தொழில், கல்வி மற்றும் மருத்துவத் துறைகளில் கொடிகட்டிப் பறக்கும் கோவைக்கு இப்பொழுது ஏர்டாக்ஸி வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்புசென்னையில் மட்டும் இந்த வசதி இருந்தது.கோவையில் இருந்து சென்னைக்கு எட்டுப் பேர் செல்ல 4 லட்சம் கட்டணமாகக் கூறப்பட்டுள்ளது.சென்னை மற்றும் பெங்களூருவில் ஒரு மணி நேரத்துக்கு 2,25,000 ரூபாய் கட்டணம் ஆகிறது. கோவையில் அறிமுகக் கட்டணமாக இரண்டு லட்சம் ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னையைச் சேர்ந்த SANWE Air நிறுவனம் இந்த வசதியைக் கோவையில் அறிமுகப்படுத்துகிறது.இனி கோவையில் இருந்து இந்தியாவின் எந்த ஊருக்கும் ஏர்டாக்ஸி மூலம் செல்ல முடியும். நீலகிரி, கோயம்புத்தூர், மற்றும் திருப்பூர்ப் பகுதியில் உள்ள சுற்றுலா, கல்வி, டெக்ஸ்டைல், மருத்துவம் மற்றும் இயந்திரத் துறையினர் இதன் மூலம் பெரும்பயன் அடைவர் என்று நிறுவனத்தின் பொது மேலாளர் கூறுகிறார். நன்றி: டைம்ஸ் ஆஃப் இண்டியா, கோவைப் பதிப்பு