நெஞ்சில் நிலைத்த நெல்லைச் சமையல்
திருநெல்வேலி என்றதும் அல்வா, தாமிரபரணி,குற்றாலம் முதலியவை நினைவுக்கு வரும்.திருநெல்வேலி மண்ணுக்கே உரிய மற்றொரு அம்சம் அவர்களது சப்புக்கொட்ட வைக்கும் சமையல்தான். அண்மையில் விகடனில், மூங்கில் மூச்சு எழுதிவரும் சுகாஇதுபற்றி மிகச்சுவையாகத் தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டிருந்தார்.நான் தமிழ்நாடு முழுக்கச் சுற்றி அலைந்திருக்கிறேன்.எல்லா இடங்களிலும் ஏதோ ஒரு சிறப்பு இருப்பது உண்மை . ஆனால் நெல்லைச் சமையல் எனக்குக் கிறக்கத்தை ஏற்படுத்திவிட்டது.என்னுடன் பணிபுரியும் தோழி ஒருவர் நெல்லைக்காரர்.அவர் கொணரும் உணவுவகைகள் நாவில் நீர் ஊறச் செய்பவை.நெல்லை ஸ்பெஷலாக அவர் அவ்வப்பொழுது கொணரும் சில அயிட்டங்களை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். #உளுந்துக்கஞ்சி: வெள்ளை உளுந்து,தேங்காய்ப்பால், நெய், முட்டை, கருப்பட்டி, ஏலம் , சுக்கு, சேர்த்துச் செய்யப்படும் கஞ்சி. சூடாக ஒரு பெரிய கிண்ணத்தில் ஊற்றிக் குடிக்க, அவ்வளவு இனிமையாக இருக்கும்.சளித்தொல்லைக்குத் தீர்வான இது சத்து மிகுந்ததும் கூட. # ஒட்டுமாவு:பச்சரிசியைநெய் , ஜீனி, முட்டை தேங்காய்ப்பால் விட்டு நன்கு வறுத்து மணல் போன்ற பக்குவத்தில் டப்பாவில் அடைத்து வைப்பார்கள்....