தொறப்ப்க்கை- வட்டாரச் சொற்கள்
திறவுகோல் என்பதற்குக் கொங்குப் பகுதியில் நிலவிவரும் வட்டாரச் சொல் தொறப்புக்காய். திறப்புக்காய் என்பதைச் சொல்லும் பொழுது தொறப்க்காயி என்கிறார்கள். சிலர் திறப்புக் கோல் என்பதை தொறப்புக்கோலு என்கிறார்கள்.
சாவி என்பது தமிழாகிவிட்ட நிலையில், இன்று பொதுவாகப் பல இடங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. எதற்கு இரண்டு எழுத்துக்களைப் பயன்படுத்தி மூன்று மாத்திரைகளைச் செலவழிக்க வேண்டும் என ஒரே எழுத்தாக, இரண்டு மாத்திரை அளவில் கீ (KEY) எனச் சுருக்கிப் பயன்படுத்துவோர் பெருகியாயிற்று.
"பூட்ட வேண்டாம் ....தொறப்ப்க்காயி ஒணணுதான் இருக்குது.... நாதாங்கியை மட்டும் போடு..." எனத் தாழினை நாதாங்கி என்று கொங்குப் பகுதியில் குறிப்பிடுகிறார்கள் .
இன்று திறவுகோல் வழக்கம் மெள்ள மறையத் தொடங்கி திறவுகோட் ( CODE - PASSCODE ) எனும் டிஜிட்டல் பூட்டு சாவி யுகத்துக்குள் நுழைந்திருக்கிறோம்.
முகங்கள், கைரேகைகள், கருவிழிப் படலப் பதிவுகள், குரல் அடையாளங்கள் உள்ளிட்ட பயோ டிஜிட்டல் மற்றும் பேட்டர்ன்கள், பாஸ்வேர்டுகள், பின்கள் ( PIN ) போன்ற தொடுதிரைச் சாவிகளுமே விரைவில் அவுட் டேட்டட் ஆகி விடக்கூடிய அளவு தொழில்நுட்ப பாய்ச்சல் வேகம் எடுத்து இருக்கிறது.
இத்துடன் இப்பொழுது sign off செய்து முகநூல் கணக்கைக் கணினியில் பூட்டுவோம்.
Comments
Post a Comment
நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!