பொன்னியின் செல்வன் நிகழ்த்தும் மாயாஜாலம்
கல்கியில் தொடர்கதையாக வந்த போது ஆண்டுக் கணக்கில் ஒவ்வொரு வாரமும் காத்திருந்து படித்தாயிற்று.
நூலகத்தில் ஒவ்வொரு பாகமாக எடுத்து வந்து ஒரே மூச்சில் படித்துப் பார்த்தாயிற்று.
பாட்காஸ்டாக ஆடியோ வடிவில் கேட்டாயிற்று.
எஸ் எஸ் இன்டர்நேஷனல் தத்ரூபமாக நாடக வடிவில் அரங்கேற்றியதைப் பார்த்து அனுபவித்தாயிற்று .
மீண்டும் சிலர் வசன வடிவில் மேடையில் நிகழ்த்திக் காட்டியதையும் பார்த்தாயிற்று.
வீரநாராயண ஏரி முதல் கோடியக்கரை வரை பொன்னியின் செல்வன் மாந்தர்கள் உலவிய பல இடங்களை நேரிலும் கண்டு மகிழ்ந்தாயிற்று.
பொன்னியின் செல்வனின் முன் கதை, பின் கதைகளையும் படித்தாயிற்று.
BYNGE ஆப் மூலமாக தொடுதிரைக் கருவியிலும் படித்து உணர்ந்தாயிற்று.
பொன்னியின் செல்வனின் ரசிகப் பெருமக்கள் பலருடன் மணிக் கணக்கில் நேரிலும் ,ஆனலைனிலும் கதைத்துத் தீர்த்தாயிற்று.
நேற்று மாலை கூட நண்பர் ரகுநாதன் அவர்களுடன் பொன்னியின் செல்வனை அலசி ஆராய்ந்து பார்த்தாயிற்று.
நாவலுக்கான பல்வேறு பின்னூட்டங்களை பலவித இணையத் தளங்களில் படித்து மகிழ்ந்தாயிற்று.
வரலாற்றாய்வாளர்களின் குறிப்புகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தாயிற்று.
விகடனின் ,பொன்னியின் செல்வன் நாவல் நிகழிடங்களைச் சுற்றிப் பார்க்கும் மூன்று நாள்கள் வரலாற்றுப் பயணத் திட்டத்தில் சேரலாமா எனப் பரிசீலிக்க ஆரம்பித்தாயிற்று.
ஆனாலும் இன்னும் பொன்னியின் செல்வன் தந்த மயக்கம் தீரவில்லை. பார்க்கலாம்.... மணிரத்தினமும் ரஹ்மானும் செப்டம்பர் 30 இன்னும் எந்த விதமான போதை ஏற்றக் காத்திருக்கிறார்கள் என்று..!
Comments
Post a Comment
நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!