Posts

மேகமலை

 நிறைய வான்டர்லஸ்ட்டுகளின் லிஸ்டில் சமீப காலங்களில் இடம் பிடித்திருக்கும் ஒரு பெயர் 'மேகமலை'.  தமிழ்நாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமாகிக் கொண்டிருக்கும் மேகமலை, "  இந்த முறை ஒரு சேஞ்சுக்கு மேகமலையை  ட்ரை பண்ணிப் பார்ப்போமே...!" எனச்  சுற்றுலா அன்பர்களைக் கவர்ந்து இழுத்துக் கொண்டிருக்கிறது.   மேகமலையில் அப்படி என்ன இருக்கிறது ....? ஊட்டி போலப் பரபரப்பான, ஆர்ப்பாட்டமான ஒரு மலைவாழிடமோ,  கொடைக்கானல் போலக் கூட்டம் குவிந்து கிடக்கிற மலை வாழிடமோ,  ஏற்காடு போன்ற ஒரு  சிறுநகரமோ அல்ல இந்த மேகமலை .  இன்னமும் சொல்லப்போனால் மேகமலையை ஓர் ஊர் என்று கூடச் சொல்ல முடியாது‌  அங்கொன்றும் இங்கொன்றுமாக ஓரிரண்டு உணவகங்கள், ரிசார்ட்டுகள், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புகள், சில அரசு அலுவலகங்கள் , அலுவலர் குடியிருப்புகளை மட்டுமே கொண்டிருக்கின்ற மேகமலையின் ஸ்பெஷாலிட்டி என்னவென்றால், அந்த அமைதியும் தனிமையும் கலந்த அழகும், சிலு சிலுவென்று கிளைமேட்டும்தான்.  நாம் ஏறத் தொடங்கிய நாளில் வெயில் செம காட்டு காட்டிக் கொண்டிருந்தது.  ஏகப்பட்...

கோவா

 கோ என்பதால் போ என்கிறாய்...  வா என்பதால் வா என்கிறாய்....!  கோவா, ஆனாலும் ஒரு ஸ்வீட் லொகேஷன் . ஏப்ரல் 28 கடைசி வேலை நாளில் மாலை 6 மணிக்கெல்லாம் கிளம்புவதாகத் திட்டம். மங்களூருவில் உள்ள பனம்பூர்க் கடற்கரை, காசர்கோட்டின் கப்பில் கடற்கரை ,கண்ணூரின் கவ்வாயிக் காயல் படகு வீடுகள், வடகரயின் சர்காலயா ஆர்ட்ஸ் அண்ட் கிராஃப்ட் மியூசியம், தலச்சேரிக் கோட்டை....  மூன்று நாட்கள் பேருந்துப் பயணம் என முடிவு செய்து பாலக்காடு- மங்களூர் ஸ்விஃப்ட் சர்வீஸ் ஏசி பஸ் டிக்கெட் புக் செய்துவிட்டுக் காத்திருந்த அடுத்த நாளில் லியோராஜ் அந்த பவுன்சர் கேள்வியை வீசினார்.  " மங்களூர் வரைக்கும் போறதுன்னு ஆயிருச்சு... அப்படியே கோவா போயிட்டா என்ன ....?"  பட் அந்த டீலிங் எங்களுக்கு ரொம்பப் பிடிச்சி இருந்துச்சு . கடைசி நேரத்தில் ட்ரெயின் டிக்கெட் கிடைக்காதே எனத் திருப்பி அவரிடமே கேட்க, " கிரான்ட் விட்டாரா இருக்க, ட்ரெயின் எதற்கு ....?" எனப் பன்ச் அடித்து மூன்று நாள் பயணத்திற்கு முடிவுரை எழுதி, ஐந்து நாள் பயணத்திற்கு அடித்தளமிட்டார். அடுத்த நிமிடம் பஸ் புக்கிங் கேன்சல் செய்யப்பட்டது.  ...

இளையோர் சூடா வளையோர் கொய்யார்.

