மிதித்துவிட்டாவது போ!
என்னை
இந்தப் பாடுபடுத்துகிறதே,
உயர்த்தி மடித்து
ஒருக்களித்துச் செருகிவைத்த
கொண்டையில்
அப்படி
என்னதான் வைத்திருக்கிறாய்?
நழுவி விரியாதா என்ற
நப்பாசையுடனும்,
பிரிந்து விட்டால்
பின்னி விடலாமே என்ற
பேராசையுடனும் நான்
வெறிபொங்கக் காத்திருக்கிறேன்!
ஒற்றை ரோஜாவுடன்
நீவரும் பாதையில்
காத்திருக்கிறேன்!
உனக்காகவே
உதித்த பூவை
மிதித்துவிட்டாவது போ!
சேலை நெய்யும் போதே
வெட்கத்தையும்
சேர்ந்து நெய்தார்களா
என்று தெரியவில்லை!
பிறகு
சேலை கட்டும் போது மட்டும்
வெட்கம் உனக்கு
எங்கிருந்துதான் வந்து
சேர்ந்து கொள்கிறது?
//
ReplyDeleteஒற்றை ரோஜாவுடன்
நீவரும் பாதையில்
காத்திருக்கிறேன்!
உனக்காகவே
உதித்த பூவை
மிதித்துவிட்டாவது போ!
//
நல்ல வரிகள்
கவிதை நல்லா இருக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteசேலையும் வெட்கமும் பற்றிய கவிதை என்னை மிகவும் கவர்ந்தது வாழ்த்துக்கள்
ReplyDelete