சூலூர்-பெயர்க்காரணம்
கோயம்புத்தூர் மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்படும் முன்பு எங்கள் வசிப்பிடம் பல்லடம் தாலுகாவில் இருந்தது. தற்போது பல்லடம் தாலுகா கோயம்புத்தூரிலிருந்து பிரிக்கப்பட்ட திருப்பூர் மாவட்டத்துக்குள் வருவதால், பல்லடம் தாலுகாவிலிருந்த சூலூர், சுல்தான்பேட்டை ஒன்றியங்கள் மட்டும் கோயம்புத்தூர் மாவட்டத்திலேயே சூலூரைத் தலைமையிடமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட புதிய தாலூகாவில் அமைகின்றன.எனவே எங்களது புதிய தாலுகாத் தலைநகரமான சூலூரைப் பற்றி ஒரு சுவையான தகவலைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.
கோயம்புத்தூர் மாநகரின் நீட்சியான சூலூர் நகரம், தேசிய நெடுஞ்சாலை எண் 67 இல் அமைந்துள்ளது.நொய்யலாற்றங்கரையிலமைந்துள்ள இந்நகரில் எந்நேரமும் குளிர்நத காற்று வீசிக்கொண்டிருக்கும் அழகான படகுத்துறை உண்டு.கரையை ஒட்டி முன்பு சூரல் எனப்படும் பிரம்பு அடர்ந்து வளர்ந்திருந்ததால்தான் சூரலூர் என்றிருந்து காலப்போக்கில் மருவி சூலூர் என்றானது எனப் படித்திருக்கிறேன்!
கேரள மாநிலத்தையும், கோயம்புத்தூரையும் இந்தியாவின் பிறபகுதிகளுடன் இணைக்கும் பெரும்பாலான ரெயில் வண்டிகளும் சூலூரைத்தான் கடந்து செல்கின்றன.இவ்வூரில் விமானப் படைத்தளமும் அமைந்துள்ளது. எண்ணற்ற தொழில் நிறுவனங்கள் சுற்றிலும் அமைந்துள்ள சூலூர் நகரானது பலதரப்பு மக்களும் வசிக்கும் இடமாகும்!
நான் இரங்கநாத புரம்... அடுத்த வாரம் சந்திப்பமுங்களா??
ReplyDeleteநிச்சயமாக....வெகு ஆவலாக இருக்கிறேன் பழமைபேசியைச் சந்திக்க....
ReplyDeleteஇதே போலப் பல ஊர்களுக்கும் பெயர்க்காரணங்கள் உண்டு, முயலுங்கள்!
ReplyDeleteநான் சூலூர் பள்ளியில் தான் படித்தேன்.... நல்ல ஊர்.
ReplyDeleteவாழ்த்துக்கள்.......
ReplyDeleteWord verification எடுத்துவிடுங்கள்
நிறம் கண்ணை உறுத்துகிறது.பச்சைக்கலர் பின் புலத்துக்கு இயல்பான கருப்பு எழுத்தும் வெள்ளை நிறமும் அழகாக இருக்குமே.மேக்கப் வேண்டாமே:)
ReplyDeletearumaiyaana thakaval.vaalththukkal
ReplyDelete