சமன்பாட்டின் உண்மைத்தன்மை
நழுவி ஒழுகும் தீராத கணங்களுக்குள் நுழைந்து, அறுதியிடப்படாத சமன்பாட்டின் உண்மைத்தன்மை புலப்படாமல், வழிந்து பெருகும் இருளோடை கிழிய எங்கோ கூவும் அடிமனக் குரலின் சுவடைப்பற்றி ஓடுகின்ற சிறு பொழுதில்தான் தோன்றியது, காலத்தைச்சேமிக்கும் கலைக்குப் பெயர்தான் மரணம் என்று! எத்தனை இட்டும், எத்தனை எடுத்தும் வாழ்வுப் பெருவெளியில் தீராத தேடலுடன் மூச்சிரைக்க ஓடி ஓடி, தெரியாத கனவிலும் தெரியாத வளைவிலும் கண்டும் , கேட்டும், உண்டும், உயிர்த்தும் உற்றறிந்த புலன்களின் ஊடே முளைத்த மயக்க வினாக்களின் முன்னே யாவும் முயங்கித்தான் கிடக்கின்றன.