கவிதைச் சவாலின் விடை
நேற்று (06.02.2011) நான் கேட்ட கவிதைக் கேள்விக்கு நண்பர் இளந்தென்றல் சரியான விடையைச் செப்பியுள்ளார். வாழ்த்துக்கள் இளமாறன் ! இன்னிசைச் சிந்தியல் வெண்பாவிலமைந்த என்னுடைய கேள்விக்கு இன்னிசைச் சிந்தியல் வெண்பாவிலேயே விடை தந்து அசத்தியுள்ளார்.நான் கேட்ட வினாவும் அவர் அளித்த விடையும் இதோ!
"நறுந்தொகை யென்னும் பெரும்புகழ் நூலின்
மறுபெயர் சொல்வாய் மறவாமல் வெண்பா
உறுதியாய் வெண்டும் உணர்!"
இது வினா.
"நறுந்தொகை யென்னும் பெரும்புகழ் நூலின்
மறுபெயர் வெற்றிவேற்கை என்பதாம் நண்பா
உறுதியாய் சொல்வேன் உணர்!"
இது விடை!
உறுதியாய்ச் சொல்வேன் என்று வலி மிகுந்து வருதல் சிறப்பு!
"கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே"
என்பது போன்ற ஆன்ம வரிகளைக் கொண்ட நறுந்தொகையின் மறுபெயர் வெற்றிவேற்கை ஆகும். வாழ்க தமிழ்!
வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே !
ReplyDeleteஎன் பெயர் இளமாறன் என்று நான் எங்கும் குறிப்பிடவில்லையே.
வாழ்க தமிழின் வளமை
ReplyDelete