ஒரே ப்ரௌசரில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் கணக்குகளில் நுழைவது எப்படி?


நம்மில் சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் கணக்குகள் வைத்திருக்கலாம். சான்றாக நானே ப்ளாக்கருக்கு ஒன்றும், தனிப்பட்ட பயன்பாட்டுக்கு ஒன்றுமாக இரண்டு கணக்குகள் வைத்திருக்கிறேன். இரண்டையும் ஒரே நேரத்தில் பயன்படுத்த முடியாத நிலையில் சில நேரங்களில் கடுப்பானதும் உண்டு. ஜி மெயில் செட்டிங்ஸை நோண்டிக் கொண்டிருக்கையில் அதற்குத் தீர்வு கண்டுபிடித்தேன். தெரியாதவர்களுக்குப் பயன்படுமே என்று பதிவேற்றுகிறேன்.

படிப்படியாகச் சொல்கிறேன்:
#எதாவது ஒரு ஜிமெயில் கணக்கினுள் நுழைந்து கொள்ளவும்.
#அக்கவுன்ட் செட்டிங்ஸ் (account settings) என்பதனைச் சொடுக்கவும். (மின்னஞ்சல் முகவரியின் மீது கர்சரை வைத்துச் சொடுக்கவும்)
#பர்சனல் செட்டிங்ஸ் (personal settings) என்ற கட்டத்தில் மல்டிபிள் சைன் இன் (multiple sign in)என்ற ஆப்ஷனுக்கு அருகில் உள்ள எடிட் (edit)என்பதச் சொடுக்கவும்.
#அடுத்துத் திரையில் தோன்றும் சன்னலில் On use Multiple Google Accounts in the same web browser  எனபதினுள் நுழைந்து அனைத்து செக் கட்டங்களையும் தேர்ந்தெடுத்து சேமித்துக் கொள்ளவும்.
#இப்பொழுது கணக்கினை லாக் ஆஃப் செய்து விட்டு அடுத்த கணக்கினுள் நுழைந்து இதே போல் செய்து கொள்ளவும்.
#லாக் ஆஃப் செய்து விட்டு முதல் கணக்கினுள் நுழைந்து கொள்ளவும்.
#இப்பொழுது ஸ்விட்ச் அக்கவுண்ட் என்று புதிய ஆப்ஷன் ஒன்று மீனஞ்சல் முகவரியைச் சொடுக்கத் தொன்றியிருப்பதைக் காணலாம்.
#அதனைச் சொடுக்க இன்னொரு கணக்கினுள் நுழைய ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும்.
#அதனைச் சொடுக்க வழக்கமான ஜிமெயில் லாகின் பக்கம் தோன்றும்.


முயன்று பாருங்கள்!

Comments

  1. புதியவர்களுக்குத் தேவையான பகிர்வு தான் நண்பா..

    அருமை..

    ReplyDelete
  2. அன்பு நண்பா..

    தங்கள் பதிவை

    நான் உருவாக்கிய இலக்கியத் திரட்டியில்

    இணைத்துள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்..

    நன்றி.

    (முனைவர்.இரா.குணசீலன்)

    ReplyDelete

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

Popular posts from this blog

முப்பது ரூபாய்க்கு முழு சாப்பாடு...கோவையில் மற்றுமொரு உணவுப்புரட்சி

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

வகையுளி