Posts

Showing posts from March, 2011

கூகுள் குரோம் குறள் வெண்பாக்கள்

நமது வாழ்வில் இணையம் இரண்டறக் கல்ந்துவிட்ட இன்றைய சூழலில், இணையத்தளங்களைப் பார்க்க உதவும் ப்ரௌசர்கள் இணையத்தில் உலவுபவர்களின் தேவைக்கேற்பவும், ரசனைக்கேற்பவும் தொடர்ந்து மாற்றத்துக்குள்ளாகின்றன.மோட்டார் பைக்குகள், கார்கள்,ஆடை அணிகலன்கள்,மொபைல்போன்கள் போன்றவை பயனீட்டாளர்களை எவ்விதம் ஈர்க்கின்றன என்பதை அறிந்து அவற்றை உற்பத்தி செய்பவர்கல் தமது தயாரிப்பை உலகச் சந்தையில் நிலைநிறுத்த என்னென்ன உத்திகளைக் கையாளுகிறார்களோ, என்னென்ன புதுமைகளிப் புகுத்துகிறார்களோஅதே போன்றுதான் கண்ணீப் பயனீட்டாளர்களை ஈர்த்து விட அவை சார்ந்த நிறுவனங்கள் துடிதுடிக்கின்றன.உற்பத்தியாளர்களிடையே போட்டி மிகுவது பயனீட்டாளர்களுக்குத்தான் நல்லது.விலைக்குறைவும்,  சிறந்த தரமும் வாய்க்க இது வழிகோலுகிறது.அந்த வகையில் ப்ரௌசர்களிடையே நிலவும் போட்டியானது, பலவித மேம்படுத்தப்பட்ட வசதிகள் பயனீட்டாளர்களுக்குக் கிடைக்க வசதி செய்கிறது. ஏதேனும் புதுமைகளைப் புகுத்த ஒவ்வொரு நிறுவனத்திலும் ஒரு நிபுணர்குழு மூளையைக் கசக்கிப் பிழிந்து கொண்டேதான் இருக்கிறது. ஐந்தாண்டுகளுக்கு முன்பு ப்ரௌஸ் செய்ததையும் இன்ற்ய் செய்வதையும் ஒப்பிட்டுப் பார்த்தா...

விடை தாரீர்!

வந்தியத் தேவனாம் வல்ல வரையனும் குந்தவை தேவியும் கொண்டதுடன் - நந்தினி என்னும் பழுவூர் இளவரசி யும்கொண்டு பொன்னியின் செல்வனும் பார்த்திபனும் - இன்னுமே எண்ணற்ற மாந்தர் இடங்கள் நிகழ்வுகள் கொண்டு புதினம் குறைவறப் - பண்ணியே என்றுந் தமிழர் இதயத்தில் வாழ்ந்திடும் தன்னிக ரில்லாத் தலைவனைக் கண்டறிந்து என்னவென் றிங்கே எழுதுவீர் -நன்றாகப் பின்னூட்டத் தில்தான் பெயர் ! மேற்காண் வினாவுக்கு விடையளியுங்கள். வினாவின் பாவகை என்னவோ அதே பாவகையில்தான் விடையும் அமைந்திருக்க வேண்டும்!

இங்க கொஞ்சம் எட்டிப் பாத்துட்டுப் போங்க!

எத்தனையோ பேரிடத்தில் ஏட்டிலும் நாவிலும் என எழுத்திலும் ஒலியிலும் சிக்கிச் சின்னாபின்னமான தமிழ் , தனது தூய வடிவத்துடன் இன்று எங்காவது இருக்கிறதாஎனத் தேடிப்பார்த்துச்சலிப்புற்ற தருணத்தில், தற்செயலாக ஓரிடத்தில் கண்டேன். சந்திப் பிழைகளும், வாக்கியப் பிழைகளும் பொங்கிப் பெருகி வழிந்தோடும் நாளிதழகள் மற்றும் பருவ இதழகள்,247 எழுத்துகளை 123 எனப் பாதியாகக் குறைத்து ஒரேமதிரி ஒலித்து ஒலிக்கொலை புரியும் தொகுப்பாளப் பெருமக்கள் , பதினைந்து ஆங்கிலச் சொற்களுக்கு ஒரு தமிழ்ச்சொல் என்ற விகிதத்தில் உரையாடும் தமிழ்த் திரைப்படக் காட்சிகள், தமிழில் பேசினால் அபராதம் விதிக்கும் அரைகிறுக்குகள், என் மகளுக்குச் சரியாகத் தமிழில் பேச வராது எனப் புளகாங்கிதம் அடையும் தமிழ்ப்பெற்றோர்கள் , தமிழகத்தின் சந்து பொந்துகள், இண்டு இடுக்குகள், மூலை முடுக்குகள், மேடுபள்ளங்கள், காடுகுன்றுகள், கடல் வயலகள், எங்கெங்கு தேடியும் காணாத தூய தமிழைத் தொலைக்காட்சிகளின் மொழிமாற்று நிகழ்ச்சிகளில் கண்டேன். "நாம சேஃப்டியா இருக்கோமாங்கிறத கன்ஃபர்ம் பண்ணிட்டுத்தான் நெக்ஸ்ட் மூவ் என்னண்ணு திங்க் பண்ணனும்" இந்த உரையாடல் சாதாரணமாகத் தமிழ்...

