ஏன் நாம் இப்படி.....?

 கோயம்புத்தூரில் வாலாங்குளத்திலும், பெரிய குளத்திலும், குறிச்சிக் குளத்திலும் பல கோடி ரூபாய் செலவில் பூங்காக்கள் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. குறிச்சிக் குளக்கரையில் இன்னும் வேலை நடந்து கொண்டிருக்கிறது.  

இங்கெல்லாம் ஒரு விஷயத்தைக் கவனித்தேன்... மொத்தப் பூங்காவிலும் குப்பைத் தொட்டி ஒன்றுதான் தூய்மையாக இருந்தது. ஏனெனில் அங்கு தான் யாருமே குப்பை கொட்டுவதில்லை. பெரும்பாலானோர் கைநீட்டிய திசையில், கால்போன தடத்தில், கண் கண்ட இடத்தில், போகிற போக்கில் குப்பைகளையும், கழிவுகளையும் வீசி எறிந்து பேரானந்தம் அடைகிறார்கள். 

பிளாஸ்டிக் கப்புகள், தட்டுகள், ஐஸ்கிரீம் குச்சிகள், குப்பிகள், குவளைகள்,சிப்ஸ் பாக்கெட்டுகள், பிஸ்கட் கவர்கள், சாக்லேட் ரேப்பர்கள், வாட்டர் பாட்டில்கள்... இவை தவிர மீதியான உணவுப் பொருள்கள், தீனிகள், தின்பண்டங்கள் ,எச்சில்கள், தின்று துப்பப்பட்ட பாக்குக் கறைகள்......

மக்களே.....! நீங்கள் பூங்காவில் இருந்து வெளியேறிய மறுகணமே உலகம் அழிந்து விடப் போவதில்லை. அடுத்த நாளும் மக்கள் வருவார்கள்... அடுத்த வாரம் நீங்களே கூட மீண்டும் வரலாம்.... கொஞ்ச்ச்சம்...... ப்ளீஸ்.....!

Comments

Popular posts from this blog

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

தலைமை ஆசிரியர்- அறிந்து கொள்வோம்-உடம்படுமெய்‌ - புணர்ச்சி

எண்ணை.... எண்ணெய்...எது சரி ?