இரவின் பாடல் வழிந்தோடும் இருளில் வாய்த்த வலிகளற்ற சஞ்சாரம் நீண்டு கொண்டே செல்கிறது. திசை நிரப்பும் கருமை மெலிதான குரலில் இரவின் தீரா வேட்கையை முணுமுணுத்துக் கொண்டேயிருக்கிறது. ஏதோ ஒன்றைச் சொல்ல எந்நேரமும் இரவு முயன்றுகொண்டே இருக்கிறது. இன்றுவரை அஃது என்னவென்று சொல்லிவிட்டதா இல்லையா என்பது மட்டும் புரியவே இல்லை. இந்த இரவுதான் போகுதே போகுதே இழுத்துக் கட்ட கயிறு கொண்டு வா நண்பனே நண்பனே என்ற திரைப்பாடலினை அண்மையில் கேட்டேன்.வசீகரிக்கும் வரிகளும், மயக்கும் இசையும் வழிந்தோடும் அப்பாடலினை மீண்டும் கேட்கத் தோன்றியது. காணொளியுடன் பார்த்த போது இரவின் மீதான காதல் எல்லாருக்கும் ஒருவிதத்தில் எப்பொழுதும் அல்லது எப்பொழுதாவது பீறிட்டுக் கொண்டுதான் இருக்கிறது எனத் தோன்றியது.பொய்யான வாழ்வில் மெய்யான இன்பந்தரும் மது போதையோ (பாடல் வரிகள்), இலக்கிய இன்பமோ,வாசித்தலின் சுகானுபவமோ, கூடிக்களித்தலின் பேரின்பமோ எதுவோ ஒன்று இரவின் நிறத்தை மாற்றிக் கொண்டேதான் இருக்கிறது. இரவானது நள்ளிரவாகப் பரிணமிக்கும்போது அதன் நிறமும் அடர்த்தியும் மாறத் தொடங்கி விடுகிறது.பகல்பொ...