Posts

எண்ணை.... எண்ணெய்...எது சரி ?

பலரும் எண்ணை என்று சொல்லியும் எழுதியும் வருகின்றனர். எண்ணெய் என்பதுதான் சரி. அதிலும் எண்ணெய்‌ என்பது நல்லெண்ணெய் எனப்படும் எள் எண்ணெயை மட்டுமே குறிக்கும் .ஆனால் வழக்கத்தில் எண்ணெய் என்பது பொதுப்பெயர் ஆகி வெகு நாட்கள் ஆகிவிட்டது. எள் +நெய் என்பதே எண்ணெய் எள் + நெய் ~ எண்ணெய் நெய் என்பது பொதுப்பெயராகத்தான் இருந்திருக்கிறது. எள்ளில் இருந்து எடுக்கப்படும் நெய்தான் எண்ணெய். எள்+ நெய் எப்படி எண்ணெய் ஆகிறது ....? மெய்யீற்றுப் புணர்ச்சி விதியைப் பார்ப்போம். இரண்டு சொற்கள் ஒன்றுடன் ஒன்று புணரும் போது முதற்சொல்லான நிலைமொழியின் இறுதி எழுத்து மெய்யெழுத்தாக இருந்தால் அது மெய்யீற்றுப் புணர்ச்சி ஆகும். எள் +நெய் என்பதில் 'ள்' என்னும் மெய்யெழுத்து நிலை மொழியின் ஈற்றெழுத்தாக இருக்கிறது. வருமொழியின் முதல் எழுத்துக்கள் 'த' அல்லது 'ந' என்பனவாக இருக்கும் பொழுது நிலை மொழியின் ஈற்றெழுத்துக்கள் ன்,ல்,ண்,ள் என்பனவாக இருந்தால் புணர்ச்சி எப்படி நடக்கும் எனக் கீழ்க்காணும் நன்னூல் விதி கூறுகிறது. ”னலமுன் றனவும், ணளமுன் டணவும், ஆகும் தநக்கள் ஆயுங் காலே” (நன்னூல், 237) இவ்வித...

கூகுள் மேப்ஸ் - நல்லதொரு நண்பன்

  கடைசி வரை இதைப் படிப்பீர்களா என்பது தெரியவில்லை ஆனால் கடைசியில் ஒரு பன்ச் இருக்கிறது. கூகுள் மேப்ஸ்..... அன்றாட வாழ்வின் அங்கம்......  இதை நம்ப முடியாது என்ற குறைகளும் காமெடிகளும் தாண்டி நமக்குப் பேருதவி புரிந்து வருகிறது என்பது முற்றிலும் உண்மை.  கூகுள் மேப்ஸில் LOCAL GUIDE  என்ற ஒன்று உண்டு .கூகுள் மேப்ஸ் பயனீட்டாளர் ஒவ்வொருவருமே அதில் பங்களிக்க முடியும் .நாம் செல்லும் இடங்களில் உள்ள கடைகள் ,வணிக நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் ,மருத்துவமனைகள் சேவைத்தளங்கள், கல்வி நிறுவனங்கள் ,சுற்றுலாத்தலங்கள், வீடுகள், புதிய சாலைகள் உள்ளிட்ட எதையும் நாம் கூகுள் மேப்ஸில் சேர்க்கவோ, நீக்கவோ திருத்தவோ கூகுளுக்குப் பரிந்துரைக்க முடியும் . மேலும் இவ்வகையான இடங்களின் ஃபோட்டோக்கள் மற்றும் விடியோக்களையும் பதிவேற்ற முடியும்.  ரேட்டிங் மற்றும் ரிவ்யூசும் தர முடியும். இவை எல்லாவற்றுக்குமே கூகுள் நமக்கு பாயின்ட்ஸ் தருகிறது. பலவித BADGEகளும் தருகிறது . நாம்  பெறும் புள்ளிகளின் அடிப்படையில் லெவல் 1-இல் தொடங்கிப் 10 வரை செல்ல முடியும். இதனால் என்ன பயன் என்றால், நாம் பதிவேற்றும் ஃபோ...

