உப்பொ-உன்னம்
எழுத்து வடிவில் பார்க்கும்பொழுது சில சொற்கள் வேறு மொழிச் சொற்கள் போலத் தோன்றும் . ஆனால் பேச்சுத் தமிழில் வட்டார அளவில் வழங்கப்படும் சொற்கள்தாம் அவை .
இப்பொழுது என்ற சொல்தான் கொங்கு வட்டாரப் பேச்சு வழக்கில் "உப்பொ" எனப்படுகிறது.
" உப்போ வந்துட்டேன்"
"உப்பவே வந்துட்டேன்"
" உப்ப வந்துட்டேன்"
உப்ப வரேன் என்றால் உப்புவதற்கு வருகிறேன் எனப் பொருள் கொள்ள வேண்டியது இல்லை. உப்ப என்பது உப்புதல் ( பெருத்தல்) என்பதன் வினையெச்சம்.
அதுவே போல உன்னம், உன்னும் ,உன்னூ, உன்னா என்பது இன்னும் என்பதன் திரிபாக இருக்கிறது.
இன்னும், இன்னும் - உன்னம், உன்னம்
இன்னும் வரவில்லை- உன்னும் வருல, உன்னு(ம்) வரல.
அதுவே நீண்ட நேரத்தைக் குறிக்கையில் உன்னா என இழுத்து உச்சரிக்கப்படுகிறது.
"இன்னும் வரவில்லையா..?"- "உன்னா வருலியா ..?"
அங்கே என்பதும் நீண்ட தொலைவில் உள்ளதைச் சுட்டிக்காட்டும் போது "அங்கா" என இழுக்கப்படுகிறது.
"அது எதுக்குப்பா அங்கா போய் வர்றது....?"
நுணுக்கமான இந்த ஒலிப்புகளை அடுத்த முறை, குறிப்பாக வட்டார மொழியை வழக்கமாகக் கொண்டிருக்கும் ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் பேசும்போது கவனித்துக் கேட்டுப்பாருங்கள். ஆச்சர்யமாக இருக்கும் .
Comments
Post a Comment
நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!