நான் ஏன் தமிழ் நாளிதழ்கள் படிப்பதில்லை?
எனக்கு ஒன்று மட்டும் புரியவே இல்லை!ஆங்கிலத்தில் பேசும்போதோ, எழுதும் போதோ இலக்கணம் கெட யாரும் பேசுவதுமில்லை, எழுதுவதுமில்லை. அவ்வாறு நிகழ்ந்தாலும் அதனைக் கேட்பவரும் படிப்பவரும் தவறு என உணர்ந்துகொள்கின்றனர். அதனைத் தவறு என ஒப்புக்கொள்ளவும் செய்கின்றனர்.பிழைகளைத் தடுக்கவும் தவிர்க்கவும் இருபக்கங்களிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் தமிழில் எளிய இலக்கணம் கூட மீறப்படும்போது அதனை யாரும் கண்டு கொள்வதில்லை. நாம் தவறாகப் பேசியிருக்கிர்ரோம் அல்லது எழுதியிருக்கிரோம் என்ற சொரணை பேசியவருக்கோ அல்லது எழுதியவருக்கோ ஏற்படுவதே இல்லை.
வாசிப்பவருக்கும் அதனை உணரக்கூடிய திராணி இல்லை எனத் தோன்றுகிறது. சான்றுடன் சொல்ல வெண்டுமானால், நாளிதழ்களை எடுத்துக் கொள்கிறேன். தமிழ் நாளிதழ்களில் வந்த செய்திகளை மேற்கோள் காட்டினால்:
"தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது"
"உள்ளாட்சி தேர்தல்"
"சாப்பிட மறுத்து போராட்டம்"
"தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன"
"உள்ளாட்சித் தேர்தல்"
"சாப்பிட மறுத்துப் போராட்டம்"
என்று வரவேண்டிய சொற்றொடர்கள் அவை!
ஆனால் ஆங்கிலத்தில்
"PRANAB WRITE TO PM", (pranab writes to pm)
என்பது போல எழுதப்பட்டு நான் பார்த்ததே இல்லை.அவ்வாறு எழுதினால் அவ்விதழின் "சர்க்குலேஷன்" ஒரேவாரத்தில் என்னவாகும் என்று அவர்களுக்குத் தெரியும். அவர்களுக்கு அவ்வாறு எழுதவும் வாராது. ஆனால் தமிழின் நிலைமையை நினைத்துப் பார்த்தால் உணமையாகவே பாவமாக இருக்கிறது. பெரும்பாலான் செய்திகளிப் பிழையாகவே எழுதுவதன் காரணங்களைச் சிந்தித்துப் பார்த்தேன்.:
தமிழில்
#எப்படி எழுதினாலும் பொருள் புரிந்துகொள்ள முடியும், அந்த அளவுக்குத் தமிழில் நெகிழும் தன்மையும், வலிமையும் உள்ளது என நினைத்திருகலாம்..
#படிப்பவர்கள் எல்லாம் கோமாளிகள் என்றும் கூமுட்டைகள் என்றும் நினைத்திருக்கலாம்.
#எழுதுபவர்கள் எல்லாரும் எட்டாங்கிளாசைத் தாண்டாதவர்களாக இருக்கலாம்.
#இலக்கண சுத்தமாக எழுதினால் உடம்பில் சொறி , சிரங்கு வந்து விடும் என்பன போன்ற மூடநம்பிக்கைகள் காரணமாக இருக்கலாம்.
#"மேட்டர் புரிஞ்சாப் போதாதா" என்ற மனநிலைக்கு வந்துவிட்ட வாசகர்களுக்கு இதுவே போதும் என நினைத்திருக்கலாம்.
#"எழுதப்பட்டுள்ளது தவறு" எனப் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு வாசகர்களிருக்கிறார்கள் என நம்பியிருக்கலாம்.
வேறு காரணங்களாகக் கூட இருக்கலாம். என் சிற்றறிவுக்கு எட்டியவை இவைதாம்.
நாம் அவர்களை வெண்பாவும் மருட்பாவும் பாடச் சொல்லவில்லை.
"எடுத்து தந்தான் " என்பதை
"எடுத்துத் தந்தான் " என்றும்
"சரக்கு கப்பல்கள் வந்து சேர்ந்தது " என்பதை
"சரக்குக் கப்பல்கள் வந்து சேர்ந்தன " என்றும் எழுதினால் போதும் என்றுதான் சொல்ல வருகிறோம்.
நாளிதழ்கள் பல்லாயிரம் மக்களைச்சென்று சேர்கின்றன.நல்ல தமிழை விதைப்பதில் நாளிதழகளுக்கும் பெரும்பங்கு இருக்கிறது.நாளிதழில் இருந்துதான் எனது வாசிப்புப்பழக்கம் 5 வயதில் தொடங்கி இன்றி விரிவடைந்துள்ளது.நாளிதழ் ஒன்றின் நிறுவனர் ஒருவரிடம் ஏன் உங்கள் இதழில் இவ்வளவு சந்திப்பிழைகள் இடம் பெறுகின்றன எனக் கேட்டார்களாம். அதற்கு அவர் ,"எங்களது செய்திகள் எளிய மக்களையும் சென்று சேரவேண்டும் என்பதுதான் நோக்கம், இலக்கணம் கற்பிப்பதல்ல" என்றாராம்.