கோயம்புத்தூர்ப் புத்தகத் திருவிழா -2024

  கோயம்புத்தூர்ப் புத்தகத் திருவிழா கோலாகலமாகத் தொடங்கியிருந்தது .வாங்க வேண்டிய நூல்களின் பட்டியலுடன் நுழைந்த போது, ஞாயிறு பிற்பகல் என்பதால் திருவிழா களை கட்டியிருந்தது. நுழைவு வாயிலிலேயே நல்லதொரு ஃபீல் கிடைத்தது. திருப்பூர் மாவட்டம் துத்தேரிபாளையம் அரசுப் பள்ளியிலிருந்து ஏறத்தாழ 30 மாணவ மாணவியரை ஆசிரியரும், நண்பருமான திரு .வெற்றிவேல் அவர்கள் அழைத்து வந்திருந்தார். வெளியேறிக் கொண்டிருந்த மாணவர்களின் கைகளில் சில புத்தகங்களும் ,பட்டியல்களும் இருந்தன. இந்தப் புள்ளியிலிருந்து அவர்களில் யாரேனும் வாசிப்புலகத்திற்குள் நுழையக் கூடும்.  இன்றைய உலகின் மிகப் பெரும் டிஜிட்டல் அரக்கர்களான ரீல்ஸ்க்கும் ஷார்ட்ஸ்க்கும் அடிமையாகிக் கொண்டிருக்கும் பதின்ம வயதினர் வாசிப்பின் பக்கம் திரும்புவதெல்லாம் மிகப் பெரும் அதிசய நிகழ்வாகத்தான் இருக்கும் .பெரியவர்களுமே அதற்குக் கட்டுண்டுதான் கிடக்கிறார்கள் .என்னைப் பொறுத்தவரையிலும் ரீல்ஸ்களும் ஷார்ட்ஸ்களும் மிகப்பெரிய ஸ்ட்ரெஸ் பஸ்டர்கள் என்றாலும்  ஒரு பத்துப் பதினைந்து நிமிடங்கள் எப்பொழுதாவது தேவைப்படும்போது பார்த்தால் மட்டும் .மற்றபடி அவற்றை ரெஃபரன்ஸ் ...

11 Rules Of Life , Don't Miss IT.

  சுய முன்னேற்ற நூல்கள் நிறையக் கிடைக்கின்றன.  எத்தனையோ பேரின் வாழ்வில் அவை நல்ல மாற்றங்களையும் கொடுத்துள்ளன. Maxwell Maltz  எழுதிய Psycho Cybernetis  , Shiv Khera வின் You can Win ஆகியவை  நான் பரிந்துரைக்கும் அட்டகாசமான நூல்கள் . பொதுவாக, தன் முன்னேற்ற நூல்கள் பெரும்பாலும் இரண்டு வகைகளில் இருக்கும்.  ஒருவகை, மோட்டிவேஷனல் ஸ்டோரீஸ் மூலம் நம்மை ஊக்கப்படுத்திச் செயல்படத் தூண்டுபவை.  மற்றொரு வகை நாம் பின்பற்ற வேண்டிய செயல்பாடுகளைப் படிப்படியாக விவரிப்பவை.  இவற்றுள் இரண்டாம் வகையைச் சேர்ந்ததுதான் அண்மையில்  வெளியான Chetan Bhagat எழுதிய  11 Rules Of Life  என்னும்   நூல் . Time இதழில் 100 Most Influential People In The World  என்ற பட்டியலில் இடம் பெற்றுள்ள Chetan  குறித்து அதிக அறிமுகம் வேண்டியதில்லை . அவரே சொல்லிக் கொள்வதைப் போல அவர் ஒன்றும் Best Author இல்லை என்றாலும் Best Selling Author .  நிறைய உயரங்கள் தொட்டவர்.  அவருடைய புனைவுகள் எல்லாமே  Unputdownable  வகையைச் சேர்ந்தவை . அவரது பத்து நாவல்களுமே முத...

விருத்தமும் விஜயலட்சுமி அம்மாவும்

 "சுழித்துக்கொண்டோடும் வெண்பாக்களும் நுரைத்துக் கொண்டோடும் விருத்தங்களும்" என்று ஓரிடத்தில் வைரமுத்து அவர்கள் கூறியிருப்பார். ஆசிரியப்பாவின் இனங்களுளொன்றான ஆசிரிய விருத்தம் என்பது கவிஞர்கள் பலருக்கும் பெருவிருப்பான, இனிமையான பாவினம்.  அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தில் ஆரம்பித்து எழுசீர்,எண்சீர் எனப் பன்னிரு சீர் வரையும் செல்லும். ஒவ்வொரு விருத்தமும் நான்கடிகளைக் கொண்டிருக்கும். ஒவ்வோரடியிலும் ஆறு,ஏழு,எட்டு என 12 வரை சீர்கள் அமைந்திருக்கும் . அடிகள் தோறும் இச்சீர்கள் ஒரே அளவில் அல்லது ஒரே வாய்பாட்டில் வந்திருக்கும்.  இயற்சீரும் வெண்சீரும் மட்டுமே வரும்.  முதலடியில் என்ன விதமான சீர்கள் வருகின்றனவோ அவையே முறை மாறாமல் அடுத்தடுத்த அடிகளிலும் வந்திருக்க வேண்டும் . நான்கடிகளிலும் ஒரே எதுகையும், அடிகளுக்குள் மோனையும் வந்திருக்க வேண்டும் . "கழிநெடில் நான்கு ஒத்திறுவது குறைவில் தொல்சீர் அகவல் விருத்தம்" என்பது ஆசிரியர் விருத்தத்துக்கான யாப்பருங்கலக் காரிகை தரும் இலக்கணம்.   இத்தகைய இனிமையான பாவினமான விருத்தம் பாடுவதில் வல்லவரான திருமதி சு .விஜயலட்சுமி அவ...

