முனைவர் ஆலந்தூர் மோகனரங்கன் - ஒரு சமகால ஆளுமை
சென்ற வாரத்தில் தமிழின் முதுபெரும் கவிஞரும், தமிழாய்ந்த புலவருமான முனைவர் ஆலந்தூர் . திரு . மோகனரங்கன் அவர்கள் எனக்கு அவருடைய நூல்களில் நான்கை அன்பளிப்பாக அனுப்பி வைத்திருந்தார்.அவற்றுள் வண்ணச்சரபம் தண்டபாணி அடிகளாரைப் பற்றிய சிறப்பாய்வு நூலான தமிழ்க்கவிதைகளில் சந்த அமைப்பு என்ற நூலைக் கடந்த ஆண்டு கோயம்புத்தூரில் நடந்த செம்மொழி மாநாட்டுப் புத்தகக் கண்காட்சியில் வாங்கியிருந்தேன். ஆழமான ஆய்வு நூலது. அவரது "பிறர் வாழப் பிறந்தவர்கள்" என்றநூலை இன்று படித்து முடித்தேன்.
படிக்கப்படிக்க இனிக்கும் பாக்கள் நிரம்பிய அந்நூலில் மரபானது அவருக்கு எவ்வளவு இயல்பாக வாய்த்திருக்கிறது என்பதை உணர முடிந்தது.தங்குதடையின்றிப் பாயும் அருவிபோலச் சொற்கள் வந்து விழுந்திருக்கின்றன.. என்னைப் போன்ற மரபு ஆர்வலர்களுக்கு இந்நூல் ஓர் உந்துதலாகவும், வழிகாடியாகவும் இருக்கும். நான் சுவைத்து மகிழ்ந்த பாக்களை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
காசும் பிறப்புமாய் முடிந்த குரள் வெண்பாக்களாலான "திருவள்ளுவர் ஒரு பூந்தமிழ்த்தோட்டம்" என்ற முதற்பாடல் வெகு அருமை.
"பொய்யைப் பிளந்து" என்ற சொற்பயன்பாடு பாரதியாரை நினைவுக்குக் கொண்டு வந்து நிறுத்துகிறது.இப்பாக்களைப் படித்ததும் திருவள்ளுவமாலை படித்த நிறைவு கிட்டியது.வெறுமனே மனப்பாடம் செய்தால் போதாது என்று விருத்தத்தால் விளக்கிய பாங்கு அழகு.
எனது அதிவிருப்பக் கவிஞர் பாரதியைப் பற்றி எழிதிய நேரிசை வெண்பாக்களை மிகவும் ரசித்தேன். "அச்சத்தை எச்சரித்தான் ஆற்றலை உச்சரித்தான்" என்ற வரிகல் இனிமையும் வலிமையுமானவை. அதே பாவகையில் பாரதிக்குத் தாசனையும் பாடுய பாங்கு படிக்கப் பரவசமாய் இருந்தது.
"பண்பின் துணை காந்தியடிகள்" என்ர தலைப்பில் எழிதிய குறள்வெண்செந்துறையில் அண்ணலின் அமைதி நெறியையும், அன்பு நெறியையும் உணர்த்தியவிதம் அருமை.
"சின்னப்பா செய்தா யப்பா
சிறுபாப்பா சிரித்த தப்பா
என்ன்பப்பா அந்த விந்தை
எழுந்துநீ சொல்லு வாயா?"
என்று அழ.வள்ளியப்பாவை வினவியது தேனாய் இனிக்கிறது.
மழலைமொழி மாறாத வயதிலேயே அழ.வள்ளியப்பாவை அறிந்து வளர்ந்த தமிழ்ச் சமிதாயம் அல்லவா இது? தமிழின் இனிமையையும் அருமையையும் அறியாப் பருவத்திலேயே அறியச் செய்தவர் அழ. வள்ளியப்பா.
அண்ணா., கலைஞர், பெரியார், எம்.ஜி.ஆர்., என எத்தனையோ செம்மல்கலை எழிலுடன் பாடியிருக்கிறார்.வைரமுத்துவின் வார்த்தைகளில் சொல்வதானால், நுரைத்துக் கொண்டோடும் விருத்தங்களும் சுழித்துக் கொண்டோடும் வெண்பாக்களும் நிரம்பித் ததும்பும் இந்நூல் மிக அருமையானது.
மரபுக்கவிதையின் விந்தையை விரும்புபவர்கள் இந்நூலை மிகவும் ரசிப்பார்கள்!
ஒரு நல்லப் புத்தகத்தை படித்ததை பகிந்தமைக்கு நன்றி..
ReplyDeletearumai
ReplyDelete