இங்க கொஞ்சம் எட்டிப் பாத்துட்டுப் போங்க!
எத்தனையோ பேரிடத்தில் ஏட்டிலும் நாவிலும் என எழுத்திலும் ஒலியிலும் சிக்கிச் சின்னாபின்னமான தமிழ் , தனது தூய வடிவத்துடன் இன்று எங்காவது இருக்கிறதாஎனத் தேடிப்பார்த்துச்சலிப்புற்ற தருணத்தில், தற்செயலாக ஓரிடத்தில் கண்டேன். சந்திப் பிழைகளும், வாக்கியப் பிழைகளும் பொங்கிப் பெருகி வழிந்தோடும் நாளிதழகள் மற்றும் பருவ இதழகள்,247 எழுத்துகளை 123 எனப் பாதியாகக் குறைத்து ஒரேமதிரி ஒலித்து ஒலிக்கொலை புரியும் தொகுப்பாளப் பெருமக்கள் , பதினைந்து ஆங்கிலச் சொற்களுக்கு ஒரு தமிழ்ச்சொல் என்ற விகிதத்தில் உரையாடும் தமிழ்த் திரைப்படக் காட்சிகள், தமிழில் பேசினால் அபராதம் விதிக்கும் அரைகிறுக்குகள், என் மகளுக்குச் சரியாகத் தமிழில் பேச வராது எனப் புளகாங்கிதம் அடையும் தமிழ்ப்பெற்றோர்கள் , தமிழகத்தின் சந்து பொந்துகள், இண்டு இடுக்குகள், மூலை முடுக்குகள், மேடுபள்ளங்கள், காடுகுன்றுகள், கடல் வயலகள், எங்கெங்கு தேடியும் காணாத தூய தமிழைத் தொலைக்காட்சிகளின் மொழிமாற்று நிகழ்ச்சிகளில் கண்டேன்.
"நாம சேஃப்டியா இருக்கோமாங்கிறத கன்ஃபர்ம் பண்ணிட்டுத்தான் நெக்ஸ்ட் மூவ் என்னண்ணு திங்க் பண்ணனும்"
இந்த உரையாடல் சாதாரணமாகத் தமிழ்த் திரைப்படமொன்றிலோ, தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றிலோ இடம் பெற்க்கூடிய நவீனத் தமிழில் எழுதப்பட்டதாகும்.ஆனால் இதே உரையாடல் மொழிமாற்றுத் திரைப்படத்திலோ, வேறேதேனும் மொழிமாற்று நிகழ்ச்சியிலோ அமையும்போது எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.
"நாம பாதுகாப்பா இருக்கோமாங்கிறத உறுதிப்படுத்திட்டுத்தான் அடுத்த வேலை என்னன்னு யோசிக்கணும் "
முழுமையான தமிழ்த்திரைப்படம் அல்லது தமிழ் நிகழ்ச்சி எனப்படுமொன்றில் இரண்டறக் கலந்து நிற்கும் ஆங்கிலம், ஆங்கில நிகழ்ச்சியொன்றின் மொழிமாற்று வடிவத்தில் அடியோடு மறைந்து விடுகிறது என்பது இதில் முரண்நகை
மேலும் சில உதாரணங்கள்:
" I FEEL TIRED.... "- இது தமிழ்!
"நான் ரொம்பக் களைப்பா இருக்கேன்" - இது மொழிமாற்று நிகழ்ச்சி!
"ப்ளீஸ்........ ஸ்லோவாப் போங்க,என்னால பேலன்ஸ் பண்ண முடியல...."- இது தமிழ் நிகழ்ச்சி.
"தயவு செஞ்சு மெதுவாப் போங்க, எனக்கு ரொம்பத் தடுமாறுது"- இது மொழிமாற்று.
"ஷ்யூர்,ஐ வில் ட்ரை மை லெவல் பெஸ்ட்...., பட் , நீங்க கொஞ்சம் வெய்ட் பண்ணனும்"- இது தமிழ் நிகழ்ச்சி!
"உறுதியா, நான் முடிந்த அளவு முயற்சி செய்வேன், ஆனா நீங்க கொஞ்சம் காத்திருக்கணும்"- இது மொழிமாற்று!
"பிலீவ் மீ ... ப்ளீஸ்...... ஐ டின்ட் டூ திஸ்..."- இது தமிழ் நிகழ்ச்சி!
"தயவு செஞ்சு என்னை நம்புங்க, நான் இதைச்செய்யல..."- இது மொழிமாற்று நிகழ்ச்சி!
வாழ்க ஆங்கில நிகழ்ச்சிகள்! வளர்க அவற்றின் மொழிமாற்று வடிவங்கள்!!
தமிழில் பேசுவது நாகரீகம் அல்ல என்ற நிலை தமிழனுக்கு வந்தது மிகவும் வெட்கக்கேடு!
ReplyDeleteதமிழின் அருமையை அனைவரும் உணரும் நாள் வரவேண்டும்!
ReplyDeleteஇன்று ஊசலாடும் 60 சத தமிழை சினிமாக்களும் ,தொகுப்பாளர்களும் பேசுவது ஊசியில் நூல் கோர்த்து அரைகுறை தையற்பயிற்சி சென்றவர்கள் தைப்பது போல் உள்ளது.அதையேதான் உமது கட்டுரையும் வெளிப்படுத்துகிறது.
ReplyDelete