என் நோவு அறியாய்!


ஒருநாள் உணவை ஒழிஎன்றால் ஒழியாய்
இருநாளுக் கேலென்றா லேலாய் - ஒருநாளும்
என்நோ வறியாய் இடும்பைகூ ரென்வயிறே
உன்னோடு வாழ்த லரிது.



இன்று உணவு கிட்டவில்லை,  ஒருநாள் மட்டும் பொறுத்துக்கொள் என்றால் கேட்டுத் தொலையாது.இன்று மிகுதியாக உணவு கிட்டியுள்ளது, இரண்டு நாள் உணவை ஏற்றுக்கொள் என்றாலும் அதனால் முடியாது.உணவைப் பெறுவதற்கு நான் படும் பாட்டை உன்னால்  அறிந்து கொள்ள முடியாது. உன்னோடு சேர்ந்து வாழ்தல் எனக்கு மிகவும் அரிய செயலாக இருக்கிறது.


வாழ்வியல் தத்துவமும், நையாண்டியும், அங்கதமும் பெருகிவழியும் இந்த நேரிசை வெண்பாவில் ஔவைப் பாட்டி யாரைக் குறிப்பிடுகிறார் என்று தெரிகிறதா? ஒருசாண் வயிற்றைத்தான் இவ்வாறு கூறுகிறார். உண்மைதான், எப்பேர்ப்பட்ட பேராசைக்காரனும் போதும் என்று  சொல்லக்கூடிய ஒரே பொருள் உணவுதான்.
சத்திய சோதனையில் காந்தியடிகள் கூறுவார், இவ்வுலகில் உள்ள அனைவருக்கும் போதுமான் அளவு 
 எல்லாமே உள்ளது. ஆனால் தனிப்பட்ட ஒருவனின் பேராசைக்கு அது போதாது என்று.  எவ்வளவு அழகான பாடல் , அழகான கருத்து. ஔவை மொழி அமுத மொழிதான்.


Comments

  1. சத்திய சோதனையில் காந்தியடிகள் கூறுவார், இவ்வுலகில் உள்ள அனைவருக்கும் போதுமான் அளவு
    எல்லாமே உள்ளது. ஆனால் தனிப்பட்ட ஒருவனின் பேராசைக்கு அது போதாது என்று.//

    உண்மைதான் சகோ...

    ReplyDelete
  2. அறியத் தந்தமைக்கு நன்றி..

    அறிந்துகொள்ள வேண்டிய வாழ்க்கைத் தத்துவம்.

    ReplyDelete
  3. இன்றைய சூழலில் பசிப்பிணி மருத்துவர்களைக் காண்பது அரிதாகவுள்ளது.

    குறைந்துவிட்டார்களா?
    மறைந்துவி்ட்டார்களா?

    http://gunathamizh.blogspot.com/2009/11/blog-post_05.html

    ReplyDelete
  4. ஔவைப் பாட்டியும் காந்தியடிகளும் அப்பவே அனுபவத்துல தா சொல்லி இருக்காக தோழா

    ReplyDelete
  5. good post

    ReplyDelete

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

Popular posts from this blog

எண்ணை.... எண்ணெய்...எது சரி ?

நூல் வெளியீடு

ஆனாலும் பாவமந்த அரசுப் பேருந்து நடத்துனர்.