நமக்கும் ட்ராஃபிக் சென்ஸுக்கும் ஏன் இத்தனை தூரம்...?

 போக்குவரத்து விதிகளைக் கடைபிடிக்க தனியாக கோச்சிங் கிளாஸ் எல்லாம் போக வேண்டாம்.... கோர்ஸும் படிக்க வேண்டாம்.... அடிப்படையான அறிவு இருந்தாலே போதும்....! ஆனாலும் நம்மில் பெரும்பாலானோர்க்கு ஏனோ ரூல்ஸ் ஃபாலோ பண்ணுவதில் அத்தனை சோம்பேறித்தனம்......!

 குறைந்தபட்சம் 30 கிலோமீட்டர் இடைவேளையில் ஒரு நகரத்திலிருந்து இன்னொரு நகரத்திற்குப் பயணித்தாலே கீழ்க்காணும்  பட்டியலில் உள்ள பல நான்சென்ஸ்களைப் பார்க்க முடியும்.

 * இண்டிகேட்டர் போடாமல் சடாரெனத் திரும்பிப் பதைபதைக்க வைப்பது


• போட்ட  இன்டிகேட்டர்  கதறுவது கூடக் கேட்காமல் ஆஃப் பண்ணாமலேயே ஒரு தியான நிலையில் ஓட்டி எங்கு திரும்பப்போகிறார்களோ என சஸ்பென்ஸ் வைப்பது

•  லெஃப்ட் இன்டிகேட்டரைப் போட்டுவிட்டு ரைட்டில் திரும்பி சர்ப்ரைஸ் கொடுப்பது

•   நான்கு வழிச்சாலையின் வலப்புற டிராக்கில் சாவகாசமாக ஓட்டிக் கடுப்பேற்றுவது

•    தலை போகிற அவசரம் போல இரண்டு டூவீலர்களில் பேசிக்கொண்டே பேரலலாக ஓட்டுவது 

•    சாலையின் விளிம்புக் கோட்டைத் தாண்டி வெளியே நிறுத்தாமல் பாதி வாகனம் சாலையில் நீட்டிக் கொண்டிருப்பது போல நிறுத்தி விட்டுச் செல்வது

•    ஆளே இல்லாத சாலையிலும்  ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறை ஹார்னை அலற விட்டு ஆனந்தம் அடைவது

•      சிவப்பு சிக்னல் விளக்கு எரியும் பொழுது பின்னால் நின்று கொண்டு ஹார்ன் அடித்துக் கடுப்பேற்றுவது 

•      ஃப்ரீ லெப்ட் ப்ளாக் செய்து எருமை மாடு போல அசையாமல் நிற்பது

•       சிவப்பு சிக்னல் விளக்கு  எரியும் பொழுது பின்னால் வரும் ஆம்புலன்ஸ்க்கு வழி ஏற்படுத்தி மற்றவர்கள் ஒதுங்கும்பொழுது ஆம்புலன்ஸ் பின்னாலேயே வால் பிடித்துக் கொண்டு நைசாகப் பறந்து விடுவது

•        நான்கு வழிச்சாலைகளில் லெஃப்ட் எடுக்க மறந்து ரிவர்ஸிலேயே வந்து எமனுக்குச் சவால் விடுவது

•         பைக்கில் பெட்ரோல் டேங்க்கைப் பாதுகாக்க ஹெல்மட்டை அதன் மேல் வைத்துவிட்டு ஓட்டுவது

•         அணுகுசாலைகளில் இருந்து குபீரெனப் பாய்ந்து நான்கு வழிசாலையில் நுழைந்து திடுக்கிடச்செய்வது

எளிமையாகப் பின்பற்றக்கூடியவற்றையே கண்டுகொள்ளாதவர்கள்  நான்கு வழிச்சாலைகளின் சந்திப்புகளில் அணுகுசாலைகளில்  (சர்வீஸ் ரோடு) இருந்து வந்து இணையும் போது எந்த சிக்னலை ஃபாலோ செய்வது என்ற சற்றுச் சிக்கலான வழிமுறைகளைப் புரிந்து செயல்படுவது கடினம் .

அணுகுசாலைகளில் இருந்து நாம்  வரும்பொழுது நமது திசையில் இருந்தே  நான்கு வழிச்சாலைகளில்  வரும் வாகனங்களுக்கு பச்சை விளக்கு ஒளிர்ந்தால் நாம் right turn or u turn எடுக்கக் கூடாது .  பெரும்பாலும் அணுகுசாலைகளுக்குத் தனியே சிக்னல் கிடையாது , கேரளாவில் சில இடங்களில் உண்டு . எனவே நமக்கு இடப்புற சாலையில் நிற்கும் வாகனங்களுக்கு right turn மட்டும்  சிவப்பு விளக்கு ஒளிரும் போது நாம் right turn ,u - turn எடுக்கலாம் . நமக்கு எதிர்த்திசையில் இருந்து வரும் வாகனங்களுக்கு right turn சிவப்பும் , straight பச்சையும் எரியும் போதும்  நாம் நேராகச் செல்லலாம் . நமக்கு வலப்புறம் நிற்கும் வாகனங்களுக்கு லெஃப்ட் டர்ன் மட்டும் சிவப்பு எரியும் போது நேராகச் செல்லலாம் . 


Comments

Popular posts from this blog

முப்பது ரூபாய்க்கு முழு சாப்பாடு...கோவையில் மற்றுமொரு உணவுப்புரட்சி

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

வகையுளி