இரண்டு நிமிடங்களில் இதைத் தெரிந்து கொள்ளலாம்

  மெய்யெழுத்துகளின் மீது தமிழர்களுக்கு அப்படி என்ன வெறுப்பு எனத் தெரியவில்லை .வங்கி ஒன்றின் விளம்பரச் சிறு சுவரொட்டி ஒன்றை நகரில் ஆங்காங்கே பார்க்க முடிந்தது.  அவர்களது வங்கியில் இத்தனை சதவீதத்திலிருந்து Home Loan  ஆரம்பிக்கிறது என்பது விளம்பரத்தின் சாராம்சம்.  Home Loan  என்பதை அப்படியே தமிழாக்கி வீடு கடன் வசதி என அச்சடித்திருந்தார்கள் . இரண்டு ஆங்கிலச் சொற்களை   இணைக்கும் போது பெரும்பாலும் நேரடியாக அப்படியே இணைத்துக் கொள்ளலாம் . Home +Loan --Home loan.  அதையே வீடு +கடன் எனும் பொழுது வீட்டுக் கடன் என்றுதான் எழுத வேண்டும், எழுதவும் முடியும்.  அதிகப்படியாக ஒரு 'ட்' டும் ஒரு 'க்' கும் சேர்த்தால் வேலை முடிந்தது. இதைச் செய்யக் குற்றியலுகரப் புணர்ச்சி விதிகளை எல்லாம் கற்றுத் தேர்ந்திருக்க வேண்டியது இல்லை ....சும்மா சொல்லிப் பார்த்தாலே தெரிந்து விடும் ...  இரண்டையும் சேர்த்து வீடுகடன் எனச் சொல்லும்போது அங்கே ஏதோ முழுமை அடையவில்லை என்று.  எழுதும்போது வீடுகடன் என எழுதிவிட்டு படிக்கும்போது வீட்டுக் கடன் எனப் படிப்பவர்களைப் பார்த்தால் பரிதாபப்படத்...

கொஞ்சம் இதையும் தெரிந்து கொள்வோம்

 கீழடி அருங்காட்சியகத்துக்குச் சென்றிருந்தபோது அங்கு வந்திருந்த பார்வையாளர்களில் பேரனும் பாட்டியும் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்க நேர்ந்தது.  காட்சிப்படுத்தப்பட்டிருந்தவற்றைக் காட்டிப் பாட்டியிடம் இவையெல்லாம் எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்டவை எனப் பேரன் கேட்க, மிகப் பழமையானவை என அறிந்திருந்த பாட்டிக்கு அதனை எண்களால் சொல்ல முடியவில்லை.  அந்தக் கணத்தில் மிகப்பெரும் எண்ணாகத் தனக்கு மனதில் பட்டதை வைத்து, "இதெல்லாம் நூறு வருஷம் இருக்கும் ....!" என்றார்.  தூக்கி வாரிப் போட்டது எனக்கு....!  அண்மையில் நண்பர் ஒருவர் பேச்சினிடையே இந்தச் சேர, சோழ ,பாண்டியர்கள் எல்லாம் உண்மையிலேயே இருந்தவர்கள் தானே என்று கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டார்.  சேரன் செங்குட்டுவனின் தம்பி தான் சிலப்பதிகாரம் படைத்த இளங்கோவடிகள் எனப் பலரும் இன்றும் நம்புகின்றனர் . செங்குட்டுவனின் காலம் கிபி இரண்டாம் நூற்றாண்டு என நம்புபவர்களும் உண்டு .ஆனால் உண்மையில் சேரன் செங்குட்டுவனின் காலம் கிமு மூன்றாம் நூற்றாண்டு வாக்கில் இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது. பல்வேறு உலக நாகரிகங்களுக்கு மத்தியில் ...