தமிழ்த்தாய் திருப்பள்ளியெழுச்சி

'ரசனை' ஆகஸ்ட் 2010 இதழில் திரு.உ.தங்கவேல் சரவணன் அவர்கள் எழுதிய "தமிழ்த்தாய் திருப்பள்ளியெழுச்சி" படித்தேன். இன்பம் ஊற்றெடுக்கும் இனிய பாடல் அது.பலமுறை படித்து மகிழ்ந்தும் தீரவில்லை. என்னை வெகுவாகக் கவர்ந்த நான்கு அடிகளை இங்கு தருகிறேன். "நன்னிலை தீர்ந்திங்கு நலிவினை ஏற்றோம்          நாலுபேர் எங்களை ஏசிடக் கேட்டோம் அன்னையுன் ஆளுமை பின்னடைந் ததுவோ         ஆண்டசெங் கோலதும் தாழ்ந்துபோ நதுவோ புன்னகைப் பூமுகம் முன்வந்து காட்டாய்        புதுஎழுச் சிக்கொரு தெம்பினை ஊட்டாய் இன்னமும் எங்களைக் காக்கவைக் காதே       இருந்தமி ழே!பள்ளி எழுந்தரு ளாயே! ஓசையின்பமும் பொருளின்பமும் ஒருங்கே அமைந்து உள்ளுதொறும்  உள்ளுதொறும் உவகையளிக்கும் ஒப்பற்ற பாடலது. இன்னமும் என் மனத்தில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.ரசனை  இதழில் மரபுக்கு என்றுமே தனியிடம் உண்டு!

வயிற்றின் கொடுமை

பெண்பாற்புலவர்களில் பெரும்புகழ் பெற்றவர் ஔவையார். எளிமையான கருத்துகளின் மூலம் வலிமையான கருத்துகளைப் பதித்தவர்.. ஔவையார் என்ற பெயரில் புலவர் பலர் இருந்திருக்கின்றனர் என்பது பலரும் அறியாத ஒன்று."அறம் செய விரும்பு" என்னும் ஔவையாரின் ஆத்திசூடியிலிருந்துதான் பலரது கல்வியும் துவங்கியது;துவங்குகிறது. அறநெறிக்கருத்துகளை அவ்வளவு அழகாகப் பாடியிருப்பார் ஔவையார். நல்வழி என்னும் அவரது தொகுப்பில் இடம் பெற்ற அவரது "சேவித்தும் சென்றிரந்தும் தெண்ணீர்க் கடல்கடந்தும் பாவித்தும் பாராண்டும் பாட்டிசைத்தும்-போவிப்பம் பாழின னுடம்பை வயிற்றின் கொடுமையால் நாழி அரிசிக்கு நாம்"  என்ற பாடலில்தான் வயிற்றின் கொடுமையை அவர் எவ்வளவு ஆணித்தரமாக நிறுவுகிறார்.என்ற பாடலில்தான் வயிற்றின் தேவையை அவர் எவ்வளவு ஆணித்தரமாக நிறுவுகிறார். ஒரு சாண் வயிற்றின் தேவையை நிறைவேற்ற மனிதன் என்னென்ன வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கிறது எனப் பட்டியலிடுகிறார். கூழைக்கும்பிடு போடுவதிலிருந்து கடவுளுக்குக் கும்பிடு போடுவது வரை சேவிப்பதும்  வணங்குவதும் எல்லாமே அதற்காகத்தான்! "என்ன கருப்பசாமிப் பிள்ளைவாள் " கதை நினைவுக்...

