இலக்கும் பயணமும்
“It’s the not the Destination, It’s the journey.” -Ralph Waldo Emerson கவி- ரம்மியமான மலைப்பகுதி...அதுல அப்படி என்ன விதமான ஈர்ப்பு விசை இருக்குன்னு தெரியல.... மறுபடியும் மறுபடியும் ஈர்த்துட்டே இருக்கு..... வெள்ளிக்கிழமை பிற்பகல்ல ஒரு ஐடியா தோணுச்சு. அடுத்த நாளே கே எஸ் ஆர் டி சி யோட ஃபாரஸ்ட் டூர் பஸ்ல ஒரு ட்ரிப் போகணும்னு...... முடிவு பண்ணதுமே கரூரில் இருக்கிற நண்பர் திரு சுரேஷ் அவர்களுக்கு போன் அடிச்சேன் . நம்மைப் போலவே அவரும் ஒரு வாண்டர்லஸ்ட். எங்கே போறதுன்னு டக்குனு ஒரு ஐடியாவும் கிடைக்கல.... அதனால ஓசூர் பக்கம் அப்படியே சும்மா ஒரு லாங் டிரைவ் போயிட்டு இருக்கேன்னார். விஷயத்தைச் சொன்ன அடுத்த ரெண்டு மூணு நொடி சத்தத்தையே காணோம். என்ன ஆச்சுன்னு கேட்டேன். U- Turn போட்டுட்டு இருக்கேன்னார். அவ்வளவுதான்.... தேனில காலை 8 மணிக்கு மீட் பண்ணலாம்னு முடிவாச்சு . நைட் 11 மணிக்கு கால் பண்ணினார் சுரேஷ் சார். கார் பிரேக் டவுன் ஆனதால சேலம் அருகே மாட்டிக்கொண்டதால் வர இயலாதுன்னு கூற, நோ ப்ராப்ளம்... சோலோ ட்ரிப்னு முடிவு பண்ணி, விடியற்காலை நாலரை மணிக்குக் க...