தண்ணீர் சேந்துதல்

 கிணற்றிலிருந்து நீர் எடுப்பதைக் கொங்கு வட்டார வழக்கில் தண்ணீர் சேந்துதல் என்பார்கள். குடிநீருக்குப் பயன்படும் நீருள்ள கிணற்றைச் ’சேந்துகிணறு’ என்பார்கள்.

கிணற்றிலிருந்து நீரை எடுப்பதைப் பொதுவாக நீர் இறைத்தல் என்பது வழக்கம். ஏதேனும் ஒரு நீர் நிலையிலிருந்து குடத்திலோ அல்லது வேறு ஏதேனும் பாத்திரத்திலோ எடுத்து வருவதை
மொண்டு வருதல் என்பதும்,
மொண்டல் என்பதும்,
மொள்ளல் என்பதும்,
முகத்தல் என்பதும் தமிழ் மொழி வழக்கம்.

" கொஞ்சம் நீர்மொண்டு வருகிறேன்..."
"சிறிது நீர் முகந்து வருகிறேன்.."
" நான் ஆற்றில் தண்ணீர் மொள்ள வில்லை..."
என்பன சான்றுகள்.

அளத்தலை முகத்தல் அளவை என்றுதான் குறிப்பிடுகிறோம்.
மொண்டு வருதலை வட்டார வழக்கில் "மோந்து வருதல்" என்பர்.
" கொஞ்சம் தண்ணி மோந்துவா.." என்பது வழக்கம்.
முகந்து வருதல் என்பதன் பேச்சு வழக்கு மோந்து வருவதாகும் .
முகந்து வருதல் வேறு முகர்ந்து வருதல் வேறு.
முகர்ந்து வருதல் என்றால் மூக்கால், மூச்சால் உணருதலைக் குறிக்கும் .இதையும் 'மோந்து பார்த்தல்' என்று கூறுவது பேச்சு வழக்காகும். மோப்பம் என்ற சொல்லிலிருந்து இதை வருவித்திருக்கலாம். ஆனாலும் முகர்தல் என்பதையும் முகத்தல் என்ற பொருளில் பயன்படுத்துவது மரபு.

ஓடுகின்ற நீரைக் குடத்தில் பிடிப்பதை "கோருதல் " என்னும் வழக்கமும் தமிழகத்தில் சில பகுதிகளில் உண்டு.

Comments

Popular posts from this blog

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

தலைமை ஆசிரியர்- அறிந்து கொள்வோம்-உடம்படுமெய்‌ - புணர்ச்சி

எண்ணை.... எண்ணெய்...எது சரி ?