பாராட்டுகள் -பாராட்டுக்கள் , எது சரி....?

 பாராட்டுகள் -பாராட்டுக்கள்

வாழ்த்துகள் -வாழ்த்துக்கள்

 எது சரி....?

 பொதுவாக, கள் என்பது இரண்டு வழிகளில் பொருள்படும்.

 கள் என்பது மதுவையும் குறிக்கும், பன்மையைக் குறிக்கும் விகுதியாகவும் வரும்.

  மரங்கள், செடிகள், கடல்கள், கண்கள், காய்கள், நாற்காலிகள், பறவைகள் - இங்கெல்லாம் கள் என்பது பன்மையைக் குறிக்கும் விகுதி; தனியே பொருள் தராது; தனிச் சொல்லும் அன்று.

  தென்னங்கள்

 பனங்கள் 

 அரிசிக்கள்

 நாட்டுக்கள் 

 இங்கெல்லாம் கள் என்பது மதுவின் ஒரு வகை. தென்னையில் இருந்து, பனையிலிருந்து எடுக்கப்பட்ட கள்.

 அரிசிலியிருந்து எடுக்கப்பட்ட கள் அரிசிக்கள்

 அப்படி இருக்க வாழைக்கள் என்று சொன்னால் அது வாழையிலிருந்து எடுக்கப்பட்ட கள் என்று பொருள் தரும்.

  வாழைகள் என்றால் பன்மைப் பொருளில் வரும்.

வாழைக்கள்- வாழைமரத்துக்கள்.

வாழைகள் - பல வாழை என்ற பன்மை.

 இப்போது பாராட்டுக்கு வருவோம்.

 பாராட்டுக்கள் என்றால் பாராட்டுக்குரிய கள் அல்லது பாராட்டில் இருந்து எடுக்கப்பட்ட கள் அல்லது பாராட்டால் ஆன கள்.

 எனவே பாராட்டுகள் என்பதே சரி....! வாழ்த்துக்கும் அதுவே....

  வாழ்த்துக்கள்- வாழ்த்தால் ஆன கள்

  வாழ்த்துகள்- வாழ்த்து என்பதன் பன்மை.

  இதுவே ஓரெழுத்தொரு மொழி எனப்படும் ஓரெழுத்துச் சொல் , இரண்டு குறிலோசைச் சொற்கள் போன்றவைக்குப் பன்மை கூறும் போது 'க்' வரும் .

 பூ-பூக்கள் 

 பசு - பசுக்கள் 

 பூகள், பசுகள் என்று வாரா.

 ஆட்கள், நாட்கள் எல்லாமே பிழை தான். ஆட்கள் -ஆளை உடைய கள்

  நாட்கள்- நாள்பட்ட கள்( பழைய கள்)

  பழைய கள்ளைப் பழங்கள் என்றும் சொல்லலாம். 

  பழத்திலிருந்து எடுக்கப்பட்ட கள், பழக்கள்.

   மரத்திலிருந்து எடுத்தால் மரக்கள்.

   பிறகு ஏன் நாட்கள் ஆட்கள் எல்லாம்....?

 தொல்காப்பிய காலத்தில் கள் விகுதி இல்லை. பிறகு அது மரபாயிற்று. மரபானாலும் பொருள் புரிய எழுதுவது நன்று. 

Comments

Popular posts from this blog

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

தலைமை ஆசிரியர்- அறிந்து கொள்வோம்-உடம்படுமெய்‌ - புணர்ச்சி

எண்ணை.... எண்ணெய்...எது சரி ?