அந்த நாலு பேரு யாரு ?

 நாலு பேரு நாலு விதமாப் பேசுவாங்க என்ற ஒரு இன்டர்நேஷனல் காரணத்துக்காகவே நிறையப் பேர் சொந்த விருப்பங்களை கூடத் தியாகம் செய்து தவ வாழ்வு வாழ்ந்து கொண்டிருப்பார்கள். 

இந்த டயலாக்கைத் தூக்கிக் கொண்டு  என்னிடம் வந்தார் நண்பர் ஒருவர்.  

 "அப்படிப் பண்ணாத.... இப்படிப் பண்ணாத... அதப்‌ பண்ணாத ....இதப் பண்ணாத  .... இல்லைன்னா நாலு பேரு நாலு பேரு நாலு விதமாப் பேசுவாங்க....!" என்பது அவருடைய ஃபேவரைட் டயலாக்.

அவரிடம் கீழ்க்காணும்  கேள்விகளைக் கேட்டேன். 

#  அந்த நாலு பேரு யாரு....?

 #  அவர்களின் செல் நம்பர் என்ன....?

  # இந்த மாதிரி நாலு விதமாப் பேசுவது தவிர வேறு அவர்களுக்கு ஏதாவது வேலை அல்லது தொழில் என்று எதுவுமே இல்லையா....?

  # அப்படி இல்லாத பட்சத்தில் அவர்களுடைய இந்த நாலு விதப் பேச்சை ஏன் சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டும்?

# ஒருவேளை அவர்களுக்கு இதுதான் வேலை என்றால் இதன் மூலமாக அவர்களுக்கு கிடைக்கும் வருமானம் என்ன அல்லது பயன் என்ன....?

இந்தக் கேள்விகளைக் கேட்டதுமே அவர் என்னை முறைத்துப் பார்த்துவிட்டு கிளம்பினார்.   அந்த நாலு பேரில் அவரும் ஒருவராக இருப்பார் போலும் என நினைத்துக் கொண்டேன். 

Comments

Popular posts from this blog

எண்ணை.... எண்ணெய்...எது சரி ?

நூல் வெளியீடு

ஆனாலும் பாவமந்த அரசுப் பேருந்து நடத்துனர்.