பல்-பள்ளம்-பழம்

உயர்தனிச் செம்மொழியாம் தமிழின் சிறப்புகளுள் 'ழ' கரமும் ஒன்று.அது மட்டுமல்லாமல் ண,ற, ள என்னும் எழுத்துகளும் தமிழின் தனிச் சிறப்புகளாம். பொதுவாக ழ, ல மற்றும் ள என்னும் மூன்று எழுத்துகளும் இன்று தமிழ் கூறும் நல்லுலகத்தின் நாவுகளில் ஒரே எழுத்தாகிவிட்டன.இனத்திலும், சாதியிலும், மததிலும்,நிறத்திலும், பணத்திலும் வேற்றுமைகளை மிகத்தீவிரமாகக் கடைபிடிப்பவன் உச்சரிப்பில் மட்டும் ஒற்றுமையைப் பேணுகிறான்.இனத்தில் வேறுபாடு இருந்தால் போதாதா, எழுத்தில் வேறு வேண்டுமா என நினைக்கிறானோ என்னவோ? வெள்ளம் என்று சொல்வதைக் கேட்டு எழுதும் போது எந்த 'ல' என்று கேட்கிறான். தமிழில் ஒரே 'ள' தான் இருக்கிறது என்று அழுத்தந்திருத்தமாக ஒலித்துக்காட்டினாலும் 'ள' என்று ஒலி வேறுபாடுறக் கூறப்படுவதை அவனால் விளங்கிகொள்ள முடியவில்லை.ல, ள மற்றும் ழ இடையிலான  ஒலி வேறுபாடு அவனுக்குப் புரியமாட்டேனென்கிறது. எளிமையான ஒரு பயிற்சியை இங்கு கற்றுத்தருகிறேன். ல,ள,ழ ஆகிய மூன்று எழுத்துகளையும் அவற்றின் ஒலிப்பையும் எளிதில் நினைவு வைத்துக் கொள்ள இது உதவும். 'ல்' என்னும் எழுத்துக்குப் 'பல்' எ...

சார்.... ஒரு நிமிஷம்!

கும்பகோணம் அருகிலுள்ள திருவிடைமருதூரைச் சேர்ந்த எனது நண்பர் திரு.கமாலுதீன் அவர்களுடன்  ஒருமுறை உணவருந்திக்கொண்டிருக்கும்போது "உணவருந்தி முடித்தபின் இலையில் ஒரு பருக்கைச் சோறு மீதம் இருந்தாலும் அது தஞ்சைப் பகுதியில் அவமரியாதையாகக் கருதப்படும்" என்றொரு கருத்தைத் தெரிவித்தார். உண்மைதான், உண்டபின் தட்டிலோ இலையிலோ மீதம் வைப்பது எத்தனையோ பேரின் உழைப்பை வீணடிப்பது மட்டுமின்றி "உணவு என்பது இரவில் எங்களுக்குக் கனவு" என்று எத்தனையோகோடி மக்கள் ஒருவேளை உணவே இல்லாமல் உறங்கச் செல்லும் அவலத்தை எண்ணிப்பார்க்கையில் அது ஒரு அறங்கெட்ட செயல் என்றும் தோன்றுகிறது. ஜென் கதை என்று நினைக்கிறேன், எப்போத்தோ படித்தது, தட்டில் இருக்கும் உணவில் இருந்து ஒரே ஒரு அரிசியை எடுத்துப் பார்த்து, விதைப்பிலிருந்து எத்தனை இடங்களைக் கடந்து நம்முமன் உணவுத்தட்டில் வந்து அமர்ந்திருக்கிறது எனச் சீடனுக்குக் குரு உபதேசிப்பதாக அக்கதை செல்லும். சாப்பிடுவது என்பது ஒரு கலை.எனது பள்ளித்தோழி ஒருவர் உணவருந்தும்போது கவனித்திருக்கிறேன் , அவர் உணவருந்திய இலையில் மிகச்சிறிய அளவில் உப்பும், சில மிளகாய்த்தோல்களுமே கிடக...

கவிதைச் சவால்

வண்டமிழ் மொழியதன் இலக்கணந் துலக்க நன்னூ லென்னும் செந்நூல் செப்பிக் கற்கும் யாரும் ஐயம் தீரச் செய்தவர் பெயரைச் சொல்லு வீ ரே! கவிதை மூலமாக விடை அளிக்க அடுத்த கேள்வியைக் கொண்டு வந்துள்ளேன், கேள்வி அமைந்துள்ள பாவகையிலேயே பதிலையும் தாருங்கள்!