எளிய மக்கள் இலக்கணம் வேண்டாம் என்றோ, எளிய தமிழை இனிமையாக இலக்கண சுத்தமாக இருந்தால் படிக்கமாட்டோம் என்றோ எப்பொழுது சொன்னார்களோ தெரியவில்லை.ஒருகட்டத்தில் வெறுத்துப்போய்த்தான் இன்று ஆங்கில இதழ்களை மட்டும் வாசித்து வருகிறேன். TIMES OF INDIA, THE HINDU, DECCAN CHRONICLE, THE NEW INDIAN EXPRESS ஆகிய நான்கு ஆங்கில நாளிதழகள் கோயம்புத்தூரில் அச்சாகின்றன.பெரும்பாலும் நான்கையும் வாங்கி ஏதேனும் ஒன்றை ஆழமாகவும், மற்றவற்றை மேலோட்டமாக்வும் படிக்கிறேன்.இது ரொம்ப ஓவராக இல்லையா என்று ஒரு சிலதுகள் கேட்கத்தான் செய்கின்றன. உலக நடப்புகளை அறிவது முக்கியமில்லையா எனக் கேட்கின்றனர்.
ஆங்கில நாளிதழகள் மூலாமாக அறிந்துகொண்டால் போதும் என்று சொல்லிவிட்டேன்.. தமிழ்தான் எமது உலகம். வேறு உலகத்தைப் பற்றித் தரங்கெட்ட தமிழில் தெரிந்துகொள்ல வேண்டியதில்லை. மயிர்நீப்பின் உயிர்வாழாக் கவரிமான் இனமிது.
true
ReplyDeleteவாசிப்பவருக்கும் அதனை உணரக்கூடிய திராணி இல்லை..
ReplyDeleteநல்லாத்தான் கேட்டீங்க நண்பா..
உண்மைதான்..
இதனால் தான் நானும் நாளிதழ்கள் படிப்பதில்லை நண்பா..
ReplyDeleteஒருமை, பன்மை, ஒற்று, இலக்கண விதி மீறல்,
பிறமொழிக் கலப்பு..
என நாளிதழ் வார, மாத, இதழ்கள் தான் இப்படியென்றால்....
வானொலி, தொலைக்காட்சிகள் அதற்கு மேல் போய்க்கொண்டிருக்கி்ன்றன நண்பா..
இவற்றோடு ஒப்பிட்டு நோக்கும்போது இணைய வலையுலகம் பரவாயில்லை என்றே தோன்றுகிறது..
அன்பு நண்பரே..
ReplyDeleteஇன்று தமிழ்க்காற்று இலக்கியத் திரட்டியில்..
அறிவெனப்படுவது யாது?
பதிலளிக்கத் தங்களை அன்புடன் அழைக்கிறேன்
http://thamizhkkaatru.blogspot.com/2011/09/blog-post_29.htm
உறுதியாகப் படிப்பேன், நன்றி நண்பரே!
ReplyDeleteI agree with you in addition I wish to share the following based on my experiences.
ReplyDelete1. Globally people are not showing interest in studying languages especially in India (and other Asian countries). The English learning is an exception because it is considered as a business communication skill.
2. Let me take myself as an example, I did not get a chance to learn from an excellent Tamil teacher (even though I studied in Tamil medium). Most of my Tamil teachers were OK and a few of them were good. Similarly, only a few of my English teachers were good because of that I did not know to write well in both English and Tamil. My Tamil writing is not based on my grammar knowledge but it is based on my reading habit (text books, news papers and magazines). Therefore, I agree with your post. I have to mention the role of Dinamani in shaping me. During my high school days, the supplements of Dinamani like Tamil Mani and Dinamani Kadhir were great magazines. Today, the reason for my little successes at work is due to Tamil Mani. Definitely, there is no doubt about it because of that till today I spend at least Ten minutes to read Dinamani web-site. Do you know what happened to Tamil Mani? I believe it is still coming but the content are not as same as old days. What is the reason? Are there no people to write or read them?
3. In the corporate world, you cannot survive without knowing to write clearly in English after certain level even if you are a technical guy. It forces you to learn basic English grammar well.
4. In order to improve peoples' Tamil knowledge, the Government and business establishments (including Media) should take action. For example, whenever I visit Tamilnadu I noticed "Makkal Tholikattchi" broadcasts different kind of programs. I listened (11 years ago) similar programs in Singapore's Oli radio. However, these are not enough, they should reward and encourage people with good Tamil grammar knowledge.
5. OK, OK...OK I hear your voice...these are not going to happen (neither Government nor businesses will do that). So what is the solution. I believe people like you spread the words like if you learn Tamil grammar then God will bless you with good luck. I am not kidding...I cannot think of any other ideas.