மிடில் ஈஸ்ட் டெஸ்ஸெர்ட்ஸ்
ஷவர்மா, அல்ஃபாம், குழிமந்தி வகையறாக்களை அடுத்து மிடில் ஈஸ்ட் உணவு வகைகளான Kunafe, பக்லாவா மற்றும் Umm Ali ஆகியவை இப்பொழுது
கோவையில் ஹிட்டடித்துக் கொண்டிருக்கின்றன.
கோவையில் கேரளா க்ளப்புக்கு அருகில் உள்ள ஸ்வீட் ஸ்மித் என்ற அரபிக் டெஸ்ஸர்ட் கஃபேயில் சென்ற வாரம் சுவைத்த குனாஃபயின் சுவையும், மணமும் இன்னமும் நிற்கிறது.
பெனாலிமிலும் , மஞ்சேஷ்வரிலும் , கோவையின் பெர்ஷியன் குரேஷியிலும் சீஸ் மற்றும் சாக்லேட் ஃப்ளேவர்கள் மட்டுமே நமக்குக் கிடைத்தன. ஸ்வீட் ஸ்மித்தில் ஏகப்பட்ட வெரைட்டிகள் உண்டு. இத்தாலியின் புகழ்பெற்ற சாக்லெட்டான ஹேஸல் நட் சேர்த்த ஃபெரேரோ ரொஷே ஃப்ளேவரில் நாம் சுவைத்த Kunafe திகட்ட வைக்கும் தித்திப்புடன்
அடர் பிரவுன் நிறத்தில் அட்டகாசமாக இருந்தது.
உதிர்த்த சேமியா போல லேசாக மொறு மொறு என்று இருக்கும் Kunafa மீது சுகர் சிரப்பைத் தாராளமாக ஊற்றி ஊற வைத்தால் மொறுமொறுப்பு மறைந்து பதமாக மாறி இதமாகத் தொண்டைக்குள் இறங்குகிறது.
நம்மூர் பாசந்தியில் நிறைய நட்ஸ்களைத் தூவிச் செய்தது போல் இருக்கும் உம்ம் அலியை இளஞ்சூடாகச் சாப்பிடுவது டிவைன் டேஸ்ட். அழகான சிறிய வாணலி போன்ற கிண்ணத்தில் சிறு மரக்கரண்டிகளுடன் கூழ்ம நிலையில் கொண்டு வரும் உம்ம் அலியைப் பார்த்ததுமே நமது டேஸ்ட் பட்ஸ் வைப்ரேஷன் மோடுக்கு வந்து விடுகின்றன.
பக்லாவாவிலும் நிறைய ஃப்ளேவர்கள் உண்டு . மிகச்சிறியதாகக் கடலை மிட்டாய் சைஸில் இருக்கும் பக்லாவாவில் நமது ஆல் டைம் ஃபேவரைட்டான பிஸ்தா பக்லாவா ஸ்வீட் ஸ்மித்தின் ஹைலைட் என்று சொல்லலாம் . புல்புல் முந்திரி பக்லாவா இரண்டு பீஸ்கள் டேஸ்ட் பார்த்ததில் பிஸ்தாதான் உண்மையிலேயே பிஸ்தா....!
காம்பேக்ட் சைஸில் இருக்கும் கஃபேயில் ஷேக், காஃபி உள்பட ஏகப்பட்ட சாய்ஸ்கள் இருக்கின்றன. பர்ஸ் மட்டும் கொஞ்சம் வெயிட்டாக இருக்க வேண்டும் . மற்றபடி பெர்ஃபெக்ட் ஹேங் அவுட் இது.
Comments
Post a Comment
நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!