சூலூர்-பெயர்க்காரணம்

கோயம்புத்தூர்  மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்படும் முன்பு எங்கள் வசிப்பிடம் பல்லடம் தாலுகாவில் இருந்தது. தற்போது பல்லடம் தாலுகா கோயம்புத்தூரிலிருந்து பிரிக்கப்பட்ட திருப்பூர் மாவட்டத்துக்குள் வருவதால், பல்லடம் தாலுகாவிலிருந்த சூலூர், சுல்தான்பேட்டை ஒன்றியங்கள் மட்டும் கோயம்புத்தூர் மாவட்டத்திலேயே சூலூரைத் தலைமையிடமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட புதிய தாலூகாவில் அமைகின்றன.எனவே எங்களது புதிய தாலுகாத் தலைநகரமான சூலூரைப் பற்றி ஒரு சுவையான தகவலைப் பதிவு செய்ய விரும்புகிறேன். கோயம்புத்தூர் மாநகரின் நீட்சியான சூலூர் நகரம், தேசிய நெடுஞ்சாலை எண் 67 இல் அமைந்துள்ளது.நொய்யலாற்றங்கரையிலமைந்துள்ள இந்நகரில் எந்நேரமும் குளிர்நத காற்று வீசிக்கொண்டிருக்கும் அழகான படகுத்துறை உண்டு. கரையை ஒட்டி முன்பு சூரல் எனப்படும் பிரம்பு அடர்ந்து வளர்ந்திருந்ததால்தான் சூரலூர் என்றிருந்து காலப்போக்கில் மருவி சூலூர் என்றானது எனப் படித்திருக்கிறேன் ! கேரள மாநிலத்தையும், கோயம்புத்தூரையும் இந்தியாவின் பிறபகுதிகளுடன் இணைக்கும் பெரும்பாலான ரெயில் வண்டிகளும் சூலூரைத்தான் கடந்து செல்கின்றன.இவ்வூரில் விமானப் படைத்தளமும் அமைந்துள...

"காதல்" ங்கிறது.....

காதலைத்தான் நமது திரைப்படங்கள் எப்படியெல்லாம் கதறக் கதறக் கழுத்தைத் திருகியுள்ளன  என்பது நாமனைவரும் அறிந்ததே, நிற்க!"காதல்ங்கிறது என்று ஆரம்பிக்கும் வியாக்கியான வசனங்களும், "காதல் ஒண்ணும்" என்று ஆரம்பிக்கும் வக்காலத்து வசனங்களும் கேட்டுக் கேட்டுக் காதும் காற்றும் புளித்துப் போயிருந்தாலும், காதலை நமது திரைப்பட உற்பத்தியாளர்களும், திரைப்படம் பார்த்து இன்பம் துய்ப்பவர்களும் அவ்வளவு எளிதில் விட்டுவிடத் தயாராக இல்லை.எனவே புதிது புதிதாகச் சில வசனங்களை இங்கே தந்திருக்கிறேன். யார் வேண்டுமானாலும் இவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று இதன் மூலம் உறுதியளிக்கிறேன். ஒரே பொருளை இரு பொருளில் அதாவது ஒரே வஸ்துவை இரண்டு அர்த்தங்களில் தந்துள்ளேன், எது வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள்!பெரும்பாலும் க்ளைமாக்ஸில் நாயகன் நாயகியிடம் சொல்ல ஏற்றவை! டூத்ப்ரஷ்: - காதல்ங்கிறது ஒரு டூத் ப்ரஷ் மாதிரிங்க, எந்நேரமும் உங்களைப் புத்துணர்ச்சியோடு வச்சிருக்குங்க! (அல்லது) காதல் ஒண்ணும் டூத் ப்ரஷ் கிடையாதுங்க, நீங்க காலையில எடுத்து யூஸ் பண்ணிட்டு பாத்ரூமில கடாசிட்டுப் போக, அது உங்க செருப்பு மாதிரிங்க, ப...

அல்ல-அன்று-அல்லர்-அல்லன் -அல்லள்

"பந்தைப் பிடித்தது அவன் அல்ல" "நேற்று வந்தவர் இவர் அல்ல" "அது அவனுடைய நூல் அல்ல" மேற்கண்ட தொடர்களுள் சரியானவை எவை? எவையுமே அல்ல! "அல்ல" என்னும் சொல்லானது அஃறிணைப் பன்மைச் சொற்களுக்குமட்டுமே உரியதாகும். "மேற்கண்ட நான்கு தொடர்களுமே சரியானவை அல்ல" இங்கு "தொடர்கள்" என்ற அஃறிணைப் பன்மை வரும்போது "அல்ல" என்பதைப் பயன்படுத்தலாம். ஆனால் "அவன்" என்று வரும்போது "அல்லன்" என்றும் "அவர்" என்று வரும்போது "அல்லர்" என்றும் "அவள்" என்று வரும்போது "அல்லள்" என்றும் அது என்று வரும்போது "அன்று" என்றுமே  வரவேண்டும். முதல் தொடரைப் பார்ப்போம். "பந்தைப் பிடித்தது அவன் அல்ல" பந்தைப் பிடித்தவன் ஆண்பாலாதலால் "பந்தைப் பிடித்தவன்" என்றும் "அல்லன்" என்றும் வந்து "பந்தைப் பிடித்தவன் அவன் அல்லன் " என்று வருவதே சரியான தொடராகும்.. "நேற்று வந்தவர் இவர் அல்லர்" என்று இரண்டாவது தொடர் அமைய வேண்டும். "அது அவனுடைய நூல் அல்ல"- இத...