தமிழ்த்தாய் திருப்பள்ளியெழுச்சி
'ரசனை' ஆகஸ்ட் 2010 இதழில் திரு.உ.தங்கவேல் சரவணன் அவர்கள் எழுதிய "தமிழ்த்தாய் திருப்பள்ளியெழுச்சி" படித்தேன். இன்பம் ஊற்றெடுக்கும் இனிய பாடல் அது.பலமுறை படித்து மகிழ்ந்தும் தீரவில்லை. என்னை வெகுவாகக் கவர்ந்த நான்கு அடிகளை இங்கு தருகிறேன்.
"நன்னிலை தீர்ந்திங்கு நலிவினை ஏற்றோம்
நாலுபேர் எங்களை ஏசிடக் கேட்டோம்
அன்னையுன் ஆளுமை பின்னடைந் ததுவோ
ஆண்டசெங் கோலதும் தாழ்ந்துபோ நதுவோ
புன்னகைப் பூமுகம் முன்வந்து காட்டாய்
புதுஎழுச் சிக்கொரு தெம்பினை ஊட்டாய்
இன்னமும் எங்களைக் காக்கவைக் காதே
இருந்தமி ழே!பள்ளி எழுந்தரு ளாயே!
ஓசையின்பமும் பொருளின்பமும் ஒருங்கே அமைந்து உள்ளுதொறும் உள்ளுதொறும்
உவகையளிக்கும் ஒப்பற்ற பாடலது. இன்னமும் என் மனத்தில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.ரசனை இதழில் மரபுக்கு என்றுமே தனியிடம் உண்டு!
arumai...vaalththukkal/ thanks for sharing
ReplyDeleteஅருமை! ரசனை இதழை படிக்கும் வாய்ப்பு உலகத்தமிழருக்கு இல்லாமையால் இப்படியொரு அருமையான திருப்பள்ளியெழுச்சிப் பாடலை முழுமையாகச் சுவைக்கும்பேறை இழந்து நிற்கின்றனர். எனவே; தங்களுக்கு நேரமிருக்கும்போது இதை முழுமையாகப் பதிவேற்றி உலகத்தமிழர் யாவரும் முழுமையாகப் படித்து சுவைக்கும்பேறை ஏற்படுத்துக. தங்கள் பணிக்கு வாழ்த்துகள்
ReplyDelete