தமிழே அமிழ்து


"தமிழுக்கும் அமுதென்று பேர் " என்று பாடினான் கவிஞன்!மெய்தான், தமிழ் என்ற சொல்லைத் திருப்பித் திருப்பி வேகமாகச் சொல்லிப் பாருங்கள், என்னவென்று ஒலிக்கிறது ? அமிழ்து ,அமிழ்து என ஒலிக்கும்!அமிழ்து , அமிழ்து எனப் பலமுறை சொல்லிப்பார்க்கத் த்மிழ், தமிழ் என்று ஒலிக்கும். 
தமிழ் என்ற சொல்லிலேயே தமிழின் தனிச்சிறப்பெழுத்தான 'ழ' அமைவது வியப்பூட்டும் ஒன்றாகும். மேலும் வல்லினம், மெல்லினம், இடையினம் என்னும்மூன்று எழுத்துக்களும் அமைவதும்  சிறப்பாகும். 
த-வல்லினம்
மி-மெல்லினம்
ழ்-இடையினம்
பாவகையில் மிகச்சிறப்பானவைகளுளொன்றாகக கருதப்படும் வெண்பாவின் ஈற்றுச்சீரில் அமைக்கத் தகுந்த 'மலர்' என்னும் வாய்ப்பாட்டில் அமைந்திருப்பது புலவர்க்கு வாய்த்த கொடையாகும்.
தமிழுக்கு வழங்கப்படும் எத்தனையோ அடைமொழிகளுள் "தீந்தமிழ்" என்பதும் ஒன்றாகும். இதனை எப்படிப் பிரித்து எழுதுவது எனப் பலருக்கும் ஐயமிருக்கிறது. 
தீம்+தமிழ் என்பதே தீந்தமிழ் என்றாகிறது. தீம் என்பதற்கு இனிமை அல்லது தித்திப்பு என்பது பொருளாகும். 
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

Comments

  1. உண்மையிலேயே தமிழோர் அமிழ்துதான்

    ReplyDelete

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

Popular posts from this blog

முப்பது ரூபாய்க்கு முழு சாப்பாடு...கோவையில் மற்றுமொரு உணவுப்புரட்சி

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

வகையுளி