyDeleteஇதுவரை அறியாத குற்றத் தகவல் . பகிர்ந்தமைக்கு நன்றி
ReplyDeleteமனிதன் தன் வாழ்வில் எத்தனையோ குற்றங்களை செய்தாலும் இந்த பத்து குற்றங்களையாவது செய்யாமலிருக்க முயற்சிக்க வேண்டும்.
ReplyDelete