 ஏ.ஆர்.ரஹ்மான் நடத்தும் இசைப் பேராட்சியும், நடிப்பு அரக்கன் விக்ரமின் பேராற்றலும், மணிரத்னத்தின்‌என்றும் அலுக்காத திரை மொழியும் தொடர்ந்து இரண்டாவது முறையாக பொன்னியின் செல்வன் II இரவுக்காட்சிக்கு புக் செய்ய வைத்தன. இளையோர் சூடார் பாடலைக் கேட்கும்பொழுது உடன் வந்திருந்த நண்பர், "இது திரைப்பாடல் போலத் தெரியவில்லையே....! செய்யுள் பாடத்தில் படித்தது போலத் தெரிகிறது....!" என்று டவுட் கேட்டார்.  அங்கேயே ஆற்ற ஆரம்பித்தால் அருகில் அமர்ந்திருப்போர் அடிக்க வந்து விடுவார்கள் என்பதால் முகநூலிலும் வலைப்பூவிலும் பதிவிடுகிறேன், படித்துக் கொள்ளுங்கள் பிறருக்கும் பயன்படும் என நான் கூறிக் கொண்டிருக்கும் பொழுதே ஜெயம் ரவி மேல் மாடத்திலிருந்து பாய்ந்து பாண்டிய ஆபத்துதவிகளைத் துரத்தத் தொடங்கி இருந்தார்.  சோழ நாட்டில் குடவாயில் என்னும் ஊரைச் சேர்ந்த கீரத்தனார் எழுதிப் புறநானூற்றில் இடம்பெற்றிருக்கும் ஒரே பாடல் அது .  "இளையோர் சூடார் வளையோர் கொய்யார்....!" புதுக்கோட்டைப் பகுதியில் இருக்கும் ஒலியமங்கலம்தான் அன்றைய நாளில் ஒல்லையூர் என்பது அறிஞர் தெளிவு.  ஒல்லையூர் நாடு என்று என்று பு...

முன்னாள் தலைவர்- முந்நாள் தலைவர் ... எது சரி....?

 அடிக்கடி வரும் குழப்பங்களுள் இதுவும் ஒன்று. இரண்டில்  எது சரி என்றால் இரண்டுமே சரிதான்....! பயன்படுத்தும் இடத்தைப் பொறுத்து.....!   முந்நாள் -  மூன்று நாள்   முன்னாள்-  முன்பிருந்த நாள் , முந்தைய நாள்   முந்நாள்  தலைவர் என்று சொன்னால் மூன்று நாட்களுக்குத் தலைவராக இருந்தவர் ,இருப்பவர், அல்லது இருக்கப் போகிறவர் என்று பொருள்.  முன்னாள் தலைவர் என்றால் இதற்கு முன்பு தலைவராக இருந்தவர் எனப் பொருள்.   முன்னால் என்றால் முன்பாக என்பதில் பெரும்பாலும் யாருக்கும் குழப்பம் இல்லை . அதேபோல முந்நூறு , முன்னூறு  என்பதிலும் பலருக்கும் குழப்பம் வரும் . மூன்று + நூறு = முந்நூறு  முன் + நூறு = முன்னூறு  (இதற்கு முன்பு நூறு எனப் பொருள்). மூன்று + நூறு  என்பதில்   நன்னூல் இலக்கண விதிப்படி மூன்று என்பதில் 'று' மறைந்து ' மூன் ' என்றாகி , ,' மூன் ' என்பதில்    ' மூ'  என்பது 'மு'  எனக் குறுகி,  'ன்'  என்பது வருமொழிக்கு ஏற்ப 'ந்' எனத் திரிந்து முந்நூறு எனப் புணர்கிறது.  இலக்கண விதிகளை ம...

கடுப்பேத்திட்டாரு மை லார்ட்

 மாலை 3 மணிக்கு செல்ஃபோனில்  அழைத்து  ”ஒரு செட் டிரஸ் எடுத்து வச்சுக்கோங்க… ஷார்ப்பா ஈவினிங் செவன் ஓ க்ளாக் வீட்டில் உங்களை பிக்கப் பண்ணிக்கிறேன்…!” என்றார் நண்பர்.    “என்ன விசேஷம் …எங்கே போறோம்..?” எனக் கேட்க,  “ சும்மா ஒரு ரோட்-ட்ரிப் போகலாம்…மிட்-நைட்ல  மூணார் ஹில்ஸ் போயிட்டு அப்படியே மறுநாள் அந்தப் பக்கமா அடிமாலி வழியா இறங்கிடலாம்..!”  என்றார்.  கேட்ட அடுத்த நொடியே ப்ளான் பிடித்துப் போனது. டிராவல் பேகை எடுத்து பேக் செய்து 7 மணி எப்பொழுது வரும் எனக் குறுகுறுப்புடன் அமர்ந்திருக்க ,சரியாக 7.05 உக்கு வாசலில் கார் வந்து நின்றது.     மிகப்பெரிய சர்ப்ரைஸ். புத்தம் புது காம்பாக்ட் செடான் கார்.   நண்பர் முதலில் ஒரு என்ட்ரி லெவல் ஹேட்ச்பேக் வைத்திருந்தார் .அதில்தான் வருவார் என எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் .பிராண்ட் நியூ செடானைப்  பார்த்ததும் ஸ்வீட் ஷாக்கிங்காக  இருந்தது . சர்ப்ரைஸ் கொடுத்த சந்தோஷத்தில்  நண்பர்  ”கமான்… கெட் இன்.. லெட்ஸ்  ஸ்டார்ட்  அவர் ரோட்-ட்ரிப்  ..."!என்றார்  உற...

முப்பது ரூபாய்க்கு முழு சாப்பாடு...கோவையில் மற்றுமொரு உணவுப்புரட்சி

 அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்  தொகுத்தவற்று ளெல்லாந் தலை. இவையெல்லாம் வள்ளுவர் வாக்கு. அவர்தம் வாக்கை மெய்ப்பிக்க RVS குழுமத்தின் பத்மாவதி சோஷியல் சர்வீஸ் மையம் கோயம்புத்தூரில் சூலூர் குமரன் கோட்டத்தில் திறந்துள்ள உணவகத்தில் 30 ரூபாய்க்கு சைவச் சாப்பாடு தருகிறார்கள்.  இன்று திறக்கப்பட்ட இந்த சேவை நோக்கிலான உணவகத்தில் காலை , மதியம் , இரவு மூன்று வேளையும் இதேபோல மிகக்குறைவான விலையில் வெரைட்டியான சைவ உணவுகள் மிகத் தரமாகக் கிடைக்கின்றன.  நூற்றுக்கணக்கான பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து உண்ணக்கூடிய மிகப்பெரிய அறை , மிகத் தூய்மையாகப் பராமரிக்கப்படும் ஒட்டுமொத்த வளாகம், பெரிய கார் பார்க்கிங் வசதி , தூய்மையான கழிப்பறை வசதி , அடர்ந்த மரங்களடங்கிய குளுமையான, பசுமையான சூழல் என இந்த சேவை மையம் கம்பீரமாக நிற்கிறது . இன்றைய மதிய உணவு சோறு , சாம்பார் ,புளிக்குழம்பு, ரசம் , பாயசம் , கூட்டு , பொரியல் , ஊறுகாய் , மோர் என   மிகச்சுவையாக இருந்தது.  காலை மாலை இடைப்பட்ட நேரங்களில் டீ, காஃபி, ஸ்நாக்ஸும் உண்டு. ஏ...

தங்கம்

 ஹீரோ ஹீரோயின் இல்லை; டூயட் சாங்ஸ் இல்லை; பஞ்ச் டயலாக்குகள் இல்லை;  வில்லன், காமெடியன்கள் இல்லை; ஃபைட் சீன்ஸ் இல்லை; அசட்டுத்தனங்கள் எதுவும் இல்லை; அடாவடி வசனங்கள் இல்லை.... ஆனாலும் 140 நிமிடங்கள் நம்மை அப்படியே கட்டிப்போட்டு விடுகிறது அமேசான் ப்ரைமில் வெளியாகியிருக்கும் தங்கம். (THANKAM) . திருச்சூர் ,கோயம்புத்தூர், மும்பை என மூன்று வெவ்வேறு மாநிலங்களில் உள்ள மாநகரங்களுக்குக் கதை மாறி மாறிப் பயணித்தாலும்  இன்வேஸ்டிகேஷன்- சஸ்பென்ஸ் த்ரில்லரான  இந்த மூவியின் சிறப்பம்சமே அந்தந்த மாநில மக்கள் அவரவர் மொழியிலேயே பேசிக் கொள்வதுதான்.  தமிழ், மலையாளம், இந்தி, மராத்தி, ஆங்கிலம் எனப் படம் முழுவதும் ஐந்து மொழிகளில் கலந்து கட்டி அடித்தாலும் எளிதில் புரியக்கூடிய வகையில் காட்சிகளை அமைத்திருக்கிறார்கள்.  அதிலும் கேரளக் கேரக்டர்கள் தமிழ்நாட்டுக்கும் மும்பைக்கும் வரும்போது தமிழ், ஆங்கிலம், இந்தியில் தட்டுத் தடுமாறிப் பேசுவதும் அதேபோலத் தமிழ்நாட்டுக் கேரக்டர்கள், மும்பைக்  கேரக்டர்களும்  மலையாளம், இந்தி, தமிழ் ஆங்கிலம் எனப் பிற மொழிகளில் தட்டுத் தடுமாறிப் பேசுவதும்...