முத்தத்துவம் -இரண்டாம் பகுதி
முத்தத்துவம் என்ற தலைப்பில் எனது சூரல் பம்பிய சிறுகான்
யாறு நூலில் நான் எழுதிய முப்பது வெண்பாக்களை ஐந்தைந்து பாக்களாகப் பதிவேற்றுகிறேன். இது இரண்டாம் ஐந்து பாக்கள்!
பாகிடை ஊறும் பழக்கீற் றுதட்டாளே
போகிறது மெல்லப் பொழுதெலாம் - ஆகவே
புத்தம் புதுப்பூவே போதும் அணைத்தென்னை
முத்த்தத்தால் காதல்தீ மூட்டு!
கள்வடியும் பூவிதழ்க் காரிகை யைக்கைகளில்
அள்ளினேன் பந்துபோல் அப்படியே - துள்ளும்
இதழில் கவிதை எழுதினேன் சொர்க்கக்
கதவும் திறந்தது கண்டு!
மதுவூறும் மல்லிகையோ மன்மதனின் அம்போ
அதுதேவர் தந்த அமுதோ - இதழ்தான்
அடடா அடடா அருந்தி மயங்கிக்
கிடந்தேன் கிறங்கிக் கிளர்ந்து!
பனிமுத்தம் இட்டாள் பளிங்குச் சிலையாள்
இனிப்புத்தேன் சொட்டும் இதழால் - இனியென்
பிணிதீரும் ஏழு பிறப்பிலுமம் முத்தம்
மனத்துயர் போக்கும் மருந்து!
பத்துமுறை மண்ணில் பிறந்தாலும் தேன்முத்தத்
தித்திப்பென் றுஞ்சென்று தீராது - புத்தியில்
நித்தமும் அந்த நினைவேதான் நீதந்த
முத்தத்தில் வாழ்கிறதென் மூச்சு!
(தொடரும்)
பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
ReplyDeleteவாலெயிறு ஊறிய நீர்.
என்ற வள்ளுரின் கவிதை நினைவுக்கு வந்தது நண்பா..
இனிய வரிகள். முத்தத்தின் தித்திப்பு அருமை
ReplyDeleteஇதழில் கவிதை எழுதினேன் சொர்க்கக்
ReplyDeleteகதவும் திறந்தது கண்டு!
super
வெண்பா முத்தம் நன்று
ReplyDeleteமுத்த்தத்தால் காதல்தீ மூட்டு!
ReplyDeletefine