டீக்கடை

 2009 அல்லது 10 என நினைக்கிறேன்.... தென்மலை செல்லும் வழியில் செங்கோட்டைக்கு முன்பு வாசுதேவநல்லூருக்கும் கடையநல்லூருக்கும் இடையில் ஒரு டீக் கடையில் நாங்கள் மூன்று பேரும் டீ குடித்தோம். குடித்து விட்டு 

 எத்தனை ரூபாய் எனக் கேட்கக் கடைக்காரர் ஆறு ரூபாய் என்றார். 

 மூன்று பேர் குடித்திருக்கிறோம் ...எனவே மூவாறு பதினெட்டு எனக் கணக்கெட்டு இரண்டு பத்து ரூபாய்த் தாள்களை எடுத்து நீட்டினேன்.  அவர் சில்லறை இல்லை என்றார்.  சரி இரண்டு ரூபாய்க்கு ஏதாவது மிட்டாய் கொடுங்க என்றேன் .

  அவர் ஏகத்துக்கும் குழம்பி மொத்தமே ஆறு ரூபாய் தான் என்றார் .

அதாவது ஒரு டீயின் விலை இரண்டு ரூபாய்தான்.

நீங்க எங்கிருந்து வர்றீங்க என அவர் என்னைப் பார்த்து வியக்க ,

 மொத்தமே ஆறு ரூபாய் தானா என நான் வாய் முழுவதும் பிளக்க,

 பேசாமல் இந்த ஊருக்குக் குடி வந்துவிடலாம் போலயே என நான் நினைக்க,

   பேசாமல் இவங்க ஊருக்கு போய் டீக்கடை போடலாம் போலயே என டீக்கடைக்காரர் நினைக்க....

    ஒரே ரணகளம் தான்....!

Comments

Popular posts from this blog

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

தலைமை ஆசிரியர்- அறிந்து கொள்வோம்-உடம்படுமெய்‌ - புணர்ச்சி

எண்ணை.... எண்ணெய்...எது